Skip to content
SBS Tamil - SBS தமிழ் podcast artwork

PODCAST · news

SBS Tamil - SBS தமிழ்

by SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Oct 10, 2026 · Source feed

Episodes

  1. குயின்ஸ்லாந்து பெண் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்தியர் மேல்முறையீடு

    குயின்ஸ்லாந்தில் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்விந்தர் சிங், தனது குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  2. Are immigration cuts an economic solution or a political strategy? - ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்த அறிவிப்பும் தற்போதைய விவாதமும்!

    Australia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம்....

  3. நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்: சேமிப்பு வட்டி, வீட்டு விலை, நுகர்வோர் உரிமை

    அவுஸ்திரேலியாவில் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் ஆறு சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டு விலைகள் மற்றும் முதலீட்டுச் சந்தையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, தொலைபேசி, இணையம் மற்றும் சமூக ஊடகச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கான புதிய...

  4. இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (16 October 2026 - Friday)

  5. 2026 நோபல் பரிசுகள்: உலகை மாற்றிய சாதனையாளர்கள் யார்?

    நோபல் பரிசுகள் (2026) அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் உலக அளவில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரும், இலங்கைத் தமிழர்களின்…

    more
  6. இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 10 – 16, 2026)

    இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 10 – 16) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 10 – 16, 2026)

  7. யானைச் சாணத்தால் செய்யப்பட்ட பொருளுடன் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி

    இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு யானைச் சாணத்தால் செய்யப்பட்ட Fridge Magnets-ஐ பயணி ஒருவர் கொண்டுவந்தமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  8. Stroke-பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது?

    Stroke/பக்கவாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மருத்துவ அவசரநிலை. பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் மருத்துவர் சுமிதா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா...

  9. திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருது வாங்கிய திரைப்படம்

    திரைக்கு வருவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்ற திரைப்படமான “To Let" திரைப்படத்தின் இயக்குனர் செழியன் அவர்களுடன் ஒரு நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Interview with Chezhiyan, the director of "To Let" movie

  10. Payday Super: மூன்றே மாதங்களில் இரட்டிப்பான சூப்பர் கொடுப்பனவுகள்

    Superannuation ஓய்வூதியநிதியில் சேர வேண்டிய தொகை இப்போது சம்பளம் கொடுக்கப்படும் போதே செலுத்தப்படுகிறது. இந்த மாற்றம், ஓய்வூதிய சேமிப்பு மற்றும் செலுத்தத் தவறிய தொகைகளைக் கண்டறிவதில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  11. இன்றைய செய்திகள்: 15 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 15/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  12. எக்கிட்னா: ஆஸ்திரேலியாவின் முள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள்

    எக்கிட்னா ஆஸ்திரேலியாவின் மிகவும் வித்தியாசமான உயிரினங்களில் ஒன்று. அதன் அபூர்வமான வாழ்க்கை முறை மற்றும் தனிச்சிறப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும்...

  13. தற்காப்புக்காக pepper spray பயன்படுத்த நிரந்தர அனுமதி வழங்கும் ஆஸ்திரேலியப் பிராந்தியம்!

    Northern Territoryஇல் தற்காப்புக்காக Pepper Spray பயன்படுத்துவதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast

  14. குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன?

    இளம் வயதிலேயே கருமுட்டைகளை அல்லது விந்தணுக்களை உறைநிலையில் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமா, யாரெல்லாம் இதனைப் பரிசீலிக்கலாம், இதன் நன்மைகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மருத்துவ வாய்ப்புகள் குறித்து பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த...

  15. ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன?

    ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்....

  16. வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்?

    சூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும்...

  17. இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  18. சுமார் 43 வருடங்களாக நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்

    இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற ஜூலை கலவரத்திற்கு அரசிடம் நீதிவிசாரணையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை...

  19. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி முன்பதிவு அவசியம்

    விக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles பாறைகளைக் காண இனி முன்பதிவு அவசியம்; நுழைவுக் கட்டணமும் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  20. நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களில் புதிய மாற்றம்

    நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  21. இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  22. How laws are made, and how they affect you | How Australia Works - சட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, உங்களை எவ்வாறு பாதிக்கின்றன|ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுகிறது?

    How are laws made in Australia? Through Wurundjeri Elder Uncle Dave Wandin’s story of the Birrarung, also known as the Yarra River, learn how an idea becomes a bill, passes through Victoria’s parliament and receives royal assent, the formal approval that makes it law. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள்...

  23. Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?

    Money Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money...

  24. இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

    இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி; ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு; இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார்...

  25. இன்றைய செய்திகள்: 12 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

  26. ஏன் புதுடெல்லியில் மாணவர் போராட்டம் மீண்டும் வலுக்கிறது? பின்னணி என்ன?

    இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast

  27. இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)

    ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

  28. உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு

    2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for...

  29. Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்

    Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய…

    more
  30. பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா

    சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்...

  31. உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர்

    ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில்…

    more
  32. இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  33. இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 03 – 09, 2026)

    இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)

  34. ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்கள்!

    2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்களின் பட்டியலை Australian Financial Review வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  35. தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி?

    நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா...

  36. உலுரு: இயற்கை செதுக்கிய ஆஸ்திரேலியாவின் புனித அதிசயம்

    ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் உலுரு, ஒரு பிரமாண்டமான பாறை மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த இயற்கை அதிசயம், இந்த நாட்டின் பூர்வீக மக்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. உலுரு ஏன் அவர்களுக்கு புனிதமானது? உலகம் முழுவதும் இருந்து...

  37. போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்?

    அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு

  38. சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் - யார் கையில்?

    இந்நாட்டில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம், அடுத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையலாம். நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. அத்துடன் இது குறித்து Labor கட்சி,...

  39. திறன்சார் குடியேற்றம்: யார் என்ன வாக்குறுதி தருகிறார்கள்?

    நம் நாட்டின் திறன்சார் குடியேற்றம் பற்றிய அரசியல் விவாதம் இந்த வாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. கடந்த மாதம் அரசும், One Nation கட்சியும் தம் திட்டங்களை அறிவித்திருந்தன. இது குறித்த...

  40. இன்றைய செய்திகள்: 08 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  41. AI-யிடம் மனநல ஆலோசனை பெறுகிறீர்களா?

    அமெரிக்காவில் நீடித்திருக்கும் இளைஞர் மனநல நெருக்கடியுடன், AI chatbots எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் விரைவான விரிவாக்கமும் ஒருங்கே நிகழ்ந்துள்ளது. இது, மனநல ஆலோசனைக்காக இளைஞர்கள் எந்த அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. RAND என்ற ஆய்வு நிறுவனம்,...

  42. இன்றைய செய்திகள்: 07 ஒக்டோபர் 2026, புதன்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  43. தமிழ் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களில் ஏன் சில நோய்கள் அதிகம்? என்ன செய்யலாம்?

    NSW Multicultural Health Week ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தூதராக செயல்பட்டவர் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன். தெற்காசிய சமூகங்களில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் அவர், தமிழ் மக்கள் உள்ளிட்ட...

  44. கைதுகள் தொடரும் நிலையில் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

    இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை மீனவர் அமைப்புகள் கண்டித்திருக்கும் நிலையில், இலங்கையில் தொடர்ந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை...

  45. குடியேற்றத்தில் வரலாறு காணாத குறைப்பு: லிபரல்-நேஷனல் கூட்டணி அறிவிப்பு

    குடியேற்றம் தொடர்பான தனது புதிய கொள்கையை Coalition- எதிர்கட்சி கூட்டணி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ள நிகர வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை விட சுமார் 60 ஆயிரம் குறைவாக, அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை மட்டுமே அனுமதிப்பதை இலக்காகக் கொண்டுள்ள புதிய கொள்கையை Coalition...

  46. பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்

    அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  47. இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

  48. Why power is split, and how that protects you | How Australia Works - அதிகாரம் ஏன் பிரிக்கப்படுகிறது, அது உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது|ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது?

    After receiving a fine for not wearing his motorbike helmet correctly, Hugo decides to have the matter heard in court. His story explains how Parliament, government and the courts have different roles, and how some official decisions can be questioned. - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைச் சரியாக...

  49. மெல்பனின் சில சாலைகளில் வேக வரம்பு 30km/h ஆக குறைக்கப்படுகிறது

    மெல்பனின் சில பகுதிகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு குறைக்கப்படும் புதிய சோதனைத் திட்டம் தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  50. 12 உயிர்களைக் காவுகொண்ட ஆஸ்திரேலியாவின் பயங்கர தொடர்கொலை: ஏன் இன்று மீண்டும் பேசப்படுகிறது?

    ஆஸ்திரேலியாவின் குற்ற வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவங்களில் ஒன்று ஸ்னோடவுன் பேரல் கொலைகள். 12 பேரின் உயிரைப் பறித்த இந்தத் தொடர் கொலைகள் பல ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வ்லாசாக்கிஸ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு...

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

HOSTED BY

SBS

Produced by SBS Audio

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does SBS Tamil - SBS தமிழ் have?

SBS Tamil - SBS தமிழ் currently has 1000 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is SBS Tamil - SBS தமிழ் about?

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

How often does SBS Tamil - SBS தமிழ் release new episodes?

SBS Tamil - SBS தமிழ் releases new episodes frequently with a large back catalog of 1000 episodes. Check the episode list for recent publication dates.

Where can I listen to SBS Tamil - SBS தமிழ்?

You can listen to SBS Tamil - SBS தமிழ் on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts SBS Tamil - SBS தமிழ்?

SBS Tamil - SBS தமிழ் is created and hosted by SBS.
URL copied to clipboard!