விஷய கர்மாக்கள் ஸ்ரேயோ கர்மாக்கள்

EPISODE · Jan 31, 2022 · 2 MIN

விஷய கர்மாக்கள் ஸ்ரேயோ கர்மாக்கள்

from saitechinfo · host saitechinfo

மனிதர்கள் விழிப்பிலிருந்து உறங்கும்வரை, அதாவது, பிறப்பிலிருந்து இறப்புவரை, ஏதோ ஒரு செயலை (கர்மா) ஆற்றிக்கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எவராயினும் இதனைத் தவிர்க்க இயலாது! ஆனால், எப்படிப்பட்ட கர்மாவைச் செய்வதில் ஈடுபடவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பது இரண்டு மார்க்கங்களே: (1) பந்தத்தை ஏற்படுத்தும் புலன்களால் ஆற்றப்படும் கர்மாக்கள் (விஷய கர்மாக்கள்) (2) பந்தவிமோசனம் தரும் கர்மாக்கள் (ஸ்ரேயோ கர்மாக்கள்). ஆனால், விஷயகர்மாக்கள் விபரீதமாகப் பெருகி, அதன் விளைவாக உலகில் துக்கமும், குழப்பமும் அதிகரித்துவிட்டன. அவற்றின் மூலம் எந்த சுக-சாந்தியையும் பெற முடியாது. மாறாக, ஸ்ரேயோ (பந்தவிமோசனம் தரும்) கர்மாக்கள், ஒவ்வொரு செயலின் மூலம் ஸ்ரேயஸை, அதாவது மங்களத்தை அளிக்கின்றன. இவை ஆத்மானந்தத்தை அளிப்பவையே அன்றி, புறவுலகியலான சந்தோஷங்களை அல்ல! இவை வெளிப்புற கர்மாக்களாக இருந்தாலும், இவை அனைத்தும் அகத்தை நோக்கியே ஈர்க்கப்பட்டிருக்கும். இதுவே சரியான மார்க்கம், சத்தியமான மார்க்கம்! - தியானவாஹினி, அத்தியாயம்-1

NOW PLAYING

விஷய கர்மாக்கள் ஸ்ரேயோ கர்மாக்கள்

0:00 2:44

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

URL copied to clipboard!