அ03. நன்னெறி பகுதி
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
அன்பு தமிழ்ச் செல்வங்களே! இப்புவிக்குப் புகழ்சேர்க்க வந்துள்ள பூந்தளிர்களே! அன்பு வணக்கங்கள்! தன்னலத்தைத் தள்ளிவைத்து, தியாக உணர்வுதனை தம் நெஞ்சில் நிறுத்தி, மாணவச் செல்வங்களை இவ்வுலகுக்கு நல் சான்றோராகப் படைக்கப் பாடுபட்ட / பாடுபடும் நம் ஆசிரியப் பெருமக்களை மனதில் வைத்து, பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இந்தியாவில், மாணவச் சமுதாயத்தை மாண்புறச் செய்யும்படி, தனது சீலமிக்கப் பண்புகளாலும், சீரிய பணியாலும் சேவை செய்திட்ட, தத்துவ மேதை, ஐயா டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் (செப்டம்பர்-5) ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே, அந்த ஆசிரியர்களின் அரிய அர்ப்பணிப்பை மேன்மைப் படுத்தி, நெறிநூல் ஒன்றில், பாடலொன்று பாடப்பட்டுள்ளது! அது என்னப் பாடல் என்று பார்ப்பாமோ!
Embed this episode
No transcript yet.