PODCAST · arts
நெறிநூல் உரை
by Thamizharasan Samikannu
குழந்தைகளுக்கான நன்னெறி இலக்கணங்களை தமிழ் இலக்கணங்கள் மூலமாக கற்றுத்தரும் பகுதி.
Episodes
-
ஆ17. நன்னெறி பகுதி- 140
வாழ்க்கையில் நாம் எப்பொருட்களைப் பெற்றிருந்தாலும், நாம் மண்ணில் மீண்டும் பிறவாமல் இருக்கும் மெய்ப்பொருளைக் காண்பதே மேன்மையானது என்பதே! இதே கருத்தை வலியுறுத்தி நாலடியார் பாடல் ஒன்றையும் இன்றிங்குப் பார்ப்போமா! அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து) உலகநூல் ஓதுவது எல்லாம் - கலகல கூஉம் துணை அல்லால்...
-
ஆ16. நன்னெறி பகுதி- 131
‘குஞ்சி அழகும், கொடுந் தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும், அழகு அல்ல. நெஞ்சத்து, 'நல்லம் யாம்" என்னும் நடுவு நிலைமையால், கல்வி அழகே அழகு’(நாலடி-131) பொருள்: தலைமுடியின் அழகும்;உடலை வளைத்து உடுத்தப்படும் ஆடையின் கரையழகும்; பெண்கள் பூசிக்கொள்ளும் மஞ்சளின் அழகும் மக்களுக்கு அழகு இல்லை; மாறாக, நாம்...
-
ஆ15. நன்னெறி பகுதி- 8
ஒருவர்க்குக் கல்வி கண்போன்றது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அதே சமயத்தில், அக்கண் போன்ற கல்வி, நம் கையில் கிடைத்ததும் அதை மறந்து மனம் போன போக்கில் நடத்தலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள், இல்லையா! அதைத்தான், அதே நீதி நெறி விளக்கத்திலிருந்து மற்றமொரு பாடலின் மூலமாக...
-
ஆ14. நன்னெறி பகுதி- 2
நல்லொழுக்கம், நிலையான செல்வம், உண்மையான இன்பம் ஆகிய மூன்றோடும், வாழ்வின் எல்லையில் அடைய வேண்டிய வீடுபேற்றையும் தரக்கூடியது; உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்த வல்லது; அதுவல்லாமல்,நேரக்கூடிய வருத்தமொன்று நேர்ந்த பொழுதும் உரிய கைகொடுத்து உதவிசெய்யத்தக்கது; ஆகவே, அப்படி அவசியமான எல்லாச்...
-
ஆ01. நன்னெறி பகுதி- 37
மரம் வளர்த்து உலகப் பசுமையைத் தழைக்கச் செய்வது போல், பைந்தமிழ் வளர்த்து செந்தமிழைத் தழைக்கச் செய்யும் எங்கள் அருந்தமிழ்ச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளோடு அன்புகனிந்த வணக்கங்கள்! மனிதன் இயல்பாகத் தனித்து வாழ இயலாது; ஒரு சமூகமாய், ஒருவருக்கொருவர் பழகி,...
-
அ11. நன்னெறி பகுதி-5
பாறையில் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் எறும்புகளும்; கூரையில் அமர்ந்து கூவிக் கூவி அழைக்கும் பறவைகளும் பார்க்கப் பார்க்க ஆனந்தம்தான்! எனினும் என்னுரையின் மூலமாக உங்களைக் கண்டிருப்பதே பேரானந்தம் என்பேன்! ஆகவே, அவ்வின்ப வாய்ப்பை வழங்கும் உங்கள் அனைவர்க்கும் என் அன்பு வணக்கங்கள்! நமது அய்யன்...
-
அ10. நன்னெறி பகுதி-16
பொங்கும் இன்பம், உள்ளம் எங்கும் நிறைந்து, இல்லம் முழுதும் என்றும் வழிந்திருக்க, இப்பொங்கல் திருநாளில் உங்கள் அனைவரையும் வாழ்த்தி, அன்பான வணக்கங்களைத் தெரிவித்து, எனது உரையைத் துவங்குகின்றேன்! அறுவடை தரும் நிலத்தைப் போலவே, வாழ்க்கைக்குத் தேவையான, நல்ல அறுவடை தரக்கூடிய மற்றொரு விளைநிலமும் நம்மிடையே...
-
அ09. நன்னெறி பகுதி-36
கன்னல் மொழி பேசி, கருத்தாய் உலா வந்து- தமிழ் செந்நெல் கதிர் விளையச் சிங்கார நடமிடும் செழுமிகு நாற்றெனவே வடிவு கூட்டி நெஞ்சார மகிழுறத் திகழும் நனிமிகுச் செல்வங்களே,அனைவர்க்கும் எங்களது அன்பான வணக்கங்கள்! இவ்வுலகில், ஒருவர்க்கு ஒருவர் சார்ந்து இல்லாது இருப்பது இயல்பில் இல்லாதது ஒன்று. உலகத்தின்…
more -
அ08. நன்னெறி பகுதி-17
கொடியில், குலை குலையாகக் காய்த்திருக்கும் திராட்சைகள் அழகு! எங்கள் பைந்தமிழ் மடியில், அலை அலையாக வந்தமர்ந்து தமிழ் வாசிக்கும் மழலைகள், அதைவிட அழகு! அந்த அழகுப் பிள்ளைகளாகிய உங்களுக்கு எங்கள் அன்பான வணக்கங்கள்! கடந்த உரையில், 'அடிமுதல் நுனிவரை தன்னையே தரும் வாழை போல் பிறருக்கு உதவும் வகையில் நாம்...
-
அ07. நன்னெறி பகுதி-28
மின்மினிகளாய்; வண்ணத் தமிழின் பொன்மணிகளாய்; எங்கள் பைந்தமிழ் இதழின் கண்மணிகளாய்த் திகழும் கனிமிகுப் பிள்ளைகளே, உங்களுக்கு எங்களின் அன்புகலந்த வணக்கங்கள்! நமக்கு எது கடினமோ, அது சான்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் மிக எளிது! அதனால்தான், அவர்கள் என்றும் பெரியவர்களாகவே இருக்க முடிகின்றது! காரணம்…
more -
அ06. நன்னெறி பகுதி-10
செக்கச் சிவந்த அந்தி வானம் போல் அழகை மொத்தமாய் குவித்து வைத்திருக்கும் இனிய குழந்தைச் செல்வங்களே! புத்தம் புதிய புலர்காலை போல் புத்துணர்ச்சிப் பொங்கப் புதுமை பல படைக்கக் காத்திருக்கும் மழலைக் கலைக் கண்மணிகளே! உங்கள் அனைவர்க்கும் எங்கள் அன்பார்ந்த வணக்கங்கள்! சென்ற முறை 'கைம்மாறு கருதாத உதவியினை...
-
அ05. நன்னெறி பகுதி-103
நாளைய தமிழுலகின், நம்பிக்கை நட்சத்திரங்களாய் மலர இருக்கும் மரகத ஒளிவீசும் தண்டமிழ்த் தளிர்களே! தழைத்தோங்கி நனிப்புகழ் கூட்டும், இளவேனில் மழலை எழில் கூட்டங்களே! உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கலந்த வணக்கங்கள்! அன்பாய் இருத்தல், பெற்றோரைப் பேணுதல், ஆசிரியர்களை மதித்தல் நல்லொழுக்கம் கடைப்பிடித்தல்...
-
அ04. நன்னெறி பகுதி
வண்ணத்துப் பூச்சிகளின் மிளிர் வண்ணத்தை எடுத்து, தமது அழகுமிகு எண்ணத்தை எழில் ஓவியமாக்கும், பைந்தமிழ் வாசகச் செல்வங்களே, அனைவர்க்கும் அன்பு வணக்கங்கள்! ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதுபோல், தமது உள்ளத்தை நல்லொழுக்கமெனும் ஆடை கொண்டு அணியாத மனிதனும் அரை மனிதனே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான்...
-
அ03. நன்னெறி பகுதி
அன்பு தமிழ்ச் செல்வங்களே! இப்புவிக்குப் புகழ்சேர்க்க வந்துள்ள பூந்தளிர்களே! அன்பு வணக்கங்கள்! தன்னலத்தைத் தள்ளிவைத்து, தியாக உணர்வுதனை தம் நெஞ்சில் நிறுத்தி, மாணவச் செல்வங்களை இவ்வுலகுக்கு நல் சான்றோராகப் படைக்கப் பாடுபட்ட / பாடுபடும் நம் ஆசிரியப் பெருமக்களை மனதில் வைத்து, பல்வேறு நாடுகளில்...
-
அ02. நன்னெறி
தும்பைப்பூ தூய மனங்கொண்ட மழலைப் பூஞ்சிட்டுக்களே! அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கும், வண்ணமிகு மொட்டுக்களே! வணக்கம்! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அவ்வையின் பொன்னான மொழியை அறிந்திருப்பீர்கள்! அப்பொன்னான மொழிக்கு ஏற்றாற்போல், நீங்கள் அப்பா அம்மாவை துதித்து வருகிறீர்கள் என்பது அறிந்த ஒன்று!...
-
அ01. நன்னெறி
நன்றாய்த் தட்டி தட்டிச் செய்யப்பட்ட, குட்டி குட்டி நிலாக்களே! அன்பு வணக்கம்! நம் அய்யன் வள்ளுவன்கூட அன்பு என்பதனை வலியுறுத்தி, அகத்திலே அன்பு என்ற ஓர் உறுப்பு இல்லையேல், புறத்தில் உள்ள உறுப்புகளால் என்ன பயன் என்ற வினாவை வினவியிருக்கிறார்கள்! ஆதலின், நம்மில் உயர்வு தாழ்வு பாராமல், நாம்...
-
அ12. நன்னெறி பகுதி-17
கடந்த உரையில், அறநூல் கேட்டதற்குத் தகுந்தவர் யாரென்பதும்; அதற்கு முந்தைய உரையில், நல்லற வாழ்வினை இளமையிலேயே மேற்கொள்ளுதல் உயர்ந்தது என்பதையும் அறிந்தீர்கள், அல்லவா! இம்மாத உரையாக எதைப் பார்ப்போம் என்றால், 'ஏன் இளமையிலேயே, அறவாழ்வை மேற்கொள்ள வேண்டும்? அதற்கான காரணம் என்ன? ஏன், பின்னர் செய்தல்...
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...