அ06. நன்னெறி பகுதி-10
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
செக்கச் சிவந்த அந்தி வானம் போல் அழகை மொத்தமாய் குவித்து வைத்திருக்கும் இனிய குழந்தைச் செல்வங்களே! புத்தம் புதிய புலர்காலை போல் புத்துணர்ச்சிப் பொங்கப் புதுமை பல படைக்கக் காத்திருக்கும் மழலைக் கலைக் கண்மணிகளே! உங்கள் அனைவர்க்கும் எங்கள் அன்பார்ந்த வணக்கங்கள்! சென்ற முறை 'கைம்மாறு கருதாத உதவியினை நாம் ஒருவர்க்குச் செய்தல் வேண்டும்' என்ற பெரியோர்களின் கூற்றைக் கண்டோம், இல்லையா! மீண்டும் அதே வரிசையில், பெரியவர், சான்றோர், உயர்ந்தவர், மேலோர் உதவி செய்யும் மனப்பான்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று அறிந்து கொள்ளும் வகையில் மேலும் ஒரு பாடலைத் தரலாம் என வந்திருக்கின்றேன்! அந்த அழகிய பொருள்மிக்க பாடல்
Embed this episode
No transcript yet.