அ11. நன்னெறி பகுதி-5
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
பாறையில் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் எறும்புகளும்; கூரையில் அமர்ந்து கூவிக் கூவி அழைக்கும் பறவைகளும் பார்க்கப் பார்க்க ஆனந்தம்தான்! எனினும் என்னுரையின் மூலமாக உங்களைக் கண்டிருப்பதே பேரானந்தம் என்பேன்! ஆகவே, அவ்வின்ப வாய்ப்பை வழங்கும் உங்கள் அனைவர்க்கும் என் அன்பு வணக்கங்கள்! நமது அய்யன் வள்ளுவன்கூட, கற்பதை நன்றாக கற்றபின், அதற்கு இணங்க நிற்றல் அவசியம் என்றுதானே அறிவுரையும் தந்திருக்கின்றார்கள்! எனவே, அவ்வாறு நடந்தாலே கற்றவர் என்ற தகுதிக்கு ஆளாகின்றோம், இல்லையா!அதன்படி, நீங்களும் கற்றது போலவும்;பெரியோர், பெற்றோர், உற்றோர், உரியோர் கூறியவாறு நடப்பதாலும் நல்லவர்களே; அப்படியிருக்க, கற்றவர் என்ற பொருளுக்கு நேரடித் தகுதியில் ஆளாகின்றீர்கள்! அதைத்தான், இன்று நாம் அறநெறிச்சாரத்தில், ஓர் அழகான பாடல் மூலம் வித்தியாசமான விளக்கத்தைக் காணப்போகின்றோம்
Embed this episode
No transcript yet.