ஆ01. நன்னெறி பகுதி- 37
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
மரம் வளர்த்து உலகப் பசுமையைத் தழைக்கச் செய்வது போல், பைந்தமிழ் வளர்த்து செந்தமிழைத் தழைக்கச் செய்யும் எங்கள் அருந்தமிழ்ச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளோடு அன்புகனிந்த வணக்கங்கள்! மனிதன் இயல்பாகத் தனித்து வாழ இயலாது; ஒரு சமூகமாய், ஒருவருக்கொருவர் பழகி, அன்பு பாராட்டி சுமூகமாய் மகிழ்வோடு வாழ்ந்திருத்தல் வேண்டும்! ஆகவே, அப்படியோர் வாழ்க்கை அமைதல் வேண்டுமானால், இம்மண்ணில், நல்ல பண்பு, ஒழுக்கம், ஒவ்வொருவரிடத்திலும் அமைந்திருத்தல் வேண்டும் என்பது இன்றியமையாதது, கண்மணிகளே, கற்பக தரு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதாவது, பனை, முருங்கை போன்ற மரங்களை கற்பக தரு (கற்பக விருட்சம்) என்று நம் முன்னோர்களால் அழைக்கப்பட்டாலும், நாம் கேட்பதையெல்லாம் தரக் கூடிய கற்பகத் தரு என்றொரு மரம் தேவலோகத்தில் இருப்பதாக கூறப்படுவதுண்டு. ஆனால், நம் கவிஞர் ஐயா, முனைப்பாடியார் வேறு ஒன்றை கற்பக மரமாகக் குறிப்பிடுகின்றார்! அது என்னவென்று பார்ப்போமா
Embed this episode
No transcript yet.