சினிமா செய்திகள் (26-09-2026)
from Maalaimalar Tamil
நடிகர் தனுஷ் தனது மகன்கள், பெற்றோர் மற்றும் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார். அங்கு அவரைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக்கொண்டனர். ********** நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் (SK27) படப்பிடிப்பு பூஜை மற்றும் போஸ்டர் வெளியீட்டுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ********** பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 3-வது வார முடிவில், மகாநதி சீரியல் புகழ் லட்சுமி பிரியா எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். லட்சுமி பிரியாவின் திடீர் வெளியேற்றத்தால் அதிர்ச்சியடைந்த ஷதிகா, தன்யா மற்றும் முத்தழகி ஆகியோர் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். ******* 'டிராகன்-2' உருவாக்கத்தில் இருப்பதாகவும், அதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறி சில போஸ்டர்களுடன் தகவல்கள் பரவின. அந்த போஸ்டர்கள் முற்றிலும் போலியானது என்றும், படக்குழு சார்பில் எந்த அறிவிப்போ அல்லது போஸ்டரோ வெளியிடப்படவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Embed this episode
No transcript yet.