Skip to content
கம்ப இராமாயணம் 524 episode artwork

Oct 7, 2023 6 min

கம்ப இராமாயணம் 524

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்... கும்பகருணன் வீடணனிடம் பேசுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் 524 நாள் - ஐந்நூற்று இருபத்து நான்காவது நாள். ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே உய்கில்லைஎன்னின் மற்று இவ் அரக்கராய் உள்ளோர் எல்லாம் எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரைக் காட்டாய். விளக்கம் - ஐயனே! அயோத்திக்கு வேந்தன் ஆகிய இராமனுக்கு அடைக்கலப் பொருள் ஆகி நீ அங்கு உயிர் உய்ந்து வாழாய் ஆயின் இந்த அரக்கர்களாய் உள்ள நாங்கள் எல்லாம் இராமன் எய்யும் அம்பு மழையாலே முற்றிலும் இறந்து பாழாகிப் போனால் கையினால் எள்ளொடு கூடிய நீரை இறந்தவர் பொருட்டு கொடுத்து நீர்க் கடன் நிறைவேற்றுவார் யாவர் உளர் எனக் காட்டாய்... கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்ப இராமாயணம் 524

0:00 6:06

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 7, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.