கம்ப இராமாயணம் 525
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. வீடணன் கும்பகருணனிடம் எடுத்து கூறல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 525 நாள் - ஐந்நூற்று இருபத்தைந்தாவது நாள். போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். விளக்கம் - ஐயனே! நீதியையும் அறத்தையும் பற்றி நிற்பவனே போரில் உயிர் தப்பிப் போதல் மிக அரிதாகும் அவ்வாறு தப்பிப் போனால் புகலிடம் என்று சொல்ல வேறு இடம் இல்லை, விரைவாக சாவதோ உறுதி ஆதலால் உள்ள உயிரினை வீணாக போக்கி என்ன பயன் வேத நூல்களில் கூறிய முறைமைக்கு தகுந்த வாறு நல்லொழுக்கத்தையே உறுதியாக கடைபிடிக்க வேண்டும்... கு. பாஸ்கர்..... அபுதாபி
Embed this episode
No transcript yet.