கம்ப இராமாயணம் 527
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... வீடணன் கும்பகருணனிடம் எடுத்துக் கூறல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 527 நாள் - ஐந்நூற்று இருபத்தேழாவது நாள். வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான் காதலால் என்மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே ஆதலால் அவனைக் காண அறத்தொடும் ஐய போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்... விளக்கம் -வேதங்கள் துதிக்கும் தலைவனாகிய இராமனே உன்மீது கொண்டுள்ள அருளால் உன்னை வேண்டி அழைத்து வருமாறு என்னை அனுப்பினான் அதற்கு காரணம் அவன் என்மேல் சிறப்பாக கொண்டுள்ள காதலாகிய திருவருளாகும், செய்யத் தக்க காரியமும் அதுவே ஆகும் ஆகவே அறத்தில் இருந்து மாறுபடாமல் நீயே அவ்விராமனைக் காண்பதற்காக வருவாய் என்று கூறிப் அக்கும்பகருணனது அழகிய திருவடி இரண்டும் தலைமேல் பூண்டான்... கு. பாஸ்கர்..... அபுதாபி
Embed this episode
No transcript yet.