கம்ப இராமாயணம் 528
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. கும்பகருணன் வீடணனிடம் மறுத்து பேசுதல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 528 நாள் - ஐந்நூற்று இருபத்தெட்டாவது நாள். நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன் தார்க் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி ஆகின் கார்க் கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி. விளக்கம் - மார்பில் மாலையணிந்த அழகிய உடம்பினை உடைய மைந்தனே என்னை நீண்ட நாள் அருமையாக வளர்த்துப் இன்று தன் கையாலேயே போர்க் கோலம் பூணுவித்து போர்க்குச் சென்று வா என விட்ட இராவணனுக்காக போரில் என்னுயிரை கொடுக்காமல் நீரில் எழுதிய கோலத்தைப் போல் விரைந்து அழியும் செல்வ வாழ்க்கையை விரும்பி அந்த இராமனிடம் போய் சேரமாட்டேன் என் துன்பத்தைப் போக்க விரும்பினால் காள மேகம் போல் கரிய அழகிய திருமேனியுடைய இராமனை விரைவில் சென்றடைவாய்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.