கம்ப இராமாயணம் 532
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. கும்பகருணன் அங்கதனிடம் பேசுதல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் 532 நாள் - ஐந்நூற்று முப்பத்திரண்டாவது நாள். உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப் பந்தனைப் பகையைச் செற்றுக் காட்டலை என்னின் பாரோர் நிந்தனை நின்னைச் செய்வர் நல்லது நினைந்தாய் நேரே வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார்?. விளக்கம் - உன் தந்தையை ஓர் அம்பினால் மறைந்திருந்து உயிரைப் போக்கி உதவி செய்தவனாகிய இராமனுக்கு கட்டாக உள்ள பகையை அழித்துக் கொடுக்காமல் போவாய் என்றால் உன்னை உலகில் உள்ளவர்கள் நிந்தனை செய்வார்கள், நல்ல செயலையே செய்ய கருதினாய், வீரராய் குற்றம் அற்றவர் உனக்கு நேராக வந்து வணக்கம் செய்வார்கள் அல்லவா. கு. பாஸ்கர்... அபுதாபி
Embed this episode
No transcript yet.