கம்ப இராமாயணம் 533
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... இலக்குவன் வில் ஆண்மையைக் கும்பகருணன் வியத்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் 533 நாள் - ஐந்நூற்று முப்பத்து மூன்றாவது நாள். செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின் ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான்.. விளக்கம் - போர்க் களத்தில் இறந்தவர்களது மிகுதியையும், இலக்குவன் போரில் செய்த கட்டமைந்த வில்லாண்மையையும், கண்ணால் கண்ட புலத்தியனது வழித் தோன்றலாகிய கும்பகருணன் முப்புரங்களையும் அழித்த சிவபிரானும் போரில் ஒப்பற்ற வில்லாளர் என்று பலமுறை எடுத்துக் கூறினான்... கு. பாஸ்கர்... அபுதாபி
Embed this episode
No transcript yet.