கம்பராமாயணம். 535
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. சுக்ரீவன் மேல் கும்பகருணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 535 நாள் - ஐந்நூற்று முப்பத்தைந்தாவது நாள். சித்திர வன முலைச் சீதை செவ்வியால் முத்தனார், மிதிலை ஊர், அறிவு முற்றிய பித்தன் வெஞ் சிலையினை இறுத்த பேர் ஒலி ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே. விளக்கம் - சூலப்படை அனுமனால் முறிக்கப்பட்ட போது தோன்றிய ஓசை தொய்யிற் கோலம் எழுதிய முலைகளையுடைய சீதையினது அழகால் மிதிலையில் முத்தி உலகுக்கு உரிய மாலின் திருவவதாரமான இராமபிரான் அறிவு நிரம்பிய பித்தனென்ற பேர் கொண்ட சிவபிரானது கொடிய வில்லினை முறித்த போது தோன்றிய பேரோசையை ஒத்து இருந்தது... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.