கம்பராமாயணம் 536
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. கும்பகருணன் அனுமனை போருக்கு அறைகூவ அனுமன் மறுத்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 536 நாள் - ஐந்நூற்று முப்பத்தாறாவது நாள். என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர் சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும் முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான். விளக்கம் - இடையில் நிறுத்திய போரை மேலும் தொடர்ந்து என்னோடு செய்வாய் ஆனால் யான் போரை நீ சொன்ன முறைப்படி புரிவேன் என்று கும்பகருணன் சொன்ன அளவிலே முன்பு இனி உன்னோடு எதிர்க்க மாட்டேன் என்று போரை முடித்த பிறகு மீண்டும் போரிடுவது சொன்ன சொல் தவறுவது ஆகும் என்று கூறி இடத்தை விட்டு அப்பால் போயினான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.