கம்பராமாயணம் 537
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. சுக்ரீவனை கும்பகருணன் தூக்கிக் கொண்டு போதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் 537 நாள் - ஐந்நூற்று முப்பத்தேழாவது நாள். புழுங்கிய வெஞ் சினத்து அரக்கன் போகுவான் அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான் எழும் கதிர் இரவிதன் புதல்வன் எண்ணுற விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான். விளக்கம் - மனம் புழுங்குவதற்கு காரணமான கொடிய சினத்தை உடைய கும்பகருணன் சுக்கிரீவனை தூக்கிக் போபவன் வருந்துதல் இல்லாத கிரகத் தன்மையுடைய இராகு என்னும் பாம்பு போல் ஆயினான், கதிர் விடுகின்ற சூரியன் மகனாகிய சுக்கிரீவன் கண்டார் எண்ணுமாறு இராகுவால் விழுங்கப்பட்ட மதி போல மெலிவுற்று தோன்றினான்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.