கம்பராமாயணம் 538
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... கும்பகருணன் இராமனை இடித்துரைத்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 538 நாள் - ஐந்நூற்று முப்பத்தெட்டாவது நாள். ஏதி வெந் திறலினோய் இமைப்பிலோர் எதிர் பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி கோதை வெஞ் சிலையினால் கோடி வீடுஎனின் சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான்.. விளக்கம் - படைக்கலத்தால் செய்யும் போரில் கொடிய திறமை வாய்ந்தவனே தேவர்கள் முன்னிலையில் மனம் கலங்கிய குரல்காகிய சுக்கிரீவனை யான் கட்டிய கைப்பணிப்பை கட்டமைந்த கொடிய வில்லினால் விடுவித்து விட்டால் சீதையும் சிறையில் இருந்து விடுபடுவாள் என்று கும்பகருணன் கூறினான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.