கம்பராமாயணம் 540
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. கும்பகருணன் வாட்போர் புரிதல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 540 நாள் - ஐந்நூற்று நாற்பதாவது நாள். ஏசியுற்று எழும் விசும்பினரைக் பார்க்கும் தன் நாசியைப் பார்க்கும் முன் நடந்த நாளுடை வாசியைப் பார்க்கும் இம் மண்ணைப் பார்க்குமால் சீ சீ உற்றது எனத் தீயும் நெஞ்சினான்.. விளக்கம் - தனக்கு நேர்ந்தது சீ சீ என்று சொல்லி வேகின்ற நெஞ்சை உடைய கும்பகருணன் தன்னை ஏசிக் கொண்டு எழுகிற தேவர்களைப் பார்ப்பான், தன் மூக்கைப் பார்ப்பான், முன் வெற்றி பெற்று நடந்த நாளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்ப்பான், இந்த நிலத்தைப் பார்ப்பான்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.