கம்பராமாயணம் 541
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. இராமன் கும்பகருணனிடம் பேசுதல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 541 நாள் - ஐந்நூற்று நாற்பத்தொன்றாவது நாள். இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் பிழைத்ததால் உனக்கு அருந் திரு நாளொடு பெருந் துயில் நெடுங் காலம் உழைத்து விடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று? உரை என்றான். விளக்கம் - நீ முன்பு செய்த தீவினை நீங்கவில்லை ஆதலால் நான் உன்னை இளையவனான வீடணன் மூலம் அழைத்த போதும் வந்திடாமல் யமனது ஆணைக்கு உட்பட்டு நின்றாய், பெருஞ்செல்வத்தையும், வாழ்நாளையும் இழந்தாய், பெருந்துயிலை நெடுங்காலம் செய்து இறப்பதற்கு ஒருபட்டு நின்றாய் உன் மனதில் உறுவது எதுவோ? அதனைச் சொல் என்றான்.. கு. பாஸ்கர்... அபுதாபி
Embed this episode
No transcript yet.