EPISODE · Oct 25, 2023 · 7 MIN
கம்பராமாயணம் 542
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்.. கும்பகருணன் இராமனோடு உரையாடுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 542 நாள் - ஐந்நூற்று நாற்பத்து இரண்டாவது நாள். ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஒரும் கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ? சேவகன் கடன் ஒராய்? செருத் திண் வாளினால் திறத் திறன் உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து பொருத்தினால் அது பொருந்துமோ? தக்கது புகன்றிலைபோல் என்றான். விளக்கம் - நீ ஒப்பற்ற சிறந்த மூன்று உலகிற்கும் ஒப்பற்ற தனி முதல்வன் ஆனாலும் பிறர்க்கு வரும் பழியை ஆராய்ந்து அறியும் மனக்கருத்து உள்ள வீரன் இல்லையோ?,வீரர் தம் கடமையை எண்ணிப் பாராதவனாய் உள்ளாயே, உங்களை போர்க்களத்தில் வலிய வாளினால் துண்டம் துண்டமாகப் போரில் தலையை அறுத்து மீண்டும் அதைப் பொருத்தினால் அது பொருந்துமோ?நீ தகுதியானதை சொல்லவில்லை என்றான் கும்பகருணன். கு. பாஸ்கர்.....அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 542
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.