கம்பராமாயணம் 545
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... கும்பகருணன் இராமனிடம் விண்ணப்பம் செய்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 545 நாள் - ஐந்நூற்று நாற்பத்தைந்தாவது நாள். தம்பி என நினைந்து இரங்கித் தவிரான் அத் தகவு இல்லான் நம்பி இவன்தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால் உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன்.. விளக்கம் - ஆடவரில் சிறந்தவனே! அந்த நற்குணமில்லாதவனாகிய இராவணன் வீடணன் தம்பி ஆயிற்றே என்று எண்ணி இரக்கம் கொண்டு உயிரோடு விட்டிடான் இவனைக் கண் எதிரே கண்டால் கொல்லுவான் சிறிது கூட அருள் செய்யமாட்டான் ஆகவே உன் தம்பியையும், உன்னையும், அனுமனையும் ஒரு கணப் பொழுதும் என் தம்பி பிரியாதிருக்குமாறு திருவருள் செய்க இதனை யான் வேண்டிக் கொள்கிறேன் என்றான். கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.