EPISODE · Oct 30, 2023 · 7 MIN
கம்பராமாயணம் 548
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்.... இராவணன் சீதையிடம் பேசுதல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 548 நாள் - ஐந்நூற்று நாற்பத்தெட்டாவது நாள். அந்தரம் உணரின் மேல்நாள் அகலிகை என்பாள் காதல் இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ? மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்தும் இல்லை மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வாயஅமுது அலால் அமுதச் சொல்லீர். விளக்கம் - அமுதம் போன்ற இனிய சொல்லை உடையவரே நடுநிலமையோடு எண்ணிப் பார்த்தால் முன் ஒரு காலத்தில் அகலிகை என்ற பெயர் உடையவள் தனது காதலை இந்திரன் உணர்த்த அவனுக்கு தன்னைக் கொடுத்து இன்பமடைந்தாள் அதனால் அவள் தாழ்வு நிலையை அடைந்தாளோ? இல்லையல்லவா, என்னுடைய காமமாகிய நோயை போக்குவதற்கு அழகிய குமுத மலர் போன்ற உமது சிவந்த வாய் அமுதமல்லது வேறு மந்திரம் இல்லை ஒப்பற்ற வேறு மருந்ததும் இல்லை. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 548
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.