EPISODE · Oct 31, 2023 · 6 MIN
கம்பராமாயணம் 549
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்... சீதை இராவணனுக்கு தன் கருத்தை உரைத்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம். பாடல் எண் - 549 நாள் - ஐந்நூற்று நாற்பத்தொன்பதாவது நாள். வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினள் புகல்வதானாள். விளக்கம் - மெத்தென்ற சாயலை உடைய சீதை இராவணனை தன் அருகே பார்த்து புலியை தன் பக்கத்தில் கண்ட மான் போல கலக்கம் அடைந்து உடம்பு முழுவதும் நடுங்கி விம்மிப் புலம்பி என்னை அவன் கொல்லும்படிக்கு வந்தாலும் என் மனதில் உள்ள கருத்தை நன்றாக அறியும்படி கூறுவேன் என்று எண்ணி அருகில் தரையில் கிடந்த புன்மையான துரும்பு ஒன்றை நோக்கி கூறலானாள்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 549
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.