EPISODE · Nov 3, 2023 · 7 MIN
கம்பராமாயணம் 551
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம். சீதை புலம்பல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 551 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தொன்றாவது நாள். இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் கட்டுண்டாய் உயர்ந்த வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய் மட்டு உண்டார் மனிசர்த் தின்ற வஞ்சரால் வயிரத் திண் தோள் கட்டுண்டாய் என்னே யானும் காண்கிறேன் போலும் கண்ணால். விளக்கம் - வறியவரும், விருந்தினரும் நெருங்கி உண்ணுமாறு அளித்துப் பிறகு நீ உண்டாய், அறச் செயல்களை செய்தாய், எரித்த பகைவர்களின் ஊர்களை எல்லாம் எரித்து விட்டாய், வேள்வித் துறைகள் எல்லாவற்றையும் செய்து அவற்றிற்கு எல்லையும் கண்டாய் அத்தகு சிறப்படைய நீ , கள் குடிப்பவராய், மனிதரை தின்னும் வஞ்சகப் பண்பு கொண்ட அரக்கரால் வயிரம் போன்ற வலிய தோள்கள் கட்டப்பட்டாய் இப்படிப் பட்ட நிலையை நானும் கண்ணால் காண்கிறேன் என்றாள்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 551
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.