கம்பராமாயணம் 553
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம். இராவணன் மீண்டும் சீதையிடம் வேண்டல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் 553 நாள் - ஐந்நூற்று ஐம்பத்து மூன்றாவது நாள். இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் சுந்தரப் பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின். விளக்கம் - சீதையே உன் அழகிய சிறந்த பவளம் போன்ற வாயினால் ஒப்பற்ற கருணை சொல்லினைச் சிறிதாக சொன்னால் நான் இந்திரன் தலையில் தரித்துள்ள மௌலியை தேவர்கள் தலையால் வணங்கி வாயால் துதிக்க மந்திரஞ் சொல்ல முறைப்படி அணிவித்து தேவ மகளிர் எல்லாரும் பந்தல் போலச் சுற்றிச் சுழ்ந்து உரிய பணிகளைச் செய்ய இந்த சனகன் இட்ட கட்டளைப்படி நடப்பேன் என்றான்... கு. பாஸ்கர்..... அபுதாபி
Embed this episode
No transcript yet.