EPISODE · Nov 6, 2023 · 6 MIN
கம்பராமாயணம் 555
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்... சீதை மாயா சனகனிடம் பேசுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம்-மாயா சனகப் படலம் பாடல் எண் - 555 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தைந்தாவது நாள். வழி கெட வரினும் தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும் பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம்.. விளக்கம் - தங்களுடைய கால்வழியே அழியும் நிலைமை வரினும், தத்தமுடைய வாழ்க்கையே தேய்ந்து அழிந்து போவதாயினும், மார்பு கிழிபடுமாறு கூர்மையான வேல் வந்து எதிர்படினும் சான்றோர் கூறும் நன் மொழியைக் கைகொண்டு வாழ்வதல்லாது அறவழி நீங்கப் மறைவில் இருந்து பலர் ஒலித்துப் பழி தூற்றும்படி வாழ்பவர்களாகிய அரசர் உன்னைத் தவிர வேறு யாராவது உண்டா? பாவம்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 555
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.