EPISODE · Nov 7, 2023 · 6 MIN
கம்பராமாயணம் 556
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்... சீதை இராவணனிடம் கோபமாக பேசுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம். பாடல் எண் - 556 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தாறாவது நாள். என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் உன்னையும் கொல்லாய் மற்று இவ் உலகையும் கொல்லாய் யானோ இன் உயிர் நீங்கி என்றும் கெடாப் புகழ் எய்துகின்றேன் பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள். விளக்கம் - உன்னால் என்னையும் கொல்ல முடியாது, அது போலவே மாயா சனகனையும் கொல்ல முடியாது, மேலும் நீ உன்னையும் கொன்று கொள்ள முடியாது, இவ்வுலகில் உள்ள மக்களையும் உன்னால் கொல்ல முடியாது, யான் வேண்டுமானால் என்னுடைய இன்னுயிரை நீத்து பெரும் புகழை அடைவேன் பின்பு என் தலைவனாகிய இராமனது அம்பினால் நீ சுற்றத்துடன் அழிவாய் என்று சீதை கூறினாள்... கு. பாஸ்கர்..... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 556
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.