EPISODE · Nov 10, 2023 · 6 MIN
கம்பராமாயணம் 559
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்... இராவணன் கதற சீதை மகிழ்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம். பாடல் எண் 559 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தொன்பதாவது நாள். கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை கொண்டாள், ஒரு துணுக்கம், அன்னவனைக் கொற்றவனார் தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள்.. விளக்கம் - தன் கண்ணுக்கு அடங்காத பேரழகு படைத்த தோளை உடைய இராமனையும், கும்பகருணனையும் முன்பு கண்டு ஒப்பற்ற அச்சம் கொண்டவளாகிய சீதை அத்தகைய பேருருவம் பெருவலியும் படைத்த அவனை வெற்றி பொருந்திய இராமபிரானது தவறாமல் அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு அழித்த ஒப்பற்ற சொற்களை மிக விரும்பிக் கேட்டு உடல் பூரிப்பு அடைந்தாள் அதனாள் வேறு ஒருத்தி போன்றவள் ஆனாள். கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 559
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.