கம்பராமாயணம் 560
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... இராவணன் சீறி அகல்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 560 நாள் - ஐந்நூற்று அறுபதாவது நாள். அக் கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால் முக் கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான். விளக்கம் - எல்லா திசைகளிலும் சென்று போர் செய்து வெற்றி பெற்றவனாகிய இராவணன் அந்த நேரத்தில் அமைச்சர் ஆறுதல் கூறச் சிறிது சினம் தனிந்து இப்போது மனிதரான இராம இலக்குவருடைய பச்சை இரத்தத்தால் என் தம்பியாகிய கும்பகருணனக்கு மூன்று முறை கையால் இறைத்தல் ஆகிய நீர்க்கடனை செய்வேன் என்று சினந்து சினத்தால் தீ வெளிப்படும் கண்களை உடையவனாய்ச் சீதை இருக்கும் இடத்தை விட்டு அப்பால் போனான். கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.