கம்பராமாயணம் 562
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 562 நாள் - ஐந்நூற்று அறுபத்திரண்டாவது நாள். எல்லே! இவை காணிய எய்தினேனோ வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில் செல்லேன், எனின் இவ் இடர் தீர்குவெனோ?. விளக்கம் - அந்தோ! இவற்றைக் காண்பதற்காகவா இங்கு வந்தேன், ஒருவனாகிய நான் விரைவாக உயிருடன் உளராகிய மனிதர்களைக் கொல்லாதவனும், அவர்களின் உயிரைக் கொள்ளுவதற்குரிய வழியில் செல்லாத வானும் ஆனேன் எனில் இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.