EPISODE · Nov 17, 2023 · 7 MIN
கம்பராமாயணம் 564
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்.. வீடணன் அதிகாயனது திறம் குறித்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 564 நாள் - ஐந்நூற்று அறுபத்து நான்காவது நாள். அறன் அல்லது நல்லது மாறு அறியான் மறன் அல்லது பல் பணி மாறு அணியான் திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான். விளக்கம் - இந்த அதிகாயன் நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்றும் அறிய மாட்டான், பல அணிகலன்களாக வீரத்தைத் தவிர வேறு ஒன்றை அணிய மாட்டான், வலிமை இல்லாததகிய ஒப்பற்ற அருமையான உயிரையும் அழிக்க மாட்டான், பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது என்று உணர்வான்.. கு. பாஸ்கர்...அபுதாபி..
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 564
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.