கம்பராமாயணம் 565
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... இராமன் இலக்குவனுடைய வலிமை கூறல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 565 நாள் - ஐந்நூற்று அறுபத்தைந்தாவது நாள். என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் குன்றேன் என ஏகிய கொள்கையினால் நின்றான் உளன் ஆகி நெடுந் தகையாய்.... விளக்கம் - பெருமைப் பண்புள்ளவனே என் தேவியை வஞ்சனை செய்து எடுத்துச் சென்ற இராவணன் அன்றே இறந்திருப்பான், இந்த இலக்குவன் அந்தச் சீதையின் சொல்லை மீற மாட்டேன் என்று பாதுகாத்து இடத்தை விட்டு வெளியேறியதால் அந்த இராவணன் இது வரையில் உயிர் உள்ளவன் ஆகி வாழ்ந்து நின்றான் இல்லை என்றால் இறந்திருப்பான் என்றான்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.