கம்பராமாயணம் 568
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... அதிகாயன் இலக்குவனோடு போரிடல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் 568 நாள் - ஐந்நூற்று அறுபத்தெட்டாவது நாள். முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை மற்று இவன்தன்னை வெல்ல வல்லேனோ வள்ளல் தம்பி? கற்றது காலனோடா, கொலை இவன்? ஒருவன் கற்ற வில் தொழில் என்னே ! என்னா தேவரும் வெருவலுற்றார்... விளக்கம் - ஒலிக்கின்ற வானரப் படை தீர்ந்து ஒழிவது இன்றே முடியுமல்லவா?, இராமன் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லவன் ஆவனோ? இந்த அதிகாயன் கொலையை கற்றுக் கொண்டது யமனிடம் தானோ? ஒப்பற்ற இவன் கற்றுள்ள வில்வித்தை என்ன சிறப்புத் தன்மை உடையது என்று கூறித் தேவர்களும் அஞ்சத் தொடங்கினார்கள்.... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.