கம்பராமாயணம் 570
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.. இராவணன் நிலையும் செயலும். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 570 நாள் - ஐந்நூற்று எழுபதாவது நாள். மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி புண்ணிடை எரி புக்கென்ன மானத்தால் புழுங்கி நையும். விளக்கம் - இராவணன் நிலவுலகை எடுக்க எண்ணுவான், வானத்தை இடிக்க நினைப்பான், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் ஒரு கண நேரத்தில் அழிக்க எண்ணுவான், பெண் என்ற பெயரைக் கொண்ட பொருள்களை எல்லாம் பிளந்து அழிப்பேன் என்று நினைப்பான் அவ்வாறு நினைத்து புண்ணில் தீ புகுந்தது போல் மான உணர்வினால் புழுங்கி அழுவான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.