கம்பராமாயணம் 575
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 575 நாள் - ஐந்நூற்று எழுபத்தைந்தாவது நாள். நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான்.. விளக்கம் - பெய்த இடத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன் விரைவாகச் சென்று நெருங்கி இராவணன் மகனாகிய இந்திரசித்தன் தளர்ச்சியடைந்த தன்மை கண்டு இவனை யான் விரைவாகக் கொன்று வீழ்த்துவேன் என்று ஒப்பற்ற சினம் மிகுந்து மாறுபாடு கொண்ட இயமனைப் போன்ற தனது கையில் உள்ள வில்லில் பூட்டிய பெரிய அம்புகளால் அவனது கவசத்தை அறுத்து வீழ்த்தினான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.