EPISODE · Dec 8, 2023 · 6 MIN
கம்பராமாயணம் 577
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்... இலக்குவன் நிலை கண்டு வீடணன் புலம்பல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 577 நாள் - ஐந்நூற்று எழுபத்தேழாவது நாள். ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன் கழிந்தும் இல்லேன் அத் தலைக்கு அல்லேன் யான், ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற இத் தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலைச் சூலம் போல்வேன். விளக்கம் - வானர வீரர்களுடன் ஒப்பாகப் பகைவர்களை வருத்தி அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும் அவர்களுக்கு ஒப்பாக இறந்து, வாழ்ந்து உய்யும் நெறிகள் இருப்பின் யானும் பிழைத்து அவர்களையும் பிழைப்பித்து என் பக்தியுள்ள மனத்தின் தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிக் காட்டினேன் அல்லன் யான் இறந்து போகவுமில்லை, நான் இராவணன் பக்கத்துக்கு வைண்டாதவனானேன், இங்கு சரண் என்று சேர்ந்து நின்ற இராமன் பக்கத்துக்கும் வேண்டாதவனானேன் இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப் போன்றவனானேன்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 577
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.