கம்பராமாயணம் 581
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... கருடண் இராமனைத் துதித்தல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 581 நாள் - ஐந்நூற்று எண்பத்தொன்றாவது நாள். தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய் மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் ஆவாய் வருந்தி அழிவாய் கொல் ஆர் இல் அதிரேக மாயை அறிவார்?. விளக்கம் - தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் போன்ற பலரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு நின் திருநாமத்தை சொல்லித் துதிக்கும் படியாக உள்ளவனே மூப்படையாது எப்போதும் பதிநான்கு உலகங்களையும் பாதுகாத்து அரசு செய்கிற மேன்மை பொருந்திய தலைவனே உன்னை சரண் புகுந்தவர் பிறரால் அடைய முடியாத பேரின்பங்களை அடைந்து இறுதியில் உன்னை அடைய முத்தி உலகத்தை காட்டும் தலைவனாகிய நீ வருத்தம் கொண்டு அழிவாய் போலும் இந்த உன்னுடைய மிகுதியான மாயச் செயலை அறியத் தக்கவர் யார்?. கு. பாஸ்கர்... அபுதாபி
Embed this episode
No transcript yet.