கம்பராமாயணம் 582
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்.... கருடன் இராமனை துதித்தல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 582 நாள் - ஐந்நூற்று எண்பத்திரண்டாவது நாள். வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?. விளக்கம் - வேத வடிவானவனே உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் வினைக்குத் தகுந்த வாழ்நாளைக் கொடுக்கிறாய், எக்காலத்தும் அழியாமல், அறம் தவறாமல் நிற்கிறாய், குறைவிலா நிறைவாக இருப்பதால் உனக்கு வேறு பொருள் வேண்டும் என்று இல்லை, பிறர் பெறுவதற்கு விரும்பும் பொருளை தவறாமல் கொடுப்பாய்,, நுகர் பொருளாகவும், உயிருக்கு உயிராகவும், ஐம்புல உணர்வுகளுக்கு அரிய ஆய பெண்ணின் உருவாகியும்,, ஆணின் வடிவமாகியும், அலியின் வடிவமாக வும் நிற்கிறாய் இந்த அரிய மாயச் செயலை அறிபவர் யார்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
No transcript yet.