Skip to content
கம்பராமாயணம் 585 episode artwork

Dec 9, 2023 7 min

கம்பராமாயணம் 585

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்.. கருடன் இராமனைத் துதித்தல்... காண்டம் -யுத்த காண்டம். படலம் -நாகபாசப் படலம். பாடல் எண் -585 நாள் -ஐந்நூற்று எண்பத்து ஐந்தாவது நாள் . எறிந்தாரும்,ஏறுபடுவாறும்,இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது ,உள்ளது இடையே பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இல் அதிரேக மாயை அறிவார் ?. விளக்கம் -பெரியவனே -படைக்கலன்களை எறிபவரும்,அதனால் காயப் படுபவர்களும்,இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவரும் ,நெருங்கி இருந்து வாழ்பவர்கள் இடத்திலும் நீ ஒருங்கு கலந்திருப்பது உண்மை என்ற செய்தி உன்னில் தெரிகின்றது.அறிவில் இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும் அவர்களிடம் இருந்து பிரிந்து போகிறாய் , அவ்வாறு பிரிந்தாலும் கூட அந்தர்மியாகப் பிரியாமல் இருக்கிறாய் ,தத்துவ ஞானிகள் உண்மை உணர்வால் ஆய்ந்து அறிந்த மெய் பொருளாகவும் விளங்குகிறாய் இந்த மிகுதியான மாயையை யார் அறிவார்?. கு.பாஸ்கர் ....... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 585

0:00 7:01

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 7 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on December 9, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.