கண்ணதாசனின் “அனுபவமே கடவுள்” | “Anubavame Kadavul” by Kannadasan episode artwork

EPISODE · Sep 6, 2021 · 1 MIN

கண்ணதாசனின் “அனுபவமே கடவுள்” | “Anubavame Kadavul” by Kannadasan

from Payanangal Mudivathillai · host Rahul Moorthi

“அனுபவமே கடவுள்” பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

Episode metadata supplied by the publisher feed · Published Sep 6, 2021

Embed this episode

NOW PLAYING

கண்ணதாசனின் “அனுபவமே கடவுள்” | “Anubavame Kadavul” by Kannadasan

0:00 1:23

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Payanangal Mudivathillai?

This episode is 1 minute long.

When was this Payanangal Mudivathillai episode published?

This episode was published on September 6, 2021.

Can I download this Payanangal Mudivathillai episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!