ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் podcast artwork

PODCAST · society

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.

  1. 167

    How do charities and individual fundraisers work in Australia? - ஆஸ்திரேலியாவில் தொண்டு நிறுவனங்களும் தனிநபர் நிதி திரட்டல்களும் எவ்வாறு செயல்படுகின்றன?

    What are the rules around raising money and charities? How can you ensure you don't get scammed? Here is what you need to know if you're donating, raising money yourself or launching an online crowdfunding appeal. - ஆஸ்திரேலியாவில் தொண்டு நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதி திரட்டுவது எப்படி, நன்கொடை வழங்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன, சட்டரீதியாக தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

  2. 166

    The Torres Strait Islander Flag: Land, Sea and People - டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கொடி: நிலம், கடல், மக்கள்

    In Australia, you might see three flags flying together: the Australian National Flag, the Aboriginal Flag and the Torres Strait Islander Flag. Aboriginal peoples and Torres Strait Islander peoples are the two distinct Indigenous peoples of Australia, each with their own histories, cultures, languages and flag. For many Torres Strait Islander people, the flag is a powerful symbol of identity and belonging, whether they live on the islands, the mainland or overseas. - ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் மூன்று கொடிகள் ஒன்றாகப் பறப்பதை நீங்கள் காணலாம்: ஆஸ்திரேலிய தேசியக் கொடி, பூர்வீகக் குடிமக்களின் கொடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கொடி. டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கொடி அங்குள்ள மக்களையும் நிலம், கடல், கலாச்சாரம் மற்றும் சமூகத்துடனான அவர்களின் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. இக்கொடி தொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  3. 165

    Tips to manage financial stress | Fuel in Focus - நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் இலவச சேவைகள்

    Australia's petrol and diesel prices remain under pressure. The RBA’s decision to hike the cash rate this month is adding to the financial strain facing many households. We look at some free and independent support services that are available to help people manage financial stress. - மக்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிகம் பணம் செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ள அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை, mortgage மற்றும் பிற செலவுகளும் அவர்களுக்கு அதிகரித்துள்ளன. நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் இலவச சேவைகள் பற்றி Sahil Makkar தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  4. 164

    A guide to fuel types in Australia | Fuel in Focus - பெட்ரோல், டீசல், E10 –எந்த எரிபொருள் சிறந்தது?

    Drivers across Australia are paying more at the bowser as fuel prices remain unstable. So does it make sense to go for cheaper petrol options when filling up? The answer depends largely on your engine requirements, as not every fuel works for every vehicle. - எரிபொருள் நிரப்பும்போது மலிவான பெட்ரோல் வகைகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானதா? இதற்கான பதில் பெரும்பாலும் உங்கள் எஞ்சினின் தேவைகளைப் பொறுத்தது, ஏனெனில் எல்லா எரிபொருட்களும் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தாது.ஆஸ்திரேலிய எரிபொருள் நிலையங்களில் காணப்படும் முக்கிய எரிபொருள் வகைகள் குறித்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  5. 163

    The Aboriginal flag: History, meaning and recognition - பூர்வீக குடிமக்களின் கொடி: வரலாறு, அர்த்தம் மற்றும் அங்கீகாரம்

    At school, work, council offices or sporting events, you might see a red, black and yellow flag flying beside the Australian national flag. This is the Aboriginal flag, representing the Aboriginal people of Australia and their connection to land, community and stories. - ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி மக்களையும், நிலம், சமூகங்கள் மற்றும் கதைகளுடன் அவர்கள் கொண்டுள்ள ஆழமான தொடர்பையும் Aboriginal கொடி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதுதொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  6. 162

    Are you prepared for Australia’s flu season? - இந்த ஆண்டின் Flu அலையை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

    Influenza is a highly contagious viral infection. As flu season begins in Australia, here’s what you need to know to protect yourself, your family and the most vulnerable in our community. - Influenza காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் யாருக்கு அதிகம் உள்ளது, வருடாந்திர Flu தடுப்பூசியை எப்போது போட்டுக்கொள்ள வேண்டும், மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஊசி இல்லாத என்னென்ன தெரிவுகள் இப்போது கிடைக்கின்றன என்பதைப் பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  7. 161

    The overlooked story: Aboriginal and Torres Strait Islander service on ANZAC Day - கவனிக்கப்படாமல் போன கதை: பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் இராணுவ சேவை

    Each year Australians gather on ANZAC Day to remember those who served in wars, conflicts and peacekeeping missions. But whose stories are we remembering? Are there stories we don’t always hear? In this episode we explore an important part of Australia’s history that has often been overlooked—the service of Aboriginal and Torres Strait Islander peoples. - பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளில் சேவை செய்துள்ளனர். ஆஸ்திரேலிய வரலாற்றின் முக்கியமான பகுதியான இது, பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போன ஒன்றாக காணப்பட்டது. இது தொடர்பில் Rachael Knowles மற்றும் Roza Germian ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  8. 160

    Thinking of a career change? Here are some tips and options to consider - உங்கள் தொழிலை மாற்ற நினைக்கிறீர்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

    Looking to step into a new career? You're not the only one, the stats suggest. No matter your age, background or whether English is your first language, a career change at some point is almost inevitable nowadays. In Australia, support is available to help you through the process. - நீங்கள் உங்கள் தொழில் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தாலும் சரி, அல்லது பல வருட அனுபவம் பெற்றிருந்தாலும் சரி, உங்கள் தொழிலை மாற்றுவது ஒரு சவாலான விடயமாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் உங்கள் தொழிலை மாற்றுவதில் என்னென்ன அடங்கும் என்பது தொடர்பில் Zoe Thomaidou தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  9. 159

    Australia’s unique wildlife: what makes it special and what’s at risk - ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகளைக் காக்க என்ன செய்யலாம்?

    Australia is one of the most biodiverse places on Earth, home to wildlife and plant species found nowhere else on the planet. In this episode of Australia Explained you’ll learn about what makes Australia’s biodiversity so special, the threats it faces and how we can all help protect it. - ஆஸ்திரேலியாவின் biodiversity-உயிரியல் பல்வகைமை ஏன் இவ்வளவு தனித்துவமானது, அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்ன, மேலும் அதை பாதுகாக்க நாம் செய்யக்கூடியவை என்ன என்பது தொடர்பில் Phil Tucak தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  10. 158

    Think before you pack: Australia’s customs and biosecurity rules explained - பயணிகள் கவனத்திற்கு: ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களை கொண்டுவரமுடியாது?

    Customs is generally the first point of contact for people entering Australia. Our Border Force Officers are there waiting. They ensure that we don’t bring in prohibited goods that could threaten Australia’s unique environment, economy and communities. Before you zip up your suitcase, here’s what you need to know about what can—and can’t—cross the border, and what’s at stake if biosecurity rules are ignored. - ஆஸ்திரேலியாவின் வலுவான biosecurity-உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டின் தனித்துவமான சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகங்களை பாதுகாக்கவென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் மற்றும் அனுமதிக்கப்படாத பொருட்கள் எவை மேலும் இந்த விதிகளை புறக்கணித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதொடர்பில் Melissa Compagnoni மற்றும் Sushen Desai ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  11. 157

    Have you considered a career in translating and interpreting? - இருமொழி திறன் உண்டா? மொழிபெயர்ப்புத் துறையில் உங்கள் பயணத்தை தொடங்குவது எப்படி?

    Have you ever considered using your bilingual skills to assist others? A career in translating and interpreting might be for you. In Australia you can train for a TAFE certificate all the way to Master’s degree prior to getting certified. In this episode we help you navigate the pathway to becoming a qualified practitioner. - உங்களுக்கு இருக்கும் இருமொழித் திறமையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு துறையில் தொழில் வாய்ப்பைப் பெறுவது பற்றி Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  12. 156

    How to buy Indigenous art and craft ethically in Australia - பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி

    Buying Aboriginal and Torres Strait Islander art can be meaningful, but how do you know if it's real and ethical? Fake art is still a problem in Australia, and protections are still developing. This guide helps you understand what to look for, what questions to ask, and where to buy safely. By choosing carefully, you can support First Nations artists and their communities. - ஆஸ்திரேலியாவில் பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  13. 155

    How public and community housing works in Australia - Social housing: குறைந்த செலவில் உங்களுக்கான வீடொன்றைப் பெறுவது எப்படி?

    In Australia, government-subsidised rental housing is available for eligible households. Assessment is based on need under criteria that vary depending on your state or territory. Here’s what to expect when applying for different types of housing assistance, some common myths around social housing and where to reach out for help. - ஆஸ்திரேலியாவில் நீண்டகால அடிப்படையில் வாடகை வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் உதவி எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றியும் social housingக்காக விண்ணப்பிக்க நினைப்பவர்கள் எங்கு உதவி பெறலாம் என்பதைப் பற்றியும் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  14. 154

    More than style: How First Nations fashion is growing in Australia - பூர்வீகக் குடிமக்களின் Fashion: ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு

    If you’ve spent any time in Australia, you’ve probably noticed how relaxed the style is. You might notice activewear, surf brands and casual clothes everywhere. But there’s another side to Australian fashion. Aboriginal and Torres Strait Islander designers have been creating clothes and accessories for thousands of years — and that work is very much alive today. You’ll see it on runways, in global fashion campaigns and in everyday clothing. Find out what makes First Nations fashion different, how it connects to the environment and what you should be aware of if you want to wear it. - நீங்கள் ஆஸ்திரேலியாவில் சில காலம் வாழ்ந்திருந்தால், இங்குள்ள உடை அலங்கார பாணி மிகவும் சுலபமானதும் சீரானதுமாக இருப்பதை கவனித்திருக்கலாம். பல இடங்களில் activewear, surf brands மற்றும் சாதாரண உடைகளை அதிகமாக பார்த்திருப்பீர்கள். ஆனால் ஆஸ்திரேலிய ஃபேஷனின் இன்னொரு பக்கம் உள்ளது — பலர் முதலில் இங்கு வரும்போது அதைப் பற்றி அதிகமாகக் கேள்விப்படமாட்டார்கள். அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுப் பின்னணிகொண்ட வடிவமைப்பாளர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உடைகள் மற்றும் அணிகலன்களை உருவாக்கி வருகின்றனர் — அந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. இப்போது அது ஃபேஷன் runwayகளில், உலகளாவிய ஃபேஷன் பிரச்சாரங்களில் மற்றும் அன்றாட உடைகளிலும் காணப்படுகிறது.

  15. 153

    Your guide to using sunscreen in Australia - ஆஸ்திரேலியாவில் sunscreen பயன்படுத்துவது ஏன் முக்கியம் ? சரியாக பயன்படுத்துவது எப்படி?

    Australia’s sun can be harsh. And sunscreen is one key measure protecting us against harmful sun exposure. We asked three scientists about sunscreen facts, myths and choosing the right products. - உலகிலேயே அதிக தோல் புற்றுநோய் விகிதம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆகவே சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான முறையில் sunscreen ஒன்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது குறித்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேசகரன்.

  16. 152

    How to recover from bushfires - காட்டுத்தீ பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?

    Australia’s hot, dry climate and unique landscapes make it one of the most bushfire-prone countries in the world. As climate change drives higher temperatures and drier conditions, we can expect more frequent and more intense bushfires in the future. But once the fire is out, how do you return home safely, find support, and look after yourself? - காட்டுத்தீ அணைந்ததும், எப்படி பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்புவது, எங்கு உதவி பெறுவது, உங்களை எப்படி கவனித்துக் கொள்வது? Audrey Bourget ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேசகரன்.

  17. 151

    How does IVF work in Australia? - ஆஸ்திரேலியாவில் IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

    Did you know that IVF is not the first, but in fact the last step in a sequence of fertility treatments? In Vitro Fertilisation is regulated by state and territory laws. It can also be expensive and emotionally challenging. Here’s what to expect when aiming to start a pregnancy with IVF in Australia. - IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை, ஆஸ்திரேலியா முழுவதும் பலரின் பெற்றோராகும் கனவிற்கு வழிவகுக்கிறது. ஆஸ்திரேலியாவில் IVF சிகிச்சை மேற்கொள்ளும் போது என்னென்ன எதிர்பார்க்கலாம்? Zoe Thomaidou ஆங்கிலத்தில் எழுதிய இந்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

  18. 150

    Public transport in Australia: breaking down the basics - ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்து பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்

    Like in most countries, public transport in Australia is the cheapest way to get around. It includes trams, buses, trains and ferry services. And each state or territory has its own transport network. However, navigating Australia’s public transport system with ease requires knowing the basics around how it works and what to expect. - ஆஸ்திரேலியாவின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? அதில் பயணிக்கும் பயணிகள் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள் போன்று விடயங்கள் குறித்து ஆங்கிலத்தில் Zoe Thomaidou எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

  19. 149

    How to cater for your dietary restrictions - உணவுக் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளுவது எப்படி? இதோ சில வழிமுறைகள்!

    Australia is known as the allergy capital of the world. Our diverse population also means that we express our religious beliefs, ethics, health and personal choices through the food we eat. We called on some experts to help us navigate all the labelling, certifications and resources that can inform our food choices. - பல்லின பல்கலாசார நாடான ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பின்னணியில் உணவுக் கட்டுப்பாடுகளை எவ்வாறு கவனத்தில் கொள்ளுவது என்பது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  20. 148

    What actually happened on January 26? - ஆஸ்திரேலியா தினம் – ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி

    January 26 is one of the most debated dates in Australia’s history. Often described as the nation’s birthday, the day marks neither the formal founding of the colony nor the creation of the Commonwealth. Instead, it reflects a layered history shaped by colonisation, political decisions, and ongoing First Nations resistance. Understanding what actually happened on January 26 reveals why the date is experienced so differently across the country. - ஜனவரி 26 — ஆஸ்திரேலியா தினமாக நாடு முழுவதும் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் வரலாறு எளிமையானது அல்ல. பலருக்கு, இது 1788ஆம் ஆண்டு First Fleet கப்பற்படை சிட்னிக்கு வந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆனால், பலருக்கு — குறிப்பாக பூர்வீகக்குடி சமூகத்தினருக்கு — இந்த நாள் இழப்பு, கலாச்சார சிதைவு, துன்பம் மற்றும் எதிர்ப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

  21. 147

    Your guide to camping in Australia - ஆஸ்திரேலியாவில் camping செல்ல தயாராவது எப்படி? : ஒரு வழிகாட்டி

    Going camping is an incredible way to experience Australia’s great outdoors whilst also taking a break from technology and daily routines. We unpack the benefits of camping, the preparation required, the equipment you should consider taking, and how to be a considerate camper. - கடற்கரையிலிருந்து பாலைவனப் பகுதிவரை, ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகை அனுபவிக்க camping சிறந்த வழியாகும். இது குறித்து ஆங்கிலத்தில் Phil Tucak எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  22. 146

    Your first steps to engaging with Indigenous Australians - பூர்வீக குடிமக்களுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்குவதற்கான முதல் படிகள்

    Connecting with Indigenous Australia can be daunting for a newcomer to the country. So, where do you start? We asked Yawuru woman Shannan Dodson, CEO of the Healing Foundation, about simple ways to engage with First Nations issues and people within your local community. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள், “Traditional Owners”, “Country”, அல்லது “First Nations” போன்ற சொற்களை அடிக்கடி கேட்கலாம் அல்லது பார்க்கலாம். பலரும் இதன் அர்த்தத்தைப் புரிந்து, அவர்களுடன் மரியாதையுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். ஆரம்பத்தில், இதற்கான முதலாவது படிகளை எடுப்பது சற்று குழப்பமாகவும், சந்தேகமூட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால் இது இங்குள்ள வாழ்க்கையும் வரலாற்றையும் புரிந்து கொள்ள ஒரு முக்கிய வழியாகும்.

  23. 145

    How to cope during a heatwave in Australia - கோடைகால வெப்ப அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

    Summer in Australia can be very hot, and as our climate continues to warm, heatwaves are expected to become more frequent and more intense. In this episode of Australia Explained, we cover what a heatwave is, why they pose such a significant risk to human health, who is at most risk, and how to best prepare to cope with a heatwave. - Heatwaves- வெப்ப அலைகள் ஏற்படுத்தும் அபாயங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் அறிந்து கொள்வது முக்கியம். இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  24. 144

    From black tie to casual: How to decode dress codes - ஆஸ்திரேலியாவின் dress codes தொடர்பில் அறிந்துகொள்வோம்!

    You’ve received an invitation that reads “Dress code: Cocktail attire”. What is this ‘code’? And more importantly, what will you wear? In this episode, we demystify the most common dress codes so that you can feel comfortable at any event. - "Dress code: Cocktail attire” என்று கூறும் அழைப்பிதழ் உங்களுக்கு வந்திருக்கிறதா? இந்த ‘Dress Code ’ என்றால் என்ன? அதைவிட முக்கியமாக—நீங்கள் அந்த நிகழ்வுக்கு என்ன அணிய வேண்டும்? எந்தவொரு நிகழ்வுக்கும் தயக்கமின்றி செல்ல உதவும் வகையில், பொதுவாக பயன்படுத்தப்படும் Dress Code பற்றி இந்த விவரணத்தில் அறிந்து கொள்வோம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Melissa Compagnoni. தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  25. 143

    All you need to know about Boxing Day in Australia  - Boxing Day பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    Australian Boxing Day is a unique blend of cultural and commercial significance. While it doesn't have a solid religious connotation here, it's a day when Australians extend their Christmas festivities. It's often a time for family barbecues, cricket matches, and watching the iconic Sydney to Hobart yacht race. On the other hand, many Australians look forward to this day to sweep the stores for the best bargains.  - ஆஸ்திரேலியாவில் Boxing Day என்பது கலாச்சார மற்றும் வணிக முக்கியத்துவத்தின் தனித்துவமான கலவையாகும். இத்தினம் தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  26. 142

    Dating or matchmaking: How to find a partner in Australia - ஆஸ்திரேலியாவில் காதல் துணையை தேடுவது எப்படி?

    Many newly arrived migrants in Australia seek relationships not only for romance but to regain a sense of belonging. Separation from loved ones often drives this need for connection. This episode explores how dating in Australia differs from more collectivist cultures and how newcomers can find partners. From social events and dating apps to professional matchmaking, it highlights how migrants can build confidence, connection, and safety as they find love in a new country. - ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு காதல் துணையை தேடுபவர்கள் எப்படி தங்களின் காதல் பயணத்தை தொடங்கலாம், அதில் எதைக் கவனிக்க வேண்டும், பாதுகாப்பான மற்றும் உண்மையான முறையில் நீடித்த உறவை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து ஆங்கிலத்தில் Maram Ismail எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  27. 141

    From Mabo to modern Australia: the ongoing story of native title - Native Title: மாபோ வழக்கு முதல் இன்றைய ஆஸ்திரேலியா வரை

    Australia is known around the world for its rich and diverse First Nations cultures. But when it comes to native title and land rights, you might still wonder what they actually mean. Discover what native title means in Australia, how it began with the Mabo Case, what the Native Title Act does, and why it matters for all Australians. - ஆஸ்திரேலியா அதன் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பூர்வீகக்குடி கலாச்சாரங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் பூர்வீக நில உரிமை அங்கீகாரம் மற்றும் நில உரிமைகளைப் பொறுத்தவரை, அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பூர்வீக நில உரிமை அங்கீகாரம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? என்பது தொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  28. 140

    A parent’s guide to help teens adjust to social media age restrictions - சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?

    Australia is restricting access to social media accounts for under-16s, and many families are wondering what it means in practice. While the rules place responsibility on tech platforms rather than young people or their parents, the changes may still create stress for teens who rely on social media to stay connected. Find out how the ban will work, why connection still matters, and how experts suggest supporting young people through the transition. - ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்களைப் பற்றி இளம் வயதினருடன் எப்படி பேசலாம்? இந்த தடையினை பிள்ளைகள் புரிந்து கொண்டு அதனை சமாளிக்க பெற்றோர் அவர்களுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Veronica Lenard எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  29. 139

    How to plan for your child’s financial future in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது?

    Financial planning can feel stressful for any parent. When it comes to saving for your child’s future, knowing your options helps make informed decisions. And teaching your kid healthy money habits can be part of the process. - உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பது மற்றும் அவர்களுக்கு நிதி மேலாண்மை குறித்து கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். இது குறித்து ஆங்கிலத்தில் Zoe Thomaidou எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  30. 138

    What are Australia’s fishing laws and rules? - நீங்கள் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் செல்பவரா? இத்தகவல் உங்களுக்கானது!

    Thinking of going fishing in Australia? Make sure you are familiar with local regulations, including licensing systems, closed seasons, size limits, permitted gear, and protected species. - ஆஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்தல் என்பது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதை பலர் அறியாமல் இருக்கலாம். உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து, மீன்பிடிக்க உரிமம் தேவையா இல்லையா, தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் மீன்பிடிக்கக்கூடாத பருவங்கள், அளவு வரம்புகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் போன்ற விடயங்களுக்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  31. 137

    Road trips in Australia: What you need to know before hitting the road - ஆஸ்திரேலியாவில் நெடுந்தூர சாலைப்பயணங்களை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை

    There’s no better way to experience Australia than hitting the road. Between the wide-open landscapes, country bakery pies, and unexpected wildlife, a road trip lets you take in the country at your own pace. But even if you’ve driven overseas, Australia comes with its own set of challenges, especially when you venture off the beaten path. - ஆஸ்திரேலியாவில் நெடுந்தூர சாலைப்பயணங்களை மேற்கொள்வதற்கு நீங்கள் எவ்வாறு தயாராகி, பாதுகாப்பாக இருந்து உங்கள் பயணத்தை சிறப்பாக அனுபவிக்கலாம் என்பது குறித்து Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  32. 136

    How to donate blood in Australia - ஆஸ்திரேலியாவில் இரத்த தானம் செய்வது எப்படி?

    Each time you donate blood, you can save up to three lives. In Australia, we rely on strangers to donate blood voluntarily, so it’s a truly generous and selfless act. This ensures that it’s free when you need it—but it also means we need people from all backgrounds to donate whenever they can. Here’s how you can help boost Australia’s precious blood supply. - ஆஸ்திரேலியாவில் இரத்ததானம் ஏன் மிகவும் விலைமதிப்பற்றது, அதை வலுவாக வைத்திருப்பதில் நீங்கள் எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  33. 135

    How to navigate Australia’s ICT workforce as a skilled migrant - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி?

    Discover how skilled migrants navigate challenges in Australia’s ICT sector, from job hunting and local experience to networking and thriving in tech careers. - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) துறையில் பணியாற்றும் திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடல், உள்ளூர் அனுபவம் பெறல் மற்றும் நெட்வொர்க்கிங் செய்து தொழில்துறையில் முன்னேறுவது தொடர்பில் சந்திக்கும் சவால்களை எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.

  34. 134

    Understanding treaty in Australia: What First Nations people want you to know - பூர்வீகக் குடிமக்களுடனான Treaty-ஒப்பந்தம் என்றால் என்ன?

    Australia is home to the world’s oldest living cultures, yet remains one of the few countries without a national treaty recognising its First Peoples. This means there has never been a broad agreement about sharing the land, resources, or decision-making power - a gap many see as unfinished business. Find out what treaty really means — how it differs from land rights and native title, and why it matters. - ஆஸ்திரேலியாவில் குடியேறியவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், புதிய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு மதிக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை நிச்சயம் அறிவீர்கள். ஆஸ்திரேலியா உலகின் பழமையான கலாச்சாரங்களைக் கொண்ட பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களின் தாயகமாகும். ஆனால் வேறு சில நாடுகளைப் போலல்லாமல், ஆஸ்திரேலியாவில் அதன் பூர்வீகக்குடி மக்களையோ அல்லது அவர்களின் உரிமைகளையோ அங்கீகரிக்கும் ஒரு தேசிய ஒப்பந்தம் - Treaty இல்லை.

  35. 133

    Springtime hay fever and asthma: how to manage seasonal allergies - வசந்தகால ஒவ்வாமைகளால் அவதிப்படுகிறீர்களா?

    Springtime in Australia brings warmth, blossoms, and longer days—but also the peak of pollen season. For millions of Australians, this means the onset of hay fever and allergy-induced asthma. - வசந்த காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மகரந்தங்களால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  36. 132

    How you can work as an engineer in Australia: accreditation, jobs and networking - ஆஸ்திரேலியாவில் பொறியாளராக வேலை செய்வது எப்படி: அங்கீகாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள்

    Australia faces an engineering shortage, yet many migrant engineers are underemployed. Learn about qualification recognition, job search tips, CV advice, and networking strategies. - ஆஸ்திரேலியாவில் பொறியியல் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது, ஆனால் பல புலம்பெயர்ந்த பொறியாளர்கள் தகுந்த வேலை வாய்ப்புகளை பெற முடியாமல் உள்ளனர். இந்தப்பின்னணியில் பொறியியல் பணிக்கான தகுதிச் சான்றிதழ் அங்கீகாரம், வேலை தேடல் குறிப்பு, சுயவிவர (CV) ஆலோசனைகள் மற்றும் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கும் முறைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

  37. 131

    Indigenous sport in Australia: Identity, culture and legacy - விளையாட்டுத்துறையில் அழியாத தடத்தைப் பதித்துள்ள பூர்வீகக்குடி பின்னணிகொண்ட வீரர்கள்!

    Indigenous Australian athletes have long inspired the nation, uniting communities and shaping our identity. Olympian Kyle Vander-Kuyp and Matildas goalkeeper Lydia Williams are two such Indigenous athletes that have shaped our national identity. Their stories show the power of sport to foster inclusion, equality, and pride for future generations. - ஒரு தேசத்தை ஊக்கப்படுத்த என்ன தேவை? பல ஆஸ்திரேலியர்களுக்கு, இதற்கான பதில் விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடும். கால்பந்து மைதானத்திலிருந்து தடகள அரங்கம் வரை, ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி பின்னணிகொண்ட விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டின் விளையாட்டு வரலாற்றை வடிவமைத்துள்ளனர்.பல கலாச்சாரங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே இணைப்புகளை உருவாக்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

  38. 130

    How do you legally change your name in Australia? - ஆஸ்திரேலியாவில் உங்கள் பெயரை மாற்றுவதற்கான நடைமுறைகள் எவை?

    Choosing to legally change your name is a significant life decision that reflects your personal circumstances. Each year, tens of thousands of Australians lodge an application through the Registry of Births, Deaths & Marriages. If you’re considering a change of name, this episode takes you through the process. - உங்களது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் அல்லது குடும்பப் பெயரை எப்படி மாற்றுவது என்பது குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  39. 129

    How to respond when encountering wildlife on your property - உங்கள் வீட்டிற்கு வரும் வனவிலங்குகளை சமாளிப்பது எப்படி?

    Australia is home to an array of diverse and beautiful wildlife, and knowing how to respond when you encounter wildlife in your home or on your property will help protect our precious wildlife species whilst keeping you, your family and your pets safe. - உங்கள் வீட்டிற்குள் அல்லது காணிக்குள் வரும் வனவிலங்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவது, நமது விலைமதிப்பற்ற வனவிலங்கு இனங்களைப் பாதுகாக்க உதவுவதற்கும், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் செல்லப்பிராணிகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் முக்கியம். இது குறித்த விவரணத்தை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Phil Tucak. தமிழில் தருபவர் றேனுகா துரைசிங்கம்.

  40. 128

    The cervical screening test that could save your life - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான சோதனை!

    Cervical cancer is preventable, but only if you catch it early. Cultural and personal barriers have often meant that women avoid cervical cancer testing. But now with the help of a world-leading test, Australia is aiming to eliminate cervical cancer by 2035. The test is a safe and culturally sensitive option for women from all backgrounds. Best of all it could save your life—or that of someone close to you. - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனைத் தடுக்க முடியும். ஆனால், கலாச்சார மற்றும் தனிப்பட்ட தடைகள் காரணமாக பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர் என்று தரவுகள் சொல்கின்றன. ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  41. 127

    What is forced marriage and what support is available in Australia? - கட்டாய திருமணத்தை எதிர்கொள்பவர்களுக்கு என்ன உதவி கிடைக்கிறது?

    A forced marriage occurs when one or both individuals do not consent freely, often due to threats, coercion, deception, or if they are under 16 or those with mental incapacities. No matter how long you've been living here, it's vital to know: You have the right to choose who you marry.  In this episode, we'll explore the difference between arranged and forced marriage and where you can turn for help if you or someone you know is affected.  - நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ கட்டாயத் திருமணத்தினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து விடுபட என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  42. 126

    A beginner’s guide to owning a pet in Australia - ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!

    Bringing a pet into your home can fill it with joy and companionship – but it also comes with important responsibilities. In Australia, new pet owners need to be aware of legal requirements, along with essential tips for training and caring for their animals. - சட்டப்பூர்வ கடமைகள் முதல் அன்றாட பராமரிப்பு வரை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு புதிய செல்லப்பிராணி உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  43. 125

    Is Australian tap water safe to drink?  - நாம் குடிக்கும் குழாய் நீர் பாதுகாப்பானதா?

    Access to safe drinking water is essential, and Australia’s often harsh environment means that our drinking water supplies are especially precious. With differences in the availability and quality of drinking water across the country, how do we know if it’s safe to drink? In this episode we get water experts to answer this question and more.   - நமது குடிநீர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா முழுவதும் குடிநீரின் கிடைக்கும் தன்மை மற்றும் தரத்தில் வேறுபாடுகள் உள்ளன, அவை தண்ணீர் எங்கிருந்து பெறப்படுகிறது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நீர் குழாய்களின் நிலை மற்றும் சுத்திகரிப்பு வசதிகளைப் பொறுத்து உள்ளன. இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  44. 124

    DIY Renovations: What you need to know before getting started - உங்கள் வீட்டில் புதுப்பித்தல் பணிகளை தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

    Many Australians love rolling up their sleeves and undertaking their own home improvements. But before you grab a hammer or paintbrush, it’s essential to understand the rules and risks so you can renovate safely and legally. - உங்கள் சமையலறையைப் புதுப்பிக்கத் திட்டமிட்டாலும் சரி அல்லது ஒரு shed அமைக்கத் திட்டமிட்டாலும் சரி, அதைப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி இந்த விவரணத்தில் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Audrey Bourget. தமிழில் தருபவர் றேனுகா துரைசிங்கம்.

  45. 123

    Australia’s Indigenous education gap and the way forward - பூர்வீகக்குடி மாணவர்களுக்கான கல்வி: இடைவெளியை மூட என்ன வழி?

    Education is a pathway to opportunity, but for too long, Indigenous students in Australia have faced barriers to success. While challenges remain, positive change is happening. In this episode we’ll hear from Indigenous education experts and students about what’s working, why cultural education matters and how Indigenous and Western knowledge can come together to benefit all students. - பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் மத்தியில் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விகிதங்கள் குறைந்தளவில் உள்ளதுடன் அவர்கள் பள்ளிக்கு வருகை தரும் வீதமும் பல்கலைக்கழக பிரதிநிதித்துவமும் குறைவாகவே உள்ளது. இந்தப்பின்னணியில் கல்வி தொடர்பில் நிலவும் இந்த இடைவெளியை எவ்வாறு மூடுவது என்பது பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  46. 122

    What is a Justice of the Peace? When do you need one? - உங்கள் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு JP ஒருவரைக் கண்டுபிடிப்பது எப்படி?

    At some stage you will probably need help from a Justice of the Peace. It may be to prove your identity, to make an insurance claim or to certify copies of your legal documents in your language. JPs are trained volunteers who play a crucial role in the community by helping maintain the integrity of our legal system. So what exactly does a JP do and where can we find one when we need their services? - ஆஸ்திரேலியாவில் ஒரு Justice of the Peace- JPயின் பணிகள் எவை? உங்களுக்கு அவர்களின் சேவைகள் தேவைப்படும்போது ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  47. 121

    How is alcohol regulated and consumed in Australia? - ஆஸ்திரேலியாவில் மது தொடர்பில் உள்ள கட்டுப்பாடுகள் எவை?

    In Australia, alcohol is often portrayed as part of social life—especially at BBQs, sporting events, and public holidays. Customs like BYO, where you bring your own drinks to gatherings, and 'shouting' rounds at the pub are part of the culture. However, because of the health risks associated with alcohol, there are regulations in place. It’s also important to understand the laws around the legal drinking age, where you can buy or consume alcohol, and how these rules vary across states and territories. - ஆஸ்திரேலியாவில் மதுப்பாவனை மற்றும் அதை வடிவமைக்கும் விதிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  48. 120

    How to start your home business in Australia - வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்க விரும்புகிறீர்களா?

    Did you know that people offering taxi services from home need to register for Goods and Services Tax (GST)—regardless of how much they earn? Or that a fitness instructor needs local council approval to see clients at home? In this episode, we unpack the basic rules you need to know when setting up a home-based business in Australia. - உங்கள் வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விதிமுறைகள் மற்றும் முக்கிய படிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  49. 119

    First Nations representation in media: What’s changing, why it matters - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதித்துவம்: என்ன மாறுகிறது, ஏன் அது முக்கியம்?

    The representation of Indigenous Australians in media has historically been shaped by stereotypes and exclusion, but this is gradually changing. Indigenous platforms like National Indigenous Television (NITV) and social media are breaking barriers, empowering First Nations voices, and fostering a more inclusive understanding of Australia’s diverse cultural identity. Learning about these changes offers valuable insight into the country’s true history, its ongoing journey toward equity, and the rich cultures that form the foundation of modern Australia. Understanding Indigenous perspectives is also an important step toward respectful connection and shared belonging. - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்கள் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்படுவதை நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். ஆனால் இது படிப்படியாக மாறி வருகிறது. தேசிய பூர்வீகக்குடி தொலைக்காட்சி (National Indigenous Television - NITV) மற்றும் சமூக ஊடகங்கள் பல தடைகளை உடைத்து பூர்வீகக் குடிமக்களின் குரல்களை மேம்படுத்தி, ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளம் குறித்த புரிதலை வளர்த்து வருகின்றன. இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது, நாட்டின் உண்மையான வரலாறு, சமத்துவத்தை நோக்கிய அதன் தொடர்ச்சியான பயணம் மற்றும் நவீன ஆஸ்திரேலியாவின் அடித்தளத்தை உருவாக்கும் வளமான கலாச்சாரங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குகிறது. பூர்வீகக் கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்வது மரியாதைக்குரிய இணைப்பு மற்றும் பகிரப்பட்ட சொந்தத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.

  50. 118

    How home and contents insurance works in Australia - வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் மீதான காப்பீடு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

    Home and contents insurance is a safety net many households expect to rely on during difficult times. But it’s also a financial product that even experts can find challenging to navigate. Whether you own or rent your home, understanding your level of cover, knowing what fine print to look out for, and learning how to manage rising premiums can help you make more informed choices as a consumer. - உங்கள் வீடு அல்லது உடமைகளை ஆபத்தில் ஆழ்த்தும் சம்பவங்கள் மனதுக்கு இனிமையானவை அல்ல - ஆனால் அவை அசாதாரணமானவை அல்ல. இதனால்தான் வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் மீதான காப்பீடு அவசியமாகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.

HOSTED BY

SBS

Produced by SBS Audio

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் have?

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் about?

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.

How often does ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் release new episodes?

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்?

You can listen to ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்?

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் is created and hosted by SBS.
URL copied to clipboard!