அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar podcast artwork

PODCAST · religion

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai. Here Dr Vijayalakshmi Ramshankar sings the poems and explains the meaning of every line with her insights into Saktham Philosophy.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Sep 6, 2025 · Source feed

  1. 100

    Song 100 - அம்பிகையை மனத்தில் காண

    குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும் விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும், உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

  2. 99

    Song 99 - அருள் உணர்வு வளர

    குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

  3. 98

    Song 98 - வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

    தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக் கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே? மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள் பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே.

  4. 97

    Song 97 - புகழும் அறமும் வளர

    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன் போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

  5. 96

    Song 96 - எங்கும் பெருமை பெற

    கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால் ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

  6. 95

    Song 95 - மன உறுதி பெற

    நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக் குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

  7. 94

    Song 94 - மனநிலை தூய்மையாக

    விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம் அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து, சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம் தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.

  8. 93

    Song 93 - உள்ளத்தில் ஒளி உண்டாக

    நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

  9. 92

    Song 92 - மனநிலை பக்குவமடைய

    பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன் இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்; முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

  10. 91

    Song 91 - அரசாங்கச் செயலில் வெற்றி பெற

    மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன் புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

  11. 90

    Song 90 - கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க

    வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப் பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

  12. 89

    Song 89 - யோக சித்தி பெற

    சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

  13. 88

    Song 88 - எப்போதும் அம்பிகை அருள் பெற

    பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள் தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம் புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!

  14. 87

    Song 87 - செயற்கரிய செய்து புகழ் பெற

    மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.

  15. 86

    Song 86 - ஆயுத பயம் நீங்க

    மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்; பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

  16. 85

    Song 85 - துன்பங்கள் நீங்க

    பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும், வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

  17. 84

    Song 84 - சங்கடங்கள் தீர

    உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல் இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

  18. 83

    Song 83 - ஏவலர் பலர் உண்டாக

    விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும் பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும் உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

  19. 82

    Song 82 - மன ஒருமைப்பாடு அடைய

    அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும் களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு, வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.

  20. 81

    Song 81 - நன்னடத்தை உண்டாக

    அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும் பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

  21. 80

    Song 80 - பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட

    கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம் காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

  22. 79

    Song 79 - கட்டுகளில் இருந்து விடுபட

    விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.

  23. 78

    Song 78 - சகல செல்வங்களையும் அடைய

    செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக் கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.

  24. 77

    Song 77 - பகை அச்சம் நீங்க

    பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர் உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.

  25. 76

    Song 76 - தனக்கு உரிமையானதைப் பெற

    குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

  26. 75

    Song 75 - விதியை வெல்ல

    தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும் பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

  27. 74

    Song 74 - தொழிலில் மேன்மை அடைய

    நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும் அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப் பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

  28. 73

    Song 73 - குழந்தைப் பேறு உண்டாக

    தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு; யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

  29. 72

    Song 72 - பிறவிப் பிணி தீர

    என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின் நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்? தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

  30. 71

    Song 71 - மனக்குறைகள் தீர

    அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

  31. 70

    Song 70 - நுண் கலைகளில் சித்தி பெற

    கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

  32. 69

    Song 69 - சகல சௌபாக்கியங்களும் அடைய

    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

  33. 68

    Song 68 - நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

    பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும், ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.

  34. 67

    Song 67 - பகைவர்கள் அழிய

    தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம் கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.

  35. 66

    Song 66 - கவிஞராக

    வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

  36. 65

    Song 65 - ஆண்மகப்பேறு அடைய

    ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம் முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

  37. 64

    Song 64 - பக்தி பெருக

    வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப் பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக் காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

  38. 63

    Song 63 - அறிவு தெளிவோடு இருக்க

    தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

  39. 62

    Song 62 - எத்தகைய அச்சமும் அகல

    தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச் செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.

  40. 61

    Song 61 - மாயையை வெல்ல

    நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்? தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

  41. 60

    Song 60 - மெய்யுணர்வு பெற

    பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?

  42. 59

    Song 59 - பிள்ளைகள் நல்லவர்களாக வளர

    தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும் அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும் பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

  43. 58

    Song 58 - மனஅமைதி பெற

    அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும், சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

  44. 57

    Song 57 - வறுமை ஒழிய

    ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.

  45. 56

    Song 56 - யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

    ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

  46. 55

    Song 55 - மோனநிலை எய்த

    மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.

  47. 54

    Song 54 - கடன் தீர

    இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

  48. 53

    Song 53 - பொய்யுணர்வு நீங்க

    சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

  49. 52

    Song 52 - பெருஞ்செல்வம் அடைய

    வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

  50. 51

    Song 51 - மோகம் நீங்க

    அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார் மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai. Here Dr Vijayalakshmi Ramshankar sings the poems and explains the meaning of every line with her insights into Saktham Philosophy.

HOSTED BY

Abhirami Andadhi by Viji

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar have?

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar about?

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai....

How often does அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar release new episodes?

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar?

You can listen to அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar?

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar is created and hosted by Abhirami Andadhi by Viji.
URL copied to clipboard!