PODCAST · arts
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
by Solvanam சொல்வனம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
-
1000
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பிரதீப் பாரதி- சுழற் பிரயாணம்- சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பிரதீப் பாரதி- சுழற் பிரயாணம்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.மருத்துவத் துறை சார்ந்த பிரதீப் பாரதி சிறந்த இலக்கிய வாசகர். . ஜெயமோகனை தன் ஆசிரியராக கருதுகிறார். டாலஸ் டெக்சாஸஸில் நண்பர்களுடன் இணைந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடக்கும் இலக்கிய கலந்துரையாடலை ஒருங்கிணைக்கிறார்.சொல்வனத்தில், மருத்துவத்தில் நிலைத்தவையும் , அழிந்தவையும் என்றதலைப்பில் வெவ்வேறு உலக நாகரீகங்களின் தொன்ம கதைகள், வரலாறு, இலக்கியம் மற்றும் தத்துவம் வழியே மருத்துவத்தின் வளர்ச்சி படிநிலைகள் பற்றி 13 கட்டுரைகள் கொண்ட அபுனைவு தொடர் எழுதி இருக்கிறார்..முதல் சிறுகதையான சுழற்பிரயாணம் இந்த ஆண்டு ஜனவரியில் சொல்வனத்தில் வெளியாகியது. “சுழற்பிரயாணம்” சிறுகதை, அதிகாரம், ஆன்மீகம், மனித மனதின் இருள் மற்றும் வாரிசுரிமைச் சுழற்சி ஆகியவற்றை மிக நுணுக்கமாகப் பேசுகிறது. ஒரு பிரமாண்டமான ஆசிரமத்தின் பின்னணியில், குரு-சீடர் உறவின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் வன்முறையையும் தந்திரத்தையும் இக்கதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/சுழற்பிரயாணம்/
-
999
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சுகவனேஸ்வரன் - எது தர்மம்?- சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சுகவனேஸ்வரன் - எது தர்மம்?- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.கால்நடை மருத்துவர் சுகவனேஸ்வரனின் இயற்பெயர் கே. எஸ். ஸ்ரீராம்.சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் (Madras Veterinary College) முதுநிலைப் பட்டம் (M.V.Sc – கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை ) பெற்று. தங்கப் பதக்கம் வாங்கி தமிழ்நாடு அரசு பணியில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார் அமேஸானில் வெளிவந்துள்ள “நினைவணை உடைப்பு” என்ற தமிழ் கவிதைத் தொகுப்பின் சொந்தக்காரர். . விரைவில் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவர உள்ளது “நான் சிவனாகிறேன்” என்ற இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பை ஒரு போட்டிக்கு சமர்ப்பித்துள்ளார். கதையை வாசிக்க: https://solvanam.com/2026/02/22/எது-தர்மம்/
-
998
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2- காந்தி மீது எழுத்துலகப் பிரயாணம் - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2- காந்தி மீது எழுத்துலகப் பிரயாணம் - சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் எழுத்துலகத்தின் மிகச்ச் சிறந்த படைப்பாளரில் ஒருவர். . இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு , சமர்க்களம் என்கிற சிறுகதை நூல்களும், சக்கை, புனிதம், அற்றைத் திங்கள், ஆலகாலம், காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?,ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேய்புரி பழங்கயிறு என்கிற நாவல்களும் வெளிவந்துள்ளன.இவர் பெற்றுள்ள விருதுகளும் ஏராளம். பொதுப்பணித் துறையில் பணி புரிபவர்.இவர் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய அழகியநாயகியம்மாள் விருது , திருப்பூர் அரிமா சங்கம் சக்தி விருது , புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது , இலக்கியச் சிந்தனை விருது , “தாழ்வாரம்“ சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது, Sparrow விருது 2021 போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த விருதுகளைப் பெற்றுள்ளார்இவரது படைப்புகளான சக்கை நாவல் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரி, பி.ஏ. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடு சிறுகதை நூல் கோவை அரசுக் கலைக்கல்லுாரியில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.காந்தி மீது ஈர்ப்பு எப்படி வந்து ஹரிலால் s/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நாவலும் தேய்புரி பழங்கயிறு எழுதியது பற்றியும் கூறுகிறார். மேலும் அவர் கலந்து கொண்ட நியூ யார்க்கில் நடந்த Living Tamil LitFest நிகழ்ச்சியில் தன் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
-
997
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2 - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2 - சரஸ்வதி தியாகராஜன்எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் எழுத்துலகத்தின் மிகச்ச் சிறந்த படைப்பாளரில் ஒருவர். . இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு , சமர்க்களம் என்கிற சிறுகதை நூல்களும், சக்கை, புனிதம், அற்றைத் திங்கள், ஆலகாலம், காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?,ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேய்புரி பழங்கயிறு என்கிற நாவல்களும் வெளிவந்துள்ளன.இவர் பெற்றுள்ள விருதுகளும் ஏராளம். பொதுப்பணித் துறையில் பணி புரிபவர்.இவர் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய அழகியநாயகியம்மாள் விருது , திருப்பூர் அரிமா சங்கம் சக்தி விருது , புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது , இலக்கியச் சிந்தனை விருது , “தாழ்வாரம்“ சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது, Sparrow விருது 2021 போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த விருதுகளைப் பெற்றுள்ளார்இவரது படைப்புகளான சக்கை நாவல் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரி, பி.ஏ. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடு சிறுகதை நூல் கோவை அரசுக் கலைக்கல்லுாரியில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.காந்தி மீது ஈர்ப்பு எப்படி வந்து ஹரிலால் s/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நாவலும் தேய்புரி பழங்கயிறு எழுதியது பற்றியும் கூறுகிறார். மேலும் அவர் கலந்து கொண்ட நியூ யார்க்கில் நடந்த Living Tamil LitFest நிகழ்ச்சியில் தன் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
-
996
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில்.'பரகாயம்'. இக்கதை மனிதனின் அக உணர்வுகளுக்கும், புற உலகின் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை மிக நகைச்சுவையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுகிறது. சற்குருநாதனின் அந்த அரை அடி அந்தர வெளி, ஒரு சாமானியனின் ஆன்மீக ஏக்கமா அல்லது மனப்பிரமையா என்று மனதில் தோன்றுகிறது. ஒரு மனிதன் தன் சாதாரண வாழ்விலிருந்து வெளியேறி வேறொரு நிலைக்குச் செல்லத் துடிக்கும் வேட்கையை நீங்கள் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். லௌகீக வாழ்வின் எலிப்பொறிகளுக்கு இடையில் ஆன்மீகச் சிறகுகளைத் தேடும் சற்குருநாதன்கள் நம்மிடையே உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலும்.
-
995
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஶ்ரீரஞ்சனி- மௌனத்தின் சுமை- சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஶ்ரீரஞ்சனி- மௌனத்தின் சுமை- சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/மௌனத்தின்-சுமை/யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். மௌனத்தின் சுமை” கதை ஒரு குடும்ப இழப்பின் துயரத்தை மட்டும் சொல்லும் கதை அல்ல; பேசப்படாமல் மனத்தின் அடுக்குகளில் தேங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் எவ்வாறு ஒரு வாழ்வையே கனமாக மாற்றுகின்றன என்பதையும் மிகவும் அமைதியான ஆனால் ஆழமான முறையில் நமக்குள் வைக்கிறது.இந்தக் கதையில் ஒரு தாயின் உள்ளார்ந்த வேதனை, குற்றவுணர்வு, புரிந்து கொள்ள முடியாத ஒரு மௌனம், தலைமுறை இடைவெளி, புலம்பெயர் வாழ்க்கையின் உளவியல் அழுத்தம் — இவை அனைத்தும் மிக இயல்பாக பின்னப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரிய சம்பவங்களை விட அன்றாட வீட்டு தருணங்கள் வழியாகவே வலி நம்மை அடைகிறது என்பது இந்தக் கதையின் பெரிய பலம்
-
994
பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்
பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.எழுத்தாளர் பிரம்ம ராக்ஷஸன் இயற்பெயர் A G ஸ்ரீநிவாசன். M.Com, ACS (Inter) படித்து, சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே நூல்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர். அவப்போது கட்டுரைகள் கதைகள் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் "சித்தாந்த ரத்தினம்" எனும் பட்டம் பெற்றுள்ளார். கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/24/பைசாசம்/
-
993
ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்
ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.டேனியல்புரம்” சிறுகதை, தொழிற்சாலை மாசு, அரசு அலட்சியம், நிறுவன லாப நோக்கம், சாதாரண மக்களின் நோய், மரணம் போன்ற சமூகநீதிக் கேள்விகளை மையமாகக் கொண்ட ஒரு நவீன அரசியல்–சமூகக் கதையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் உண்மை வெளிப்பட வேண்டிய அவசியமும், அதிகாரங்கள் அதை மறைக்கிற விதமும், அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண குடும்பங்களின் வலியும் கதையில் இடம் பெறுகின்றன. இன்று நம்முடன் இணைய இருப்பவர் இந்த அருமையான கதையை எழுதிய எழுத்தாளர் ராமையா அரியா அவர்கள். ராமையா அரியா திருநெல்வேலிக்காரர். இருபது வயதில் இருந்து எழுதி வருகிறார். கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். அவருடைய பல சிறுகதைகள், திரைக்கதைகள் மற்றும் குறுநாவல் சொல்வனத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன் 2014-ல் அவருடைய ஆங்கில நாவல் "The Exorcism of Satish Kumar, MBA" Westland பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.நகைச்சுவையைப் பிரதானமாக வைத்துக் கதைகள் எழுதுபவராக இருந்தாலும், ஒரு அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியதால் சம காலத்து அரசியல், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைக் குறித்த விமரிசனம் வைக்கும் அரசியல் திரில்லர்கள் சமீபத்தில் எழுதி வருகிறார். அவற்றில் ஒன்றே டேனியல்புரம் என்னும் இந்தச் சிறுகதை. சமூக வலைத்தளங்களில் நிகழும் வினோதமான இருபட்சவாதம் (polarization) இந்தக் கதையின் அடிப்படை.கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/02/09/டேனியல்புரம்/
-
992
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.கௌதம் நாராயணன் அவர்கள் திருநெல்வேலிக்காரர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக எழுத்துலகில் உள்ளார். இவர் ஆங்கிலத்தில் சோனியா என்ற ஒரு நாவலும், தமிழில் கறை என்ற நாவலும் வெளியிட்டிருக்கிறார். நிறைய இவரது சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. . எண்ணூறு பக்கங்கள் கொண்ட இவரது நீண்ட நாவல் ஒன்று வெளிவர உள்ளது. திருநெல்வேலியின் பின்னணியில், ஒரு மழைக்கால இரவில் தொடங்கும் இந்தக் கதை, ஆட்டோ ஓட்டுநரான முத்தப்பன் என்பவரின் வாழ்வின் ஒரு பகுதியை நமக்குக் காட்டுகிறது. வெறும் ஒரு பயணத்தைப் பற்றிய கதையாகத் தொடங்கி, மெல்ல மெல்ல மனித மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் வஞ்சம், இழப்பு மற்றும் கடந்த கால நிழல்கள் எழுப்பும் ஓலத்தைப் பற்றிப் பேசுகிறது. அமைதியாகத் தோன்றும் ஒரு வாழ்வின் பின்னால் எவ்வளவு பெரிய கொந்தளிப்புகள் இருக்கக்கூடும் என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
-
991
Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajan
Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajanதிரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.
-
990
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்ஸஜு கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும்இணைத்துப் பயணிக்கும் ஒருவர்.கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும்,சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம்அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு,“துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாகவாசகர்களை அடைந்தது.செண்டை மேளக் கலைவாழ்க்கையை“கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி,ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர்.“ஆற்றுமாடன் தம்புரான்” என்றநாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு நூல் “தெய்யத்தின் முகங்கள்”விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதைப் பெற்றுத் தந்துள்ளது. மனிதர்களின் புன்னகையையும், மரணத்தின் புன்னகையையும் ஒரே சமயத்தில் சுமக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம் இந்தக் கதைகதையை வாசிக்க:-https://solvanam.com/2025/12/14/மரணப்-புன்னகை/
-
989
Solvanam- Thendral மதுரபாரதி Nerkanal by Saraswathi Thiagarajan
திரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.
-
988
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஷைலஜா - மதியொன்றில்லை..- சரஸ்வதி தியாகராஜன்
எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின்புனைபெயர் ஷைலஜா. இவர்400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார். திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார். பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது.இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசிமதியொன்றில்லை” என்ற இந்தக் கதை,வெறும் பக்திக் கதையோ,நகர–கிராம முரண்பாட்டுக் கதையோ அல்ல.இது ஒரு சொல்லின் பொறுப்பைப் பற்றிய கதை.ஒரு இளம் வயதில் சொன்ன ஒரு வாக்கியம்,இன்னொருவரின் வாழ்வையே திசைமாற்றியிருக்கும் போதுஅந்த வாக்கியத்தைச் சொன்னவன்அதன் ஆழத்தை உணர்ந்த தருணமே இந்தக் கதை.கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/10/மதியொன்றில்லை/
-
987
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவரது புதினம் ‘ கனவு மெய்ப்படும்’ திருப்பூர், எட்டயபுரம், மாநில வங்கி,, என் எல் சி நிறுவன விருது என நான்கு பரிசுகள் பெற்றது. ‘நெருப்புக்கு ஏது உறக்கம்.’ என்னும் புதினம் தமிழ அரசின்பரிசும் , சேலம் தாரையார் விருதும் பெற்றது.ஆங்கில இலக்கித்திலும் ஈடுபாடு உடைய இவர் ‘ரெயின் போ’ என்னும் கவிதை நூலையும், ‘பேகனும் திருவள்ளுவரும்’ ஒப்பீட்டு நூலையும் எழுதினார்.” மனசுப் போல” என்ற இவர்கதை ஒரு குடும்பப் பயணம், ** எதிர்பாராத விபத்து**, மற்றும் வீட்டுச் சாவி தொலைந்த பதற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தின் யதார்த்தமான அனுபவங்களை நகைச்சுவை கலந்த நடையில் விவரிக்கிறது.நடுத்தர வர்க்கத்தின் எளிய ஆசைகளையும், மனிதத் திட்டமிடல்களுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் எதார்த்தத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுபவர்கள் நெருக்கடி நேரத்தில் தாராளம் காட்டுவது போன்ற மனித முரண்களையும், தொலைந்த சாவி மீண்டும் கிடைப்பது போன்ற விதியின் விளையாட்டையும்இக்கதை நுணுக்கமாகப் பேசுகிறது. வட்டார மணமும் கலகலப்பான நடையும் கொண்ட இப்படைப்பு, வாழ்வின் சோதனைகளுக்கு இடையில் 'அனைத்தும் நன்மையில் முடியும்' என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது
-
986
எழுத்தாளர்- சார்பினோ டாலி - கிருஷ்ண லீலை- சரஸ்வதி தியாகராஜன் -சொல்வனம்- புனைவு வனம்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சார்பினோ டாலி - கிருஷ்ண லீலை- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். கிருஷ்ண லீலை’ — குடும்ப உறவுகள், தலைமுறை மோதல்கள், உள் விரிசல்கள், தனிமை, தன்னம்பிக்கை, மனச்சோர்வு, ஆண்மையின் அழுத்தம், சமூகப் பொறுப்புகள் போன்ற பல அடுக்குச் சிக்கல்களை அழகாக வெளிப்படுத்துகிறது.கதை முழுவதும் ஓர் தனிமனிதப் போராட்டத்தைச் சித்திரிக்கும் உளவியல் நதி போல ஓடுகிறது.கிருஷ்ணன் எனும் நண்பன் கொண்டு வரும் தத்துவ நுணுக்கங்கள் கதையின் ஓட்டத்துக்கு வித்தியாசமான ஒளியை அளிக்கின்றன.இந்த தத்துவ உரையாடல் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்வையே நம் முன் புதியப் பார்வையில் திறக்கும் என்று தோன்றுகிறது.
-
985
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பத்மகுமாரி - சிப்பிகளின் சிதறல்- சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பத்மகுமாரி - சிப்பிகளின் சிதறல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். 2023 டிசம்பர் மாத இறுதியில் இவரது சிறுகதைத் தொகுப்பு புத்தகம் "நட்சத்திரம்" வெளியாகி உள்ளது.சிப்பிகளின் சிதறல்’ கதையில் சின்னவியல், மனித உளவியல், மற்றும் சமூக விமர்சனம் மிக அழகாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.சிப்பிகளின் சிதறல்’ ஒரு சாதாரண கதை அல்ல; அது மனித வலியின் மறைபடிமங்கள், உடைந்த மனத்தின் குரல்கள், மறைந்த நினைவுகளின் நிழல்கள், சமூகவியல் சாயல்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சுமந்து செல்லும் ஒரு உள் பயணம்.
-
984
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். சிவா என்ற இயற்பெயர் கொண்ட தெரிசை சிவாவின் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு ஆகும். வேதியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும். மேலும் வெளியாகி உள்ள இவரது புத்தகங்கள் தாச்சி, தகர் என்பன ஆகும். மண்சார்ந்த வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்குப் பரிசு கொடுக்கும் காலக்ஸி குழுமம் 2025 ஆம் ஆண்டுக்கான பாண்டியன் பொற்கிழி பரிசை தெரிசை சிவா அவர்களுக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது.
-
983
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்Part2- சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா, பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது'அமரர் சுஜாதா’ விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, ஜி யூ போப் விருது, ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ விருது, அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது விஜயா வாசகர்வட்ட விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளாக'பருவங்கள்மாறும்', 'புதிய பிரவேசங்கள்', ‘தடை ஓட்டங்கள்', தேவந்தியும் வெளிவந்துள்ளன. யாதுமாகி, தடங்கள், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், நாவல்களும்இவற்றைத் தவிர நிறைய மொழிபெயர்ப்பு நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
-
982
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா, பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது'அமரர் சுஜாதா’ விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, ஜி யூ போப் விருது, ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ விருது, அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது விஜயா வாசகர்வட்ட விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளாக'பருவங்கள்மாறும்', 'புதிய பிரவேசங்கள்', ‘தடை ஓட்டங்கள்', தேவந்தியும் வெளிவந்துள்ளன. யாதுமாகி, தடங்கள், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், நாவல்களும்இவற்றைத் தவிர நிறைய மொழிபெயர்ப்பு நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
-
981
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் பிரதிலிபி இணையத்தளம் ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதியஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, சொல்வனத்தில் தொடராக வந்த டால்ஸ்டாயின் ‘ "காகசஸ் மலைக்கைதி" (Caucasus Prisoner) ’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.மற்றும் மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்ற ‘சித்ரா’ , குவிகத்தில் “கங்கை எனது தாய்” என்ற குறும்புதினம் போன்ற படைப்புகள் இவரின் இலக்கியப் பயணத்தின் சான்றுகள். தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!, ஸ்ரீ அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் மொழிபெயர்ப்பு, பருவம் பற்றி கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார் “தெய்வக் குழந்தைகளைப் பாடும் பிள்ளைத்தமிழ்” என்ற காணொளித் தொடரில் அழகாகப் பாடி அருமையாக விளக்கமும் அளித்துள்ளார் .
-
980
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’ஊழிப் பெருவெள்ளம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’ஊழிப் பெருவெள்ளம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/ஊழிப்-பெருவெள்ளம்/சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். இவரது ஊழிப் பெருவெள்ளம் சிறுகதை 2015 சென்னை வெள்ளத்தைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு குடும்பத்தின் அனுபவத்தை விவரிக்கிறது. கதை நகைச்சுவை, பதற்றம், உணர்ச்சி ஆகியவற்றை இழைத்துக் கலந்து வழங்குகிறது. உயிர் காப்பான் தோழன் என்பது ஒரு பழைய சொல் வழக்கு. ஆனால் உயிர் காக்கும் பட்டம் சான்றிதழ் என்று கதை உணர்த்துகிறது
-
979
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்-அமீரா கார்த்திக் -’தும்ரி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்-அமீரா கார்த்திக் -’தும்ரி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/தும்ரி/ இயற்பெயர் கார்த்திகேயன் . ஆசிரியராக பணியாற்றுகிறார்ஆமிரா , ஆமிராபாலன் என்ற பெயர்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகின்றார் .இவர் எழுதிய சிறுகதைகள் சொல்வனத்தில் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிறுகதைகளும் எழுதி வருகிறார். இந்தோனேஷிய கவிஞர் (Sapardi Djoko Damono) சபார்டினோ ஜோக்கோ தமனோவின் கவிதைகளை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்திருக்கிறார்.) நீங்கள் எழுதிய “தும்ரி” கதை, இலக்கியம், இசை இணைந்து வெளிப்படும் காதல் உணர்வுகளின் ஆழமான பயணத்தையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், இசை மற்றும் இலக்கியத்தின் வழியாக மானுட அனுபவங்களை ஆராயும் ஒரு புனைகதையாக விளங்குகிறது. இந்தக் கதை, உணர்ச்சி மற்றும் கலை வெளிப்பாட்டின் கலவையாக, தனிமனித உணர்வுகளின் பல கோணங்களையும், அவை சமூக மற்றும் கலாச்சார சூழல்களுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் ஆராய்கிறது.
-
978
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- M. A. சுசீலா -’முகமூடி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- M. A. சுசீலா -’முகமூடி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2021/03/14/முகமூடி/இவரது “முகமூடி” ஒரு உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான சிறுகதை. இது ஒரு எளிமையான யாத்திரை அனுபவத்தின் பின்னணியில் மனித உறவுகள், எதிர்பாராத உதவி, இழப்பின் வலி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசுகிறது. கதை, அக்கா மற்றும் அம்மு என்ற மூத்த குடிமக்கள் இருவரின் கேதார்நாத் யாத்திரைக்கான முயற்சியைச் சுற்றி நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் உதவும் ஒரு மர்மமான 'முகமூடி' அணிந்த மனிதரும் கதையின் மையக்கரு.இந்தக் கதை மனிதர்களை வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடக் கூடாது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.என்று எனக்குத் தோன்றுகிறது. எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.
-
977
சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/நிதீஷ் கிருஷ்ணா An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.இவரது எஸ்கார்ட் சிறுகதையில் நிதீஷ் தினமும் இரவு பணிக்குப் பின் அலுவலக காரில் விடுதிக்குத் திரும்பும்போது, பெண் சக ஊழியர்களை முதலில் இறக்கிவிட்டு, கடைசியாக அவரை விடுவதால் தாமதமாகிறது. இதைப் பற்றிப் பொறுப்பாளரிடம் புகார் செய்தபோது, பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு என்ற பதிலே கிடைத்தது. ஆனாலும் சில நாட்களுக்குப் பின், நிதீஷுக்கு இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்தும் சிறப்பு ஏற்பாடு கிடைத்தது. அன்று, அவருடன் ஒரு பெண் மட்டுமே பயணித்தாள். பயணத்தில், டிரைவர் ஒரு விபத்தை நினைவுகூர்ந்தார்—அதே காரில் முன்பு ஒரு விபத்து நடந்ததாகவும், அந்தப் பெண்தான் பின்னர் மீண்டும் அவருடன் பயணிக்கத் துணிந்ததாகவும் கூறினார். இரவில் ஒதுங்கிய பகுதியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டபோது, நிதீஷுக்கு பயமாக இருந்தது. ஆனால் டிரைவர் அமைதியாக, நாள்தோறும் நான் அவளுக்கு எஸ்கார்ட்தான் என்று சொல்லி, பாதுகாப்பான வாழ்வின் நிழலில் ஒரு கணம் நிற்கச் செய்தார். புறத்தே தோன்றாத பயங்களும், பாதுகாப்பின் அர்த்தங்களும் வாழ்க்கையில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
-
976
Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு எழுத்தாளர்: சோழன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'தருணங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சோழன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்எழுத்தாளர் சோழன்- சிறு முன்னுரை சோழன்சொந்த ஊர் தஞ்சாவூர். இயற்பெயர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரது தருணங்கள் கதை நம் தினசரி வாழ்வில் கவனிக்காமல் போவதை கவனமாக ரசிக்க வைக்கும். நம்மை சுற்றி நிகழும் இயற்கையும் மனித உறவுகளும் எவ்வளவு சுகமானவையென உணர வைக்கும் மென்மையான மற்றும் உள்ளுணர்வோடு கூடிய கதை இது. இய்ற்கையின் சத்தங்கள் அனைத்தும் பாடலாக அதன் மூலம் இன்னிசையாக உணரப்படுகிறது!
-
975
கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர். கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. "சாமத்தில் முனகும் கதவு" "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளனன.இவருடைய நாவல்கள்ரமணிகுளம், யாக்கை ஆகும் வாசகசாலை இலக்கிய விருதும், நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றுள்ளன
-
974
சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி
சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காவேரி'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சசிகலா ரகுராமன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்கதையை வாசிக்க: https://solvanam.com/2025/02/09/காவேரி/ சசிகலா ரகுராமன் கணிதம் படித்துவிட்டு, காப்பீட்டுத் துறையில் பணி புரிகிறார். ஒரு பக்கக் கதைகள் , சிறுகதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டுள்ளார் . சில சிறுகதைகள் இணையப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன . சில வருடங்களாக சொல்வனத்தின் தீவிர வாசகி இவர்.
-
973
சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை
சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'புத்தனின் புன்னகை'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: கலித்தேவன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/01/12/புத்தனின்-புன்னகை/ வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார்.40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்.சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மயிர் , அகழ் இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.கலித்தேவன் அவர்கள் சொல்வனத்தில் எழுதிய "புத்தனின் புன்னகை" கதை, மனித இயல்பின் சிக்கலான தன்மையையும், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறது.இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், பார்சல் கொடுக்கும் பணியாளரின் கதாபாத்திரம். பகலில் "புத்தர்" போன்ற அமைதியான புன்னகையுடன், பொறுமையின் உச்சமாகத் தோன்றும் ஒருவரே, இரவில் முழு போதையில், கட்டுப்பாட்டை இழந்து அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவதைக் காண்பது மிகவும் வியப்பளிக்கிறது. இது, மனிதர்கள் பல முகங்களைக் கொண்டவர்கள் என்பதையும், வெளிப்புறத் தோற்றத்திற்கும் உண்மை நிலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கலாம் என்பதையும் ஆழமாகச் சிந்திக்கும்படி தூண்டுகிறது. அவருடைய புன்னகை, ஒருவேளை சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகப் போடப்பட்ட முகமூடியாக இருக்கலாம், அல்லது அவரது ஆழ்மனதில் உள்ள அமைதியின் வெளிப்பாடாக, அவரது போதை நிலையிலும் கூட வெளிப்படலாம். இது ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு.மேலும், அவசரக்காரர் கதாபாத்திரமும், பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்களும் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மன அழுத்தங்களையும், பொறுமையின்மையையும் மிக யதார்த்தமாகப் பிரதிபலிக்கின்றன. மணிவாசகத்தின் பொறுமை, அமைதி, மற்றும் பிறருக்கு உதவும் குணம் ஆகியவை இந்த பரபரப்பான உலகில் ஒரு குளிர்ச்சியான நீரோடை போல இருக்கின்றன.கதையின் மையப்பகுதி ஆர்ய பவனில் நடக்கிறது. ஆர்ய பவனுக்கு வருவதற்கான முகாந்திரத்தை அழகாக் கொண்டு வந்திருக்கிறீர்கள் கலித்தேவன். கதையின் ஓட்டம், கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு ஆகியவை வாசிப்பதற்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன. இது வெறும் ஒரு சாதாராண சம்பவத்தை விவரிக்கும் கதை மட்டுமல்ல, மனித உளவியல் மற்றும் சமூக யதார்த்தங்கள் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.மொத்தத்தில், "புத்தனின் புன்னகை" ஒரு நல்ல சிந்தனையைத் தூண்டும் கதை.
-
972
புனைவுவனம் - ஆசிரியரைச் சந்திப்போம் H. N. ஹரிஹரன் - புகையும் நிஜங்கள் - உரையாடல்
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'புகையும் நிஜங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: H. N. ஹரிஹரன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்கதையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/புகையும்-நிஜங்கள்/H. N. ஹரிஹரன்விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. 1981 முதல் கதைகள் எழுதி வருகிறார். கல்கி,ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம் ஆகிய பிரபல பத்திரிக்கைகளிலும், பூபாளம் சிற்றிதழிலும் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.பூபாளம் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்திருக்கிறார். இப்போதும் அதன் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார்.வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் சொல்வனம், கல்கி, குமுதம், பூபாளம், லேடீஸ் ஸ்பெஷல், அமுதசுரபி பத்திரிக்கைகளிலும், குவிகம், சொல்வனம் மின்னிதழ்களிலும் அவரது கதைகள் வெளியாகி உள்ளன.‘எல்லாம் தெரிந்தவள்', 'கனவுச் சங்கிலி', ‘அப்பாவின் சைக்கிள்’, ‘கல்லடிப் பாலம்' எனும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், 'நீ இன்றி அமையாது உலகு' எனும்குறும்புதினத் தொகுப்பும் வெளியாகி உள்ளன.‘The Moplah Rebellion, 1921' எனும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ‘மாப்ளா கிளர்ச்சி, 1921’ எனும் தலைப்பில், 2021ம் ஆண்டு வெளியானது.தவிரவும், 'சார்தாம் யாத்திரை- பயணக்கட்டுரை', 'நன்மை தரும் நால்வர் பதிகங்கள்', 'பதினாறு பேறுகளையும் அளிக்கும் திருப்புகழ்' எனும் ஆன்மீக நூல்களும், 'நெகிழிவயலும், நியூசிலாந்து தமிழ் மணியும்' எனும் கட்டுரைத் தொகுப்பும் அமேசான் கிண்டில் மூலம்பிரசுரிக்கப்பட்டுள்ளன.பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று அவரது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.2023ல் குங்குமம் பத்திரிகையில் வெளியான அவரது ‘கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, 2023-24ம் வருடத்தின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது பெயரிலேயே வழங்கப்படும் பரிசாகும் இது.கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, குங்குமம் இதழின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது.இவரருடைய “புகையும் நிஜங்கள்” சிறுகதை நகர்ப்புற வாழ்க்கையின் சிக்கல்களை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. செந்தில் என்ற கதாநாயகனின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாடகை வீட்டு மாற்றத்தில் சுடுகாட்டின் அருகில் வாழும் அனுபவங்கள் மூலம், சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் அதாவது தாயின் மனநிலை போன்றவை வெளிப்படுகின்றன.
-
971
மதனின் நீலவாகா சிறுகதை கலந்துரையாடல் பங்கு பெற்றவர்கள் மதன், பாலாஜி , விஜய் . தொகுத்தளித்தவர் ஜமீலா. G
மதன் சோணாச்சலம் சியாட்டிலில் வசிக்கிறார். மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் இவர் தீவிர இலக்கிய வாசகர். கட்டுரைகள், உரைகள் ஆற்றியிருக்கிறார். https://medium.com/@sirukurippugal/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-e509842d7eeaஅவர் எழுதிய முதல் சிறுகதையான நீலவாகா பற்றிய கலந்துரையாடல் இது. கலந்து கொண்டவர்கள் திரு. மதன் சோணாச்சலம், திரு. பாலாஜி ராஜு, திரு. விஜய் சத்யா. தொகுத்தளித்தவர் ஜமீலா. Gநீலவாகா படிக்க:https://solvanam.com/2025/01/26/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE/காணொளி தயாரிப்பு: ஜமீலா. G
-
970
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல்
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: ராம் பிரசாத் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/இரண்டாம்-அடுக்கு-பிழைத்த/மயிலாடுதுறையில் பிறந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.சொல்வனம், கணையாழி, உயிரோசை, காவ்யா, வாசகசாலை, ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் Inexhaustible, Those Faulty Journeys, MeT App, Fancy Nuptials என்ற படைப்புகளும் தமிழில்ஒப்பனைகள் கலைவதற்கே ,உங்கள் எண் என்ன? அட்சயபாத்திரா, இரண்டு விரல்கள், வரதட்சணா, ஏஞ்சலின் மற்றும் சிலர், வதுவை - நாவல், வாவ் சிக்னல், 22028, மரபணுக்கள், தீசஸின் கப்பல்என்ற படைப்புகளும் வெளிவந்துள்ளன. ராம் அவர்களின் வாவ் சிக்னல் அறிபுனைச் சிறுகதைத் தொகுதிக்கு மாநில அரசின் விருது கிடைத்திருக்கிறது.ஜீரோ டிகிரி பப்ளிஷிங் 2022 இலக்கிய விருது, JCE - Distinguished Alumni Award - பெற்றுள்ளார்.
-
969
குஜராத் தமிழன்ஸ் என்பதே சரி? ஆரஞ்சு தொப்பி யாருக்கு - சாய் சுதர்சன் x விராட் கோலி
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி மோதியதில் பரிதாபகரமாக ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கின்ஸ் தோற்று விட்டது.எனினும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.இந்த நிலையில் கிரிக்கெட் ஆலோசகர் ராஜேஷ் கர்காவுடன் உரையாடல்.யார் கப் ஜெயிப்பார்கள்?எவர் அதிக ஆட்டங்கள் எடுத்து, நிறைய ரன் எடுத்ததற்காக ஆரஞ்சுத் தொப்பியை கைப்பற்றுவார்?எந்த வீரர் நிறைய பேரை ஆட்டமிழக்கச் செய்து அதிக விக்கெட்களைக் கைப்பற்றி ஊதாத் தொப்பியை வெல்வார்?மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து மூன்று ஆட்டங்களை வென்று ஹர்திக் பாண்டியாவிடம் கோப்பையைக் கொடுக்குமா?எந்த அணி எந்த மைதானத்துக்கு ஏற்றது?முந்தைய போட்டி வரலாறு, குறிப்பாக இந்த மைதானங்களில் நடந்த பிளே-ஆஃப் போட்டிகள்போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் அதிக தாக்கம் செலுத்தக் கூடிய வீரர்கள் யார்?பிளேஆஃப் (நாக்-அவுட்) போட்டியை வெல்லும் திறன் உள்ள வீரர்கள் உள்ள அணிகள் யாவை?லீக் மற்றும் பிளேஆஃப் போட்டிகளில் ஆடும் அணிகளின் மனநிலை வித்தியாசம் மற்றும் யாருக்கு அதிக முன்னிலை?ஏற்கனவே பிளேஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் எவ்வளவு முக்கியம்?முந்தைய பிளேஆஃப் போட்டிகளில் கேப்டன்களின் சிறப்பான முடிவுகள் என்ன?ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் ஆர்.சி.பி. போன்ற அணிகளுக்கு அது வரமா? சாபமா?ஒரு IPL-ஐ வெல்ல என்ன தேவை?
-
968
சுதா ஶ்ரீநிவாசன்- உயிரில் கலந்து - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'உயிரில் கலந்து'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சுதா ஶ்ரீநிவாசன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் சுதா ஶ்ரீநிவாசன் காப்பீட்டுத்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டவர். சமீபத்தில்தான் எழுதத் தொடங்கினார். சிறுவயது முதலே படிக்கும் பழக்கம் உண்டு. அம்புலிமாமா முதலாக கல்கி, சுஜாதா, வாஸந்தி, பாலகுமாரன் என நீளும் வரிசையில் தீவிர இலக்கிய வாசிப்பை வந்தடைந்தார். ‘எழுதுக’ என்னும் ஜெயமோகனின் சொல்லை கட்டளையாக எடுத்துக்கொண்டவர்களில் தானும் ஒருத்தி என்கிறார்.“உயிரில் கலந்து” என்ற சிறுகதை, குடும்பத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் பற்றிப் பேசுகிறது. திருமணம் நன்கு அமையவில்லையெனில் அதன் தாக்கம் எப்படி உணர்வுபூர்வமாக அவர்களைக் காயப்படுத்துகிறது என எடுத்துச் சொல்கிறீர்கள். ஆன்மீகத்தில் நாட்டமும் , உதவி செய்யும் மனப்பான்மையும் உடையவளாயினும் இந்த மனவேதனைகள் இவற்றையெல்லாம் மீறி அவள் உயிரை அவளே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவளைக் கொண்டு போகிறது. பெண்கள் மனதுதான் எவ்வளவு மென்மையானது. சில சமயம் கோழையாகவும் செயல்படுகிறார்களா?உங்கள் கதையின் மொழி நல்ல நேர்த்திஇது ஒரு பெண்ணின் தனிப்பட்ட கதையாக இருந்தாலும், அது பல பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. பிரேமா உயிரை மாய்த்துக்கொள்கிறாள். உயிர் போகுமுன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போகும்போது “ இதுதான் அவனுக்கான தண்டனை என்பாள். ஆனால் நிஜத்தில் தண்டனை ஏது? அவள் இறந்த பின் அவன் மீண்டும் மாப்ப்பிளை ஆகி தகப்பன் ஆகிறான். ஆனால் 25 வருடங்களாக அவள் நெருங்கிய உறவினருக்கு முக்கியமாக தங்கை ப்ரியாவிற்கு மனவேதனை ஆரம்பமாகிறது. காரணம் தேடுகிறாள். தற்கொலை செய்துகொண்டவர்கள் சென்றுவிடுகிறார்கள் அதன் பின் அந்த குடும்பம் மனதளவில் படும்பாட்டை நீங்கள் வெளிபடுத்தியுள்ளது அருமை. தங்கை ப்ரியாவிற்கு அவள் கணவன் மாதவன் மிகுந்த ஆறுதலாக இருப்பதில் தங்கை ப்ரியா கொடுத்து வைத்தவள். மொத்தத்தில், “உயிரில் கலந்து” என்பது ஒரு உளவியல் ரீதியான, ஒரு உணர்வுபூர்வமான சிறுகதைகதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/உயிரில்-கலந்து/
-
967
கங்காதரன் சுப்ரமணியம் - அறுபது நொடிகள் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
Solvanam.com புனைவு வனம்: கங்காதரன் சுப்ரமணியம் எழுதிய ’அறுபது நொடிகள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'அறுபது நொடிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: கங்காதரன் சுப்ரமணியம்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்சென்னையில் படித்து வளர்ந்து, தற்போது பெங்களூரில் குடியுருக்கிறார். பட்டயக் கணக்காளர் (C.A) பட்டம் பெற்று, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம். ‘ஜீயெஸ்’ என்ற புனைபெயரில் முதலில் எழுத ஆரம்பித்து, தற்போது ‘கங்காதரன் சுப்ரமணியம்’ என்று இயற்பெயரில் எழுதி வருகிறார்.இணையப் பத்திரிகைகளில் இவர் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.இந்த 'அறுபது நொடிகள்' கதையில், மும்பையில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கத் தந்தை தனது குடும்பச் சுமைகள், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வாழ்கிறார். ஒரு இரவில், அவர் தினசரி வேலைக்காக மும்பை லோக்கல் ரயிலில் பயணிக்கிறாரே, அப்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் பயங்கரமான 26/11 தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. அவர் ஒரே அறுபது நொடிகள் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருப்பதால்தான் உயிர் தப்புகிறார். இந்தச் சிறிய நேர இடைவெளி அவனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.Thanks ChatGPTசொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/அறுபது-நொடிகள்/
-
966
தலைமுறைகளின் மோதல் - மரபும் நவீனமும்: சிறுகதை நுணுக்கங்களும் அமைப்பும்: ஜெகதீஷ் குமார் உரையாடல்
கதையை வாசிக்க: https://solvanam.com/2022/10/23/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf/விவாதிப்போர்:ப்ரமோதினிநிர்மல்சாரதிஉரையாடுபவர்: கதை எழுதிய ஜெகதீஷ் குமார்"பேராசிரியரின் கிளி" கதையை மேற்கத்திய நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, குறிப்பாக ஜூலியன்Barnes' "The Sense of an Ending" அல்லது காஜுவோ இஷிகுரோவின் "Never Let Me Go" போன்ற கதைகளுடன் ஒப்பிடலாம். இக்கதைகளும் கடந்த கால நினைவுகள் மற்றும் அவற்றின் தாக்கங்களைப் பற்றியவை. அதேபோல், "பேராசிரியரின் கிளி" கதையும், கடந்த கால நினைவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் நுணுக்கமாக விவரிக்கிறது.இது நினைவுகள், காலப்போக்கின் தாக்கம், மற்றும் மனித உறவுகளின் மாறுபாடுகளை நுணுக்கமாக விவரிக்கிறது. கதையின் மொழி, அமைப்பு, மற்றும் கருப்பொருள் அனைத்தும், இதனை ஒரு சிறந்த இலக்கிய படைப்பாக மாற்றுகின்றன. மேற்கத்திய நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, இது ஒரு முக்கியமான தமிழ் சிறுகதையாகும்.
-
965
ஆளுமைகள் + சபைகள் + நண்பர்கள்: வ. ஸ்ரீனிவாசன் உரையாடல்: தெரிந்த இலக்கியவாதிகளும் தெரியாத விஷயங்களும்
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/இறவாமை-பகுதி-இரண்டு/உரையாடியவர்: சிவா துரைஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தத்துவம் என்ன?ஜெயகாந்தன் சபையில் என்ன பேசுவார்கள்?எழுத்தாளர்கள் விவாதிக்கும் விஷயங்கள் என்ன?சுஜாதா இலக்கியவாதியா?கோயம்புத்தூர் தியாகு புத்தக நிலையமும் சிறுவாணி வாசகர் வட்டமும் எவ்வாறு துடிப்புடன் இயங்குகின்றன?சிற்றிலக்கியமும் சிற்றிதழ் அரசியலும் - நல்ல சொற்பொழிவாளர்கள் நல்ல புனைவாளர்களா?விமர்சன இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?எதற்காக புகழ்பெற்றோரை சந்திக்கிறோம்?ஏன் மற்றவர்களின் துணையை நாடுகிறோம்?எதற்காகப் படிக்கிறோம்?சாட்ஜிபிடி அவதாரங்கள் நமக்கான வழிகாட்டல் துணை ஆகுமா?இது போன்ற பல கேள்விகளுக்கு வ. சீனிவாசன் விளக்கம் தருகிறார். விவாதிக்கிறார். எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் உடைய முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.இவரது நூல்கள் :- 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' கனவு மழை ' என்கிற சிறுகதைத் தொகுப்பு, வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு.இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.
-
964
சி.எஸ்.கே. தோல்விக்கு யார் காரணம்? நடுவர் x தோனி x ஏலம்?
சென்ற வார ஐ.பி.எல். க்ரிக்கெட் - ஏப். 28 முதல் மே 4, 2025 வரை ஆளுக்கு ஒரு அணிகள்.முதல் நான்கு அணிகள் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா?சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கின்றது?ராயல் சாலெஞ்சர்ஸ் பெங்களூரூ இந்த முறையாவது கப்பை அடிக்குமா?அஜிங்க்யா ரஹானே ஏன் பாவமாகக் காணப்படுகிறார்?விராட் கோஹ்லி எப்பொழுதாவது வெற்றிக்கு இட்டுச் செல்லும் ஆட்டக்காரரா? ஆபத்பாந்தவரா?இளம் வீரர்கள் வயது ஒரு பொருட்டா?உரையாடுபவர்கள்: 1. ராஜேஷ் கர்கா2. ராம்கி3. பாஸ்டன் ஸ்ரீராம்நெறியாளர்: தினேஷ் ஜெயபாலன்ஒருங்கிணைப்பாளர்: பாஸ்டன் பாலா
-
963
கனடாவை உலுக்கும் நாலு டி - டிரம்ப், துரூடோ, Tariff, Trade - ஜனநாயகம் தழைக்கும் தேர்தல்
உரையாடுபவர்: கனடா வெங்கட்கனடா தேர்தல் இன்று1. Trudeau மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார். எதனால் இந்த சரிவு? அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சறுக்கலுக்கு? 2. தற்போதைய பிரதமரும் (Mark) அதே லிபரல் கட்சிதான். அதனால் மேலும் வழுக்கிவிழத்தானே வய்ய்ப்பு? 3. Pierre இணையத்தில் டுருடோவ்வை கிண்டல் செய்தே புகழடைந்தார். அவருடைய அனுபவம் கனடாக்கு உதவுமா? 4. டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேரச்சொல்லி கிண்டல் பேசினார். அது கனேடியர்கள் மனதில் என்ன வகை அதிர்வுகளை கொடுத்தது? இந்த எலக்க்ஷனில் டிரம்பின் பங்கு என்ன?5. inflation, tariff & immigration - இந்த வருட எலக்ஷ்ஷனில் உலகம் தழுவிய விசயங்கள். கனடாவிலும் அப்பத்தானா? அது தவிர வேறு என்ன பெரிய விசயங்கள் இந்த தேர்தலில் முக்கியமானது? 6. டுருடோவின் வீழ்ச்சிக்கு பிறகு லிபரல் கட்சி பினிக்ஸ் போல எழும்புமா? என்ன சாத்தியங்கள் உண்டு? 7. ப்ளாக் க்யூபெக் & நியு டெமக்ராட்ஸ் உதவி இன்றி தனிப் பெரும்பான்மை ஆட்சி சாத்தியமா? 8. நியு டெமக்ராட்ஸ் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் கட்சி. ஆனால் கனடாவின் 17-20% ஓட்டுகளை பெறக்கூடிய திறனுள்ள கட்சி. கிங் மேக்கர் கட்சி, யாருடன் சேர்வார்கள்? 9. மார்க் / பியர் யார் டிரம்புடன் இணக்கமாக செல்வார்கள். மக்கள் எதை விரும்புகிறார்கள்10. இந்தியாவிற்கு யார் நல்லவர் ( மார்க் / பியர்)? 11. உங்கள் கணிப்பு என்ன?
-
962
ஜெயிக்கப் போவது யார்? கனடா தேர்தல் களம்: கனடாவில் இருந்து நேரடியாக அதிரடி பேட்டி - ரசனை ஸ்ரீராம்
வல்லுனர்: Nat Shriram / நடராஜன் ஸ்ரீராம்CEO - Visafy AI / CANext Immigrationஉரையாடுபவர்: தினேஷ் ஜெயபாலன்சற்றே சரித்திரம்.நிறைய தற்கால நடப்பு.கொஞ்சமே கொஞ்சம் ஆரூடம் _ கணிப்பு!சமீபத்திய கனடிய பொதுத் தேர்தல்கள் ஏன்/எப்படி நடைபெற்றன?சமீபத்திய தேர்தலில் எந்தக் கட்சி அதிகமான இடங்களை வெல்லும்?தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா?என்ன முக்கியமான ஆச்சர்யங்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டன?எந்த பகுதிகள் அரசியல் ஆதரவில் பெரிய மாற்றங்களை கண்டன?*கனடாவின் தேர்தல் முறையைப் பற்றி*வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் குறித்துசமீபத்திய தேர்தலில் முக்கியக் கட்சி தலைவர்கள் யார் யார்?முன்னணி அரசியல் கட்சிகளின் முதன்மை கொள்கைகள் என்ன?சுயேட்சை வேட்பாளர்களில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் இருந்தனரா?தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் எவை?**தேர்தல் முக்கியக் கோரிக்கைகள் குறித்து**சமீபத்திய தேர்தலில் வாக்களர்களுக்கு முதன்மையான பிரச்சினைகள் என்னென்ன (சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல்)?ஒவ்வொரு கட்சியும் காலநிலை மாற்றத்தைக் குறித்துத் தங்கள் திட்டங்களை எவ்வாறு முன்வைத்தன?குடியேற்றம் மற்றும் அகதிகள் பற்றிய முக்கியமான விவாதங்கள் என்ன?பாரம்பரிய உரிமைகள் மற்றும் நிவாரணம் தொடர்பான விவாதங்கள் எவ்வாறு இடம்பெற்றன?வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த கட்சிகளின் தீர்வுகள் என்ன?*கனடிய அரசியலைப் பற்றி*கனடாவின் பாராளுமன்ற முறைமை எப்படி இயங்குகிறது?கனடிய மற்றும் அமெரிக்க அரசியலுக்குள் என்ன முக்கிய வேறுபாடுகள் உள்ளன?கனடாவில் சிறுபான்மை ஆட்சி மற்றும் பெரும்பான்மை ஆட்சி இரண்டிற்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன?
-
961
இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ்
இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ் Solvanam.com புனைவு வனம்: மாலினி ராஜ் எழுதிய ’வேர்முள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'வேர்முள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மாலினி ராஜ்உரையாடுபவர்: ரம்யா மனோகரன், சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/03/10/வேர்முள்/எழுத்தாளர் மாலினி ராஜ் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்து ஆங்கிலத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பத்திரிகையில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பெண்ணியம் குறித்த கட்டுரைகளை வழங்கியுள்ளார். தற்போது டெல்லியில் குடியேறி மொழிபெயர்ப்பாளராகவும் எழுத்தாளராகவும் இலக்கிய வாழ்க்கையைத் தொடர்கிறார்.பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டதுடன்சிறுகதைகளும் எழுதியுள்ளார். மதுரை திருநங்கை மன்றம் இவரது "மாதங்கி" சிறுகதைக்கு சு. சமுத்திரம் ஐயா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வழங்கியது.
-
960
மகள்களிடம் அதிக பாசம் காட்டுவது அப்பாக்கள் தானா? மலர்விழி மணியம்
Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காமாட்சிசுந்தரியும் அப்பாவும்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மலர்விழி மணியம் உரையாடுபவர்: பாஸ்டன் பாலா, சரஸ்வதி தியாகராஜன்எழுத்தாளர் மலர்விழி மணியம்- சிறு முன்னுரை மலர்விழி மணியம் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ்ஸில் வசித்து வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பின் வசம் சாய்ந்து ரஷ்ய இலக்கியத்தின் ஜாம்பவான்களான லியோ டால்ஸ்டாய் அவர்களின் படைப்புகளும் தஸ்தவஸ்கி அவர்களின் படைப்புகளும் சில வாசித்துள்ளதுடன் தமிழில் திரு.ஜெயமோகன் அவர்களது படைப்புகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் இரு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசிப்பிற்குப் பிறகு இவர் எழுதிய சிறுகதைகளில் சில “சொல்வனம்” மின்னிதழில் வெளியாகி உள்ளன.மலர்விழி மணியம் அவர்கள் எழுதிய “காமாட்சிசுந்தரியும் அப்பாவும்” என்பது நினைவுகளும், சோகமும், மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள இனிய உறவைப் பற்றி பேசும் சிக்கலை சுருக்கமாக பேசும் சிறுகதை . ஆழமான உணர்வுகளும், இலக்கிய நடைமுறைகளும் இணைந்து இந்தக் கதையை மனதைக் கனலச் செய்யும் வகையில் அமைக்கின்றன.இக்கதை நேர்க்கோட்டில் நகராத ஒரு வகையில் எழுதப்பட்டுள்ளது; நிகழ்கால மும் கடந்த கால நினைவுகளும் இடையே தொடர்ந்து இடைமாற்றம் நிகழ்கிறது. இது நினைவுகளின் தன்மையையும் மனித மனதின் செயல்முறையையும் பிரதிபலிக்கிறது. கதாநாயகி காமாட்சியின் நினைவுகள் அவள் வாழ்நாளின் முக்கியமான தருணங்களை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்க வைக்கின்றன.புகைப்படச் சித்திரத்தின் தொடுதல், பழைய பாடலின் ஒலி, தென்னை மரத்தின் இலை போன்ற உணர்ச்சிகரமான தருணங்கள் கதையின் உணர்ச்சியை தீவிரமாக்குகின்றன. இவை எல்லாம் அவளின் நினைவுகளுக்கு உணர்வுப்பூர்வமான அடையாளங்களாகும்.கதையில் உருவகங்களும் நுட்பமாக பயன்படுகின்றன. தென்னை மரம், தந்தையின் பாதுகாப்பு போன்ற விசயங்களை நினைவுபடுத்தும் ஒரு உருவகமாக அமைகிறது. ஒரு முக்கியமான தருணத்தில், கிழிந்து விழும் தேங்காயை தந்தை கையில் பிடித்துக் கொண்டதன் மூலம், அவன் தனது மகளுக்கான பாதுகாப்பு சின்னமாக உருவாகின்றான். இது அவரது அன்பின் பிம்பமாக அமைகிறது.இந்தக் கதையின் அடிப்படை கருப்பொருள் ஒரு தந்தையின் காதல், அவரது பிரிவின் பின் மகளின் உளவுணர்வுகளை விவரிப்பதிலேயே அமைகிறது. காமாட்சியின் நினைவுகள் வெறும் கடந்தகால ஒலிப்பதிப்புகள் அல்ல; அவை அவளது உள்ளுணர்வுகளின் ஓரங்களை வெளிக்கொணரும் புனித அனுபவங்கள்.தந்தையின் உணர்ச்சிப்பூர்வமான செயல்கள், தாயின் மௌனநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் ஒப்பிடப்படுகின்றன. இது பெற்றோர்களின் பரஸ்பர எதிர்மறையான குணங்களை வெளிப்படுத்தி, காமாட்சியின் மனதளவிய வளர்ச்சியை விளக்குகிறது.அத்துடன், இது தமிழ்க் கலாசாரத்தில் மறைவு, நினைவு, மற்றும் திதி சடங்குகள் ஆகியவற்றின் நிலையைப் பற்றியும் பேசுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு காமாட்சி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உள் பயணம் ஒரு தனிப்பட்ட மாறுபாட்டை அல்லது பயணத்தை குறிக்கிறது.தமிழ் இலக்கியத்தில் நினைவுகள் மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய பல படைப்புகள் உள்ளன. அவற்றில் பல தாயின் தாக்கத்தைச் சுட்டிக் காட்டினாலும், இந்தக் கதை தந்தை மற்றும் மகள் உறவை முன்னிறுத்துவதால் தனித்தன்மை பெற்றதாக உள்ளது.இக்கதை நவீன இலக்கிய மரபுகளுடன் ஒத்துப்போகும் வகையில், மனதளவிய ஆழத்தையும், மனதின் உள் பயணத்தையும் சித்தரிக்கிறது. இது வாசகருக்குள் ஆழமான உள்நோக்கம் மற்றும் அனுபவ பிணைப்பை ஏற்படுத்துகிறது.மலர்விழி மணியம் எழுதிய “காமாட்சிசுந்தரியும் அப்பாவும்” என்பது, மனித வாழ்வில் நினைவுகளின் தாக்கத்தையும், பெற்றோர் அன்பின் நிலைத்தன்மையையும் உருக்கமாகக் கூறும் நுட்பமான கதை. பன்முகத் தலைப்புகளும், கலாசாரப் பின்னணிகளும், உணர்வுப் பார்வைகளும் இணைந்து, இந்தக் கதை வாசகரை உள்ளுக்குள் பார்க்க வைக்கும் ஒரு உன்னத இலக்கிய அனுபவமாக அமைந்துள்ளது.இது ஒரு புனைவுப் படைப்பாக இருந்தாலும், வாசகரின் வாழ்க்கையில் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ளன.—-Thanks AI ChatGPTசொல்வனம்.காம்கதையை வாசிக்க: https://solvanam.com/2024/07/14/காமாட்சிசுந்தரியும்-அப்/
-
959
சாகா வரம் போல் சோகம் உண்டோ? கேட்போம்! அறிவோம்!!
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/இறவாமை-பகுதி-ஒன்று/எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் உடைய முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.இவரது நூல்கள் :- 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' கனவு மழை ' என்கிற சிறுகதைத் தொகுப்பு, வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு.இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.#தத்துவமும் உளவியலும்##தத்துவ நோக்கம்: இக்கட்டுரை, நினைவுகள் மற்றும் கலாசார மரபுகளின் வழியாக மரணத்தை தாண்டும் நிலையைப் பற்றிய தத்துவக் கருத்துக்களை ஆராய்கிறது. ஒருவர் நினைவில் வாழ்ந்தால், அவர் மரிக்கவில்லை என்ற பார்வை பல தத்துவங்களில் காணப்படும். இயேசு, புத்தர், கிருஷ்ணர் போன்றவர்களின் நினைவுகள் மற்றும் வழிபாடு அவர்களுக்கு நிலையான இடம் வழங்குகிறது.#உளவியல் நோக்கம்: நினைவுகள் எவ்வாறு உருவாகின்றன, அவை எவ்வாறு நிலைத்திருக்கின்றன என்பதை உளவியல் பார்வையில் கட்டுரை தொடுகிறது. புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை நினைவுகளை உறுதிப்படுத்தும் உபகரணங்களாக விளங்கும். இது நினைவுகள் என்பது உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற ஊக்கங்களால் உருவாகும் ஒரு மறுசீரமைப்புப் பணியே என்ற அறிவியல் எண்ணத்துடன் ஒத்துள்ளது.#நவீன அணுகுமுறை: பூமியின் சுழற்சி நிற்க வேண்டும் என்பதற்காக தியானத்தில் ஈடுபட்ட ஆசிரியரின் அனுபவம், நவீன உளவியலில் "மனதின் சக்தி" என்ற கருத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஒருவரது நம்பிக்கைகளும் செயல்களும் உலகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் செயல்படலாம் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு இது.இக்கட்டுரை தத்துவ மற்றும் கலாசார பங்களிப்புகளை நிரம்பக் கொண்டிருப்பது போல், அறிவியல் அடிப்படைகளும் சேர்க்கப்பட்டால் கூடுதல் ஆழம் கிடைக்கும். உதாரணமாக:1. நியூரோசயின்ஸில், மனித மூளை "புகைப்படம் மற்றும் கதை" அடிப்படையில் நினைவுகளை சேமிக்கிறது என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.2. உளவியல் ஆய்வுகள் ஒருவரின் தன்மையும், நினைவுகளிலும், அவரைப் பற்றிய பிறரின் பார்வையிலும் உறைந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது."இறவாமை" எண்ணத்தொடர்ச்சியும் உள்ளார்ந்த சிந்தனைகளையும் தூண்டும் கட்டுரை. தனிப்பட்ட அனுபவங்களும், தத்துவமும், கலாசார மரபுகளும் இணைந்துள்ள இக்கட்டுரை, மனிதன் எவ்வாறு மரணத்தை மீறி நினைவில் வாழ விரும்புகிறான் என்பதை காட்டுகிறது. அறிவியல் பார்வைகளைச் சேர்த்தால், இது முழுமையான பார்வையாகும் – நினைவின் உளவியல், தன்மையின் நியூரோ அறிவியல், மற்றும் மரபு மூலமாக நிலைபெறும் ஒழுக்க நெறிகள் என அனைத்தும் ஒன்றாக அமையும்.கட்டுரை மரணத்தையும் சிந்தனையையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்யும் ஒரு முயற்சி. இது பரம்பரை அறிவியலின் எல்லைகளை மீறி, ஆன்மிகம், தத்துவம், உளவியல் மற்றும் அறிவியலை ஒற்றுமையாக்கும் ஒரு உரையாடலைத் தூண்டும்.இந்தக் கட்டுரையின் சிந்தனைகள் அனைத்தும் ஆய்வுமுறைக்கு உட்பட்டதாக இல்லையெனினும், இது மனதின் இயல்பையும், 'நான்' என்ற உணர்வின் நெடுந்தொடரான தேடலையும் பற்றிய விவாதத்தில் முக்கிய பங்களிப்பாக அமைகிறது.முழுமையான புரிதலுக்காகத் தத்துவம் மற்றும் உளவியல் ஆகிய இரண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதை இது நன்கு எடுத்துக் கூறுகிறது.
-
958
புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி
முனைவர் லோகமாதேவியின் கட்டுரைகளை வாசிக்க: https://solvanam.com/author/lokamadevi/Solvanam Uraiyaadalgal: Dr. Logamadeviமுனைவர் எழுத்தாளர் லோகமாதேவி- ஒரு சிறு முன்னுரைலோகமாதேவி தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத் திறன் கொண்டவர்.அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை தினமலர், சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை என பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.இவர் "தோழி விருது" மற்றும்2022 இன் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருதும் பெற்றுள்ளார்.இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய நூல்கள் எழுதியுள்ளார்.பலர் சர்வ சாதாரணமாக கடந்து செல்லும் தாவரம், ஆனால் நமக்கு அது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா?நூற்றாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட பாரம்பரிய தாவரப் பயன்பாடு எதாவது உங்களுக்குத் தெரியுமா?பாரம்பரியமாக மக்கள் பயன்படுத்திய மருத்துவத் தாவரங்களில், இப்போது அறிவியல் உண்மையென நிரூபித்ததையும், இன்னும் நிரூபிக்கப்படாததையும் பகிர முடியுமா?பழங்குடி மக்கள் தாவரங்களை எப்படி அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கிறார்கள்? இதற்கென்று சடங்குகளோ வாய்மொழிப் பாடல்களோ கர்ண பரம்பரைக் கதைகளோ உள்ளதா?? மனிதர்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையிலான ஆச்சரியப்பட வைக்கும் உறவு எதாவது உங்களுக்கு கிடைத்ததா?உலகம் அறியாத முறையில் ஆன்மீக உலகத்துடன் தொடர்பு கொள்ள அல்லது மனதைக் கையாள பயன்படுத்தப்படும் தாவரங்கள் எதாவது உள்ளதா?தாவர அறிவைப் பகிர்வதில் ஏற்படும் நெறிமுறைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், குறிப்பாக மருந்து நிறுவனங்கள் பழங்குடி அறிவால் லாபம் அடையும் சூழலில்?இன்னும் உலகத்திற்கு தெரியாத ஒரு “சூப்பர் ஃபுட்” அல்லது அதிசய மருந்தாக மாறும் சாத்தியம் கொண்ட தாவரம் உங்களுக்குத் தெரிகிறதா?தாவரங்களுக்கு உளவுத்திறன் அல்லது நினைவாற்றல் இருக்கிறதா என்று நீங்கள் நம்புகிறீர்களா? தற்போதைய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
-
957
மும்பை இந்தியன்ஸ் கப் அடிப்பார்கள்!? ஐபிஎல் - சென்ற வாரம்
மக்கள் உங்கள்மேல் கற்களை எறிகிறார்கள், ஆனால் நீங்கள் அவற்றை மைல்கற்களாக மாற்றுகிறீர்கள்.- சச்சின்இங்கே கோவை வெ. சுரேஷ், சி.எஸ்.கே. ரசிகர் ராஜேஷ் கர்கா - சென்ற வார ஐ.பி.எல். ஆட்டங்களை அலசுகிறார்கள்.பத்து பயிற்றுனர்கள். யார் சிறந்த கோச்?இத்தனை இளம் ரத்தங்கள். யார் இந்திய அணிக்கு ஆடப் போகிறார்கள்?சுழற்பந்து வீச்சு இன்னும் எடுபடுகிறதா?பாஸ்டன் பாலா = பாகிஸ்தான் ஆட்டக்காரர்களைக் குறித்தும், பி.எஸ்.எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) குறித்தும் சதாய்க்கிறார்.பாகிஸ்தான் மகளிர் அணி உலகக் கோப்பைக்காக இந்தியா செல்லாது - பெண்கள் உலகக் கோப்பைக்கும் சொல்வனம் கிரிக்கெட் அலசல்கள் தொடரும்!
-
956
Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு
Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/07/14/காமாட்சிசுந்தரியும்-அப்/சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காமாட்சிசுந்தரியும் அப்பாவும்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மலர்விழி மணியம் உரையாடுபவர்: பாஸ்டன் பாலா, சரஸ்வதி தியாகராஜன்எழுத்தாளர் மலர்விழி மணியம்- சிறு முன்னுரை மலர்விழி மணியம் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ்ஸில் வசித்து வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பின் வசம் சாய்ந்து ரஷ்ய இலக்கியத்தின் ஜாம்பவான்களான லியோ டால்ஸ்டாய் அவர்களின் படைப்புகளும் தஸ்தவஸ்கி அவர்களின் படைப்புகளும் சில வாசித்துள்ளதுடன் தமிழில் திரு.ஜெயமோகன் அவர்களது படைப்புகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் இரு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசிப்பிற்குப் பிறகு இவர் எழுதிய சிறுகதைகளில் சில “சொல்வனம்” மின்னிதழில் வெளியாகி உள்ளன.மலர்விழி மணியம் அவர்கள் எழுதிய “காமாட்சிசுந்தரியும் அப்பாவும்” என்பது நினைவுகளும், சோகமும், மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள இனிய உறவைப் பற்றி பேசும் சிக்கலை சுருக்கமாக பேசும் சிறுகதை . ஆழமான உணர்வுகளும், இலக்கிய நடைமுறைகளும் இணைந்து இந்தக் கதையை மனதைக் கனலச் செய்யும் வகையில் அமைக்கின்றன.இக்கதை நேர்க்கோட்டில் நகராத ஒரு வகையில் எழுதப்பட்டுள்ளது; நிகழ்கால மும் கடந்த கால நினைவுகளும் இடையே தொடர்ந்து இடைமாற்றம் நிகழ்கிறது. இது நினைவுகளின் தன்மையையும் மனித மனதின் செயல்முறையையும் பிரதிபலிக்கிறது. கதாநாயகி காமாட்சியின் நினைவுகள் அவள் வாழ்நாளின் முக்கியமான தருணங்களை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்க வைக்கின்றன.புகைப்படச் சித்திரத்தின் தொடுதல், பழைய பாடலின் ஒலி, தென்னை மரத்தின் இலை போன்ற உணர்ச்சிகரமான தருணங்கள் கதையின் உணர்ச்சியை தீவிரமாக்குகின்றன. இவை எல்லாம் அவளின் நினைவுகளுக்கு உணர்வுப்பூர்வமான அடையாளங்களாகும்.கதையில் உருவகங்களும் நுட்பமாக பயன்படுகின்றன. தென்னை மரம், தந்தையின் பாதுகாப்பு போன்ற விசயங்களை நினைவுபடுத்தும் ஒரு உருவகமாக அமைகிறது. ஒரு முக்கியமான தருணத்தில், கிழிந்து விழும் தேங்காயை தந்தை கையில் பிடித்துக் கொண்டதன் மூலம், அவன் தனது மகளுக்கான பாதுகாப்பு சின்னமாக உருவாகின்றான். இது அவரது அன்பின் பிம்பமாக அமைகிறது.இந்தக் கதையின் அடிப்படை கருப்பொருள் ஒரு தந்தையின் காதல், அவரது பிரிவின் பின் மகளின் உளவுணர்வுகளை விவரிப்பதிலேயே அமைகிறது. காமாட்சியின் நினைவுகள் வெறும் கடந்தகால ஒலிப்பதிப்புகள் அல்ல; அவை அவளது உள்ளுணர்வுகளின் ஓரங்களை வெளிக்கொணரும் புனித அனுபவங்கள்.தந்தையின் உணர்ச்சிப்பூர்வமான செயல்கள், தாயின் மௌனநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் ஒப்பிடப்படுகின்றன. இது பெற்றோர்களின் பரஸ்பர எதிர்மறையான குணங்களை வெளிப்படுத்தி, காமாட்சியின் மனதளவிய வளர்ச்சியை விளக்குகிறது.அத்துடன், இது தமிழ்க் கலாசாரத்தில் மறைவு, நினைவு, மற்றும் திதி சடங்குகள் ஆகியவற்றின் நிலையைப் பற்றியும் பேசுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு காமாட்சி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உள் பயணம் ஒரு தனிப்பட்ட மாறுபாட்டை அல்லது பயணத்தை குறிக்கிறது.தமிழ் இலக்கியத்தில் நினைவுகள் மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய பல படைப்புகள் உள்ளன. அவற்றில் பல தாயின் தாக்கத்தைச் சுட்டிக் காட்டினாலும், இந்தக் கதை தந்தை மற்றும் மகள் உறவை முன்னிறுத்துவதால் தனித்தன்மை பெற்றதாக உள்ளது.இக்கதை நவீன இலக்கிய மரபுகளுடன் ஒத்துப்போகும் வகையில், மனதளவிய ஆழத்தையும், மனதின் உள் பயணத்தையும் சித்தரிக்கிறது. இது வாசகருக்குள் ஆழமான உள்நோக்கம் மற்றும் அனுபவ பிணைப்பை ஏற்படுத்துகிறது.மலர்விழி மணியம் எழுதிய “காமாட்சிசுந்தரியும் அப்பாவும்” என்பது, மனித வாழ்வில் நினைவுகளின் தாக்கத்தையும், பெற்றோர் அன்பின் நிலைத்தன்மையையும் உருக்கமாகக் கூறும் நுட்பமான கதை. பன்முகத் தலைப்புகளும், கலாசாரப் பின்னணிகளும், உணர்வுப் பார்வைகளும் இணைந்து, இந்தக் கதை வாசகரை உள்ளுக்குள் பார்க்க வைக்கும் ஒரு உன்னத இலக்கிய அனுபவமாக அமைந்துள்ளது.இது ஒரு புனைவுப் படைப்பாக இருந்தாலும், வாசகரின் வாழ்க்கையில் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ளன. Solvanam.com புனைவு வனம்: ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு
-
955
பறவை உலகத்தில் வாழும் மனிதக் கழுகு
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81/எழுத்தும் பேச்சும்: பேராசிரியர் அருணாசலம் ரமணன்சிகாகோ எப்படி இருந்தது? என்ன பார்த்தீர்கள்?உங்க கட்டுரையில் எங்கே மனிதப்பண்பேற்றல் x மானிட மையக்கொள்கை வருகிறது?மனிதப்பண்பேற்றல் (Anthropomorphism) என்பது மனிதர்களின் பண்புகளையும் நடத்தையையும், மனிதர்களல்லாத உயிரினங்கள் அல்லது பொருட்களுக்கு வழங்கப்படுவது ஆகும்.மனிதமையம் (Anthropocentrism) என்பது மனிதர்கள் இந்த பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறார்கள் என்ற பார்வையையும், உலகைப் புரிந்து கொள்ள மனிதர்களின் மதிப்பீடுகளும் அனுபவங்களுமே அளவுகோலாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் குறிக்கிறது.Technostratigraphy என்றால் என்ன?ஜெய்ப்பூர் அனுபவங்கள்நண்பேண்டா -- யார் யாருக்கு தோழர்/மெய்க்காப்பாளர்சூழ்நிலைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்; நெகிழ்வுதிறன்; நீக்குப்போக்கு திறனுக்கு பெயர் பெற்ற கிரேட் கார்மோரண்ட்ஸ்
-
954
CSK சரிவிற்கு தோனி காரணமா? இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகமா? சென்ற வார IPL
Clueless super kings என்கிறார் ராம்கி.ஒன்று, இரண்டு, மூன்று எனப் பட்டியலிடுகிறார் வெ. சுரேஷ்.ஐ.பி.எல். கோப்பையை யார் வெல்வார்கள்?தலைமை மாற்றங்கள் மற்றும் தோனியின் மீண்டும் வருகைகப்டன் திரும்பிய கதை: ருதுராஜ் அடிபட்டு, 43 வயதில் எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டனாக வருவது அணியின் உள்மனதையும் களத்திலுள்ள பலத்தையும் எப்படி பாதிக்கிறது? இது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் CSK பேட்ஸ்மென், பௌலர் உள்ளடக்க ரீதியில் குழப்பத்தில் இருக்கிறது என்பதற்கான குறிகாட்டியா?முந்தைய புகழ் vs எதிர்கால வளர்ச்சி: தோனி மீண்டும் தலைமை பொறுப்பேற்பது கடந்த வெற்றிகளை மீண்டும் நம்பும் நடவடிக்கையா? இது CSK-வின் நீண்டகால வளர்ச்சிக்கும், IPL சூழ்நிலைக்கு ஏற்ப ஏலம் எடுப்பதற்கும் தடையாக இருக்குமா? ஆட்ட நெருக்கடிகள் : KKR-க்கு எதிராக 103-9 என்ற குறைந்த ஸ்கோருடன் வெளியேறிய CSK, பேட்டிங் பிரச்சனைகளை சரி செய்ய என்ன மாற்றங்கள் செய்யலாம்? யாருக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும்?வெளிநாட்டு வீரர் சிக்கல்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, நூர் அகமட், பதிரனா போன்ற வெளிநாட்டு வீரர்களை தேர்வுசெய்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இதை எப்படிப் பயன்படுத்தி மிகச்சிறந்த காம்பினேஷனை உருவாக்கலாம்?இளம் வீரர்களின் ஈடுபாடுபுதுமுகங்கள் - இளம் வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வேளையில், CSK இளம் திறமைகளை வளர்க்கத் திட்டமிடுகிறதா? அனுபவம் மற்றும் புதுமையிடையே சமநிலையை எப்படிச் சாதிக்கலாம்?ரச்சின் ரவீந்திராவைப் பயன்படுத்தும் வழி: அவரின் ஆல்-ரவுண்டர் திறமைகளை CSK தற்போது சரியாக பயன்படுத்துகிறதா? அவர் எந்த இடத்தில் விளையாடவேண்டும்?ரசிகர்கள் எதிர்பார்ப்பு மற்றும் பிராண்டு பார்வைரசிகர்களின் நம்பிக்கை சோதனை: தொடர்ந்து தோல்விகள் கண்ட பிறகு, ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியே செல்வது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. CSK எவ்வாறு அவர்களது உணர்வுகளை மதித்து உற்சாகத்தை மீட்டடைய முடியும்?ஸ்பான்சர் அழுத்தம் vs ஆட்ட நிலை: Etihad, FedEx போன்ற பெரிய ஸ்பான்சர்களுடன் இருப்பதில் CSK-வின் விளையாட்டு நிலை அதன் பிராண்டு மதிப்பை எப்படி பாதிக்கிறது? இதை பாசிட்டிவாக எப்படி பயன்படுத்த முடியும்?எதிர்கால திட்டங்கள்பிளேஆஃப் கனவா?: கடைசி இடத்தில் உள்ள CSKக்கு, இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? இதுபோன்ற சிக்கல்களில் இருந்தும் மீண்டு பிளேஆஃப்ஸுக்கு சென்ற வரலாற்று அணிகள் உள்ளனவா?மீள் கட்டமைப்பு சிந்தனை: தற்போதைய சவால்களைப் பொருட்படுத்தி CSK எதிர்காலத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும்? (விலைமதிப்புள்ள வீரர்கள், தலைமை வளர்ச்சி, அணியின் முழுமையான சீரமைப்பு போன்றவை)
-
953
அந்தக் காலத்தில் ஹோலி கொண்டாடப்பட்டதா? அறிவியல் ஆய்வு - அருணாச்சலம் ரமணன்
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%87/ பண்டைய இந்தியாவில் இருந்து நடப்பு காலம் வரை ஹோலி நிறங்களின் மாற்றம் குறித்து பேசுவோம்1. What are the classic colors? How are they made? பண்டைய இந்தியாவில் ஹோலி விழாவில் பயன்படுத்தப்பட்ட முக்கிய இயற்கை நிறங்களின் மூலங்கள் என்ன, அவற்றை எவ்வாறு பெறப்பட்டது?2. Middle ages - how the painting colors evolved? நீடித்து தெளிவாக இருக்கும் தூள்களை உருவாக்க இயற்கை நிறங்களை இணைக்க பாரம்பரிய முறைகள் என்னவாக இருந்தது?3. What are synthetic colors? How are they made? பாரம்பரிய ஹோலி நிறங்களின் வேதியியல் அமைப்பு, தற்போதைய செயற்கை மாற்றுகளுடன் எப்படி வேறுபடுகிறது?4: இயற்கை ஹோலி நிறங்கள் மற்றும் செயற்கை நிறங்களின் உருவாக்கத்தில் இருக்கும் முக்கிய வேதியியல் செயல்முறைகள் என்ன?5. நுண்ணிய துகள் அளவு: why is this harmful? What makes it not safe? What is the impact?6. aniline dyes : சுற்றுச்சூழலுக்கு செயற்கை ஹோலி நிறங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?
-
952
ரகு ராமன் நம்தபா சுற்றுப்பயணம்: காடு, மலை & குரங்கு - அருணாச்சல் பிரதேசம்
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/02/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்ரகு ராமன்நம்தபா எங்கே இருக்கிறது? எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடித்தீர்கள்? ஏன் அங்கே சுற்றுலா சென்றீர்கள்?1. வனவிலங்குகளுடன் உங்கள் சந்திப்புகள்நீங்கள் ஹூலொக் கிபன் குரங்குகளை (இந்தியாவின் ஒரே வாலில்லாத குரங்கு இனத்தைக்) கண்டதை பற்றி விவரிக்கிறீர்கள். இந்த அனுபவம் உங்கள் மனதில் எவ்வாறு பதிந்துள்ளது? நம்தாபாவின் உயிரியல் பல்முகத்தன்மையை இது எப்படி பிரதிபலிக்கிறது?2. பாதுகாப்பு சவால்கள்நீங்கள் பெரிய கோழிக்கடா பறவைகள் (Great Hornbill) போன்ற இனங்கள் குறைந்து வருவதற்குக் காரணமாக வேட்டையாடப்படுவதை குறிப்பிடுகிறீர்கள். இந்த இனங்களைப் பாதுகாக்க அரசு மற்றும் ஆர்வலர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன?3. மனிதர்கள் மற்றும் இயற்கையின் பாதிப்புவனப்பகுதிகளில் சாலை உள்ளிட்ட கட்டுமானங்கள் விலங்குகளின் வாழ்விடங்களை பாதிக்கின்றன என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கிடையேயான சமநிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?4. தனிப்பட்ட அனுபவங்கள்நீங்கள் சிவப்பு பெரிய பறக்கும் அணில்களை (Red Giant Flying Squirrel) பார்த்த அனுபவத்தை விவரிக்கிறீர்கள். இப்படியான தருணங்கள் உங்கள் காட்டைப் பற்றிய புரிதலை எவ்வாறு மாற்றின?5. உள்ளூர் சமூகங்கள்நீங்கள் மியாவோ பகுதியில் உள்ள திபெத்திய அகதி முகாமைச் சந்தித்ததாக கூறுகிறீர்கள். அந்த மக்கள் இயற்கையுடன் எவ்வாறு பொருந்தி வாழ்கிறார்கள்? அவர்கள் காட்டுப்பாதுகாப்பில் எந்த வகையில் பங்கு செலுத்துகிறார்கள்?6. உயிரினங்களின் பல்வகைப்படம்நீங்கள் குறிப்பிட்டது போல, நம்தாபாவில் 300க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. இதில் உங்களுக்குப் பிடித்தவையாக எவை இருந்தன? ஏன்?7. பயணத்தின் சவால்கள்அழுகிய வனப்பாதைகள், அடர்ந்த காடு போன்ற இடங்களில் செல்வது எளிதல்ல. உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? அவற்றைக் எவ்வாறு சமாளித்தீர்கள்?8. நம்தாபாவின் எதிர்காலம்உங்கள் பார்வையில், நம்தாபா தேசிய பூங்காவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உயிரியல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகியவை எவ்வாறு செயல்படும்?9. எழுத்தின் பின்னணிஉங்கள் பயணத்தை இவ்வாறு விரிவாக எழுதி பகிர்வதற்கு உங்களை ஊக்குவித்தது என்ன? வாசகர்கள் எந்த செய்தியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?10. எதிர்கால பயணிகளுக்கு ஆலோசனைகள்உங்கள் கட்டுரையைக் கொண்டுபற்றி நம்தாபாவிற்குச் செல்ல விரும்புபவர்களுக்கு நீங்கள் என்ன வழிகாட்டல்களை வழங்க விரும்புகிறீர்கள்? அவர்கள் பொறுப்புடனும் பயனுள்ள அனுபவத்துடனும் பயணம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
-
951
மாலன் | தோழி 2- அத்தியாயம் 33| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-33 | Kalkionline.com
மாலன் | தோழி 2- அத்தியாயம் 33| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-33 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.To read: / முழுவதும் வாசிக்கhttps://maalan.co.in/தோழி/ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...