PODCAST · society
தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories
by rams
Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to [email protected]படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:
Episodes
-
198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை
ஒவ்வொரு கதைப்பாத்திரத்தையும் நுணுக்கமாக படைத்திருக்கிறார். ஒவ்வொருவருமே ஒரு அந்நியோன்யமான உறவுடன் உலவுகிறார்கள். அருமையான கதை. . . விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் பதிவு செய்தவர் காமுத்துரை. "ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத்...
-
197. கைலாசபுரம் - சாம்ராஜ்
இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன்…
more -
196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி.கார்ல் மார்க்ஸ் பகடி, நுண்சித்தரிப்புகள் ஆகியவற்றுடன்கூடிய நடை கொண்டவர். ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென...
-
195. துண்டு - கந்தர்வன்
வறியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் செலுத்தும் அரசியலைச் சொல்லும் கந்தர்வனின் சிறுகதை . முடிவு ஒரு அசத்தல். மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள்...
-
194. கருட வித்தை - என்.ஸ்ரீராம்
கொங்கு மண்ணின் மணம் வீசும் கதைகள் ஸ்ரீராமின் கதைகள். வட்டார மொழியும், சொலவடைகளும் தாராபுர வட்டாரத்தை கண் முன்னே நிறுத்துகின்றன. இந்த கதையின் ஆழம் கிணற்று வெட்டிகளையும் பிரமிப்பு அடைய வைக்கும்!
-
193. கொலைபாதகன் - க.நா.சு
"கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. நான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால…
more -
192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்
சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை....
-
191. சத்ரு - பவா செல்லதுரை
191. சத்ரு - பவா செல்லதுரை வறண்ட நிலமும் மனங்களும் கொடுந்தன்மை கொண்டுவிடுகின்றன. ஒரு மழை. ஒரே ஒரு மழை. எல்லாம் மாறிவிடுகிறது. கருணை எங்கும் பரவுகிறது. இது தெய்வச் செயலா அல்லது தானாய் நிகழ்ந்ததா? இந்தக் கதையில் யார் சத்ரு? உங்களுக்கு தெரிந்தால் email அனுப்புங்கள்.
-
190. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
எளிய நடை. பெரிய புதிர். தளர்வில்லாமல் நகர்கிறது இந்த கதை. விமலாதித்த மாமல்லனின் அருமையான கதைகளில் ஒன்று. நான் பதிந்திருக்கும் விமலாதித்த மாமல்லனின் மற்ற கதைகள்: 84. வலி - விமலாதித்த மாமல்லன்
-
189. கல்வி - அசோகமித்திரன்
47 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை. கல்வி என்பது எப்படி மனித நேயமற்று, குழந்தைத்தனத்தை கொடூரமாக சிதைக்கும் படியாக இருந்தது என்பதை தனக்கே உரிய சரள நடையில் அசோகமித்திரன் சொல்லும்போது மனது வலிக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது நமது ஆரம்ப கல்விச் சாலைகள்? நான் பதிந்திருக்கும் மற்ற அசோகமித்திரனின்...
-
188. கோடித்துணி - பெருமாள் முருகன்
"கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் , வட்டார வழக்கையும் எழுத்தாக்கியவர் பெருமாள் முருகன். ஏறுவெயில்,நிழல் முற்றம் கூளமாதாரி மூன்று நாவல்களும் பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட படைப்புகள். விளிம்பு நிலை வாழ்வின் நேர்த்தியான சித்தரிப்பு அவரது புனைவுலகத்தின்...
-
187. சிலுவைப்பாதை - கமல தேவி
உலகத்தில் எல்லோருக்கும் தேவைப்படுவது, எல்லோராலும் கொடுக்கக்கூடியது, கொடுத்தாலும் குறையாதது எது? அது இந்த கதை முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெறுப்பை வளர்க்கும் இந்த காலகட்டத்தில் இந்த கதை ஒரு மருந்து. நான் பதிந்திருக்கும் கமலதேவியின் மற்ற கதைகள்: 165.கண்ணாடிப்...
-
186. வாசனை - பிரபஞ்சன்
186. வாசனை - பிரபஞ்சன் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சிற்சில விஷயங்களில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், தனியாக வாழும் பெண்களைப் பற்றிய எண்ணப்போக்கு பெரிதாய் மாறவில்லை என்று தான் தோன்றுகிறது. படிக்கும் வாசகர்க்கும் கூட ஒரு பரிட்சை வைத்திருக்கிறார் பிரபஞ்சன். எங்கே என்று...
-
185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர். இந்த கதை படிப்பவர் அனைவரையும் புன்முறுவல்...
-
184. புன்னகை - கு.அழகிரிசாமி.
நடுத்தர வர்கத்தின் தேவையற்ற டாம்பீகத்தையும் பணம்படைத்தவர்களின் அற்பத்தனத்தையும் புன்னகை மூலமாக வெளிக்கொணர்கிறார் அழகிரிசாமி. உங்கள் பின்னூட்டத்தை [email protected]க்கு அனுப்புங்கள். நன்றி . நான் பதிந்திருக்கும் கு.அழகிரிசாமியின் மற்ற கதைகள்: 171. தியாகம் - கு.அழகிரிசாமி 120. தரிசனம் -...
-
183. பாதைகள்- ஜெயமோகன்
தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும் என்ற தொகுப்பில் இருந்து. உங்கள் பின்னூட்டம் மற்றும் ஆதரவு தொகை அனுப்ப [email protected]க்கு ஈமெயில் அனுப்புங்கள். நன்றி. நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள் 166. நூறு நாற்காலிகள் 161. வணங்கான் - ஜெயமொகன் 147. தாயார் பாதம் 110. இங்கே…
more -
182. பூனைக் கண்ணன் கடத்திய அம்மன் - நாஞ்சில் நாடன்
வருடத்தின் முதல் கதை. நாஞ்சில் நாடனின் ஒரு யதார்த்தமான கடத்தல் கதை ஆன்மீக கதையாக பரிணாம வளர்ச்சி கொள்கிறது. பொங்கிப் பிரகவிக்கும் காட்டாறாய் அவரது மொழி நம்மை அடித்து சென்று கரை சேர்க்கிறது. நான் பதிந்திருக்கும் நாஞ்சில் நாடனின் மற்ற கதைகள். 179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன் 175.…
more -
181. இணைப்பறவை - ஆர்.சூடாமணி
ஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி…
more -
180. கிடாரி - சுந்தர ராமசாமி
அறுபது வருடம் முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிலை தான் பெரும்பாலும். ஒரு வீட்டில் இரண்டு பிரசவங்கள். ஒரே எதிர்பார்ப்பு. ஒன்றில் பலிக்கிறது - தேவையில்லாத இடத்தில். மற்றொன்றில் - தேவையான இடத்தில் பொய்த்துப் போகிறது. சு.ரா தன் எழுத்துக்களால் நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போகிறார். உங்கள்...
-
179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன்
மேல்தட்டு கீழ்தட்டு மக்களின் பழகிப்போன பாழாகிப் போன மனநிலையை வேடிக்கையாக சொல்கிறார் நாஞ்சில் நாடன். நான் படிந்திருக்கும் மற்ற நாஞ்சில் நாடன் கதைகள் : 175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன் 156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன் 112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன் 61. ஒரு இந்நாட்டு மன்னர் -...
-
178. காட்டில் ஒரு மான் - அம்பை
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின்...
-
177. அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை - அ முத்துலிங்கம்
வாழ்க்கையே புதிராய் இருக்கும் அகதியின் வாழ்க்கையில் கணிதப் புதிர்களும். சொமாலியாவில் மக்கள் தவிப்பை கண் முன் நிறுத்துகிறார் முத்துலிங்கம்.
-
176. உபதேசம் - புதுமைப்பித்தன்
இந்தக் கதை முழுக்க நிகழ்வுகளால் உள்ளது, நிகழ்வுகளின் அர்த்தத்தை வாசகனே அறிந்து கொள்ளட்டும் என்னும் முயற்சி. இந்த முறையின் பலம், பலவீனம் இரண்டுமே அர்த்தத்தை வாசகனே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமே; ஒவ்வொரு வாசகனும் இதனை ஒவ்வொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவியலும். உங்கள் feedbackஐ...
-
175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் படைப்புகள் அனைத்துமே அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. - க.நா.சு
-
174. சுந்தர் - அசோகமித்திரன்
வரிக்கு வரி எள்ளலும் துள்ளலுமாக விளாடுகிறார் அசோகமித்திரன். மாடு வளர்ப்பவர்கள் கட்டாயம் கேளுங்கள் .
-
173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்
வெகு நாட்களாக படிக்க திட்டமிட்டு நான் சமீபத்தில் படிக்க தொடங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன். அவர் எழுத்தில் நான் படித்த முதல் கதை கழிமுகம். மிகவும் வேறுபட்ட நடையில் அதிர வைத்த படைப்பு. பிறகு அவரது சிறுகதைகளை தேட ஆரம்பித்தேன். இந்த முத்து கிடைத்தது. கிணறும் நீச்சலும் கிராமங்களிலும்…
more -
172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன்
பரம்பரைக் கலை கைவரவில்லையே என்று சாமிநாதனோடு நம்மையும் தவிக்க விடுகிறார் செந்தில் ஜெகன்நாதன். நாதஸ்வரத்திற்கு இணையாக பொங்கிப் பிரவாகித்து வரும் எழுத்துநடை. மென் உணர்ச்சிகளை பொருத்தமான ராகங்களோடு எடுத்தாண்டிருக்கிறார். சாமிநாதனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட முடிவில் நீர் தளும்பி கண்ணெரிச்சல்...
-
171. தியாகம் - கு.அழகிரிசாமி
சொல்லால் சுட்டுப் பொசுக்கும் மனிதனிடம் இத்தனை பெருங்கருணையா? மனதை இளக வைக்கிறார் கு.அழகிரிசாமி 120. தரிசனம் - கு.அழகிரிசாமி 60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி 46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி 32. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி 22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி
-
170. காணிக்கை - ந.பிச்சமூர்த்தி
மிக எளிமையான ஆனால் ஆழமான கதைக் களம். . .50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை இன்றளவும் பொருந்துகிறது. ஆண் பெண் உறவு அப்படியே தேங்கித் தான் இருக்கிறது. . . நான் பதிந்திருக்கும் ந.பிச்சமூர்த்தியின் மற்ற கதைகள்: 40. காவல் -ந.பிச்சமூர்த்தி 106. வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்தி 128. மாயமான் -...
-
169. மனைவியின் நண்பர் - வண்ணநிலவன்
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கமான நட்பு நமது கலாசாரத்தில் சாத்தியம் தானா என்பது பற்றிய கதை. கதை நெடுக வண்ணநிலவன் தடுமாறுகிறார் - எந்தப் பக்கம் சேர்வது என்று தெரியாமல். . .பாவம் சிவகாமி மூன்று ஆண்களிடமும் மாட்டிக் கொண்டு திணறுகிறாள்! நான் பதிந்திருக்கும் வண்ணநிலவனின் மற்ற கதைகள்...
-
168. குருபீடம் - ஜெயகாந்தன்
50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன - ஆன்மீகத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும். . .ஜெயகாந்தனின் எள்ளல் கதை முழுக்க கொப்பளிக்கிறது. . . நான் பதிந்திருக்கும் ஜெயகாந்தனின் மற்ற கதைகள் 146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன் 137....
-
167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை
நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் - தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . ....
-
166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்
சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் - எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை. இது ஒரு…
more -
165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவி
சில விஷயங்கள் நமக்கு பிடித்தவை சில பிடிக்காதவை. பிடிக்காதவற்றை பார்க்கும்போதும் எண்ணும்போதும் நிகழும் மனநிலை வெறும் ஒரு கண்ணாடி போலத் தான். இது புரியும்போது திரை விலகுகிறது புதிய பார்வைகள் வந்துசேர்கின்றன. பிடிக்காதவையும் மனதை தொடுகின்றன. . .
-
164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை. அதோடு விடலைப் பருவ கவலைகளையும் சேர்ந்து கொண்டால்? அதிலும் கொடியது இதெல்லாம் நேர்வது ஒரு பெண்ணிற்கு. அம்மாவும் பெண்ணும் கட்டிக்கொண்டு அழுகையில் வாசகன் மனத்தை ஒரு பாறாங்கல் வந்து அடைக்கிறது. அறிவியல் வாத்தியாரின் அறியாமை, அதனால்…
more -
163. கடன் - அ. முத்துலிங்கம்
வயோதிகத்தோடு புலம்பெயர்ந்து செல்லவேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொண்ட கொடுமை. புதிய இடம், புதிய சூழல், வேறுபட்ட கலாசாரம் எல்லாம் ஒன்றாய் படுத்தும் பாடு. கணவன் மனைவியிடம் பட்ட கடன், மகன் தந்தையிடம் பட்ட கடன், முன்வினைக் கடன், தனிநபரிடம் அரசாங்கம் பட்ட கடன் ஒரு சிறுகதையில் இத்தனை பரிமாணங்களா?...
-
162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முஹம்மது மீரான் ஒரு மிகச்சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதி. அவசர யுகத்தில் அக்கமபக்கம் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாத இரக்கம் மனிதாபிமானம் என்ற மனிதத் தன்மையே மறந்துவிட்ட பட்டணத்து மேல்தட்டு மக்களை தலையில் குட்டும் கதை இது.
-
161. வணங்கான் - ஜெயமோகன்
நமக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தால் இட ஒதுக்கீடு ஏன் சரியானது என்று புரியுமோ? நேசமணி என்ற பெருந்தலைவர் பற்றி தெரியாமலே போனதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் போல. ஜெயமொகனின் இந்தக் கதையில் அவர் கையாண்டிருக்கும்…
more -
160. கறிவேப்பிலைகள் - கி.ரா
படிக்க முடியாமல் தொண்டை அடைக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. கிராமத்து சூழல் அழிந்து வரும் ( அழிந்து விட்டதோ?) சொல்லாடல்கள் கொட்டிக்கிடக்கும் இந்தக்கதை நிலமற்ற விவசாயக் கூலிகளின் வாழ்க்கை போராட்டத்தை கண் முன் நிறுத்துகிறது. . .
-
159. முள்முடி - தி.ஜா
ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை. குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளின் கணமேனும் காத்தல் அரிது எனும் குறளும் ஏனோ ஞாபகம் வருகிறது. . .
-
158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்
மனிதனின் இந்த அடிப்படைத் தேவையைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்?
-
157. சித்தி - மா. அரங்கநாதன்
நெடுந்தொலைவு ஓட்டக்காரர்களுக்கு ஒரு கதை!. ஓடும்போது ஏற்படும் மனநிலையை சரியாக படம்பிடிக்கும் அரங்கநாதன் நிச்சயம் அரை மராத்தனாவது ஓடியிருப்பார் !!
-
156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்
கிராமத்து திருவிழா கண்முன் விரிகிறது. கூடவே ஆழ் மனதின் வன்மங்களும் விடலைப்பருவத்தை ஏமாற்றுதலும். இசையும் ஓசையும். . . நாஞ்சில் நாடனின் அருமையான சிறுகதை.
-
155. யோஷிகி - தி.ஜானகிராமன்
ஒரு சின்ன கதையின் மூலம் ஜப்பான் நாட்டின் கலாசாரத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் தி.ஜா.
-
154. பூர்வீகம் - அ.முத்துலிங்கம்
வெவ்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு பின்புலங்களுடன் சிலர் சந்திக்கிறார்கள். நட்பு காதல் என்று எல்லா சாத்தியங்களோடும். இழக்கப் போவதை அடைய சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறி அடைய துடிக்கிறார் ஒருவர். . .அ.முத்துலிங்கம் மிளிர்கிறார் கதையின் முடிவில். . .
-
153. வேப்பமரம் - ந. பிச்சமூர்த்தி
இந்த மரத்தின் கதை நாம் அனைவரும் கேட்டது தானோ? ந. பிச்சமூர்த்தியின் யதார்த்த நடையில் வேரூன்றி நிற்கிறது. . .
-
152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்
சிறு சிறு சம்பவங்களின் கோர்வை தானே வாழ்க்கை! இதை அழுத்தம் திரித்தமாக தன் யதார்த்தமான நடையில் சித்தரிப்பதில் வல்லவர் அசோகமித்திரன். இந்தக் கதையின் பல்வேறு பரிமாணங்கள் வியக்க வைக்கின்றன. .
-
151. கோமதி - கி.ரா
கரிசல்காட்டு இலக்கியத்தின் தந்தை கி.ரா மே 17ம் தேதி திங்கள் கிழமை இரவு காலமானார். 1964ம் ஆண்டு எழுதப்பட்டது இந்தக் கதை. பேசப்படக்கூடாத அருவருக்கத்தக்க கேவலமான ஒரு விஷயமாக கருதப்பட்ட இத்தகைய கதையை எழுத எத்தனை துணிச்சல் !
-
150. ஹார்மோனியம் - செழியன்
‘ஹார்மோனியம்’ என்கிற இந்த சிறுகதைக்காக செழியன் ‘கதா’ விருது பெற்றிருக்கிறார். . தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செழியன். சிவகங்கையில் பிறந்தவர். பொறியியல் பட்டம் முடித்ததும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவு...
-
149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்
பாம்புகளைப் பேணி வாழ்ந்த ஒரு சமூகம் இப்போது காணாமலேயே போய்விட்டது. பாம்புகளை நேசிப்பவர்களுக்காகவே எழுதப்பட்டதாக உணர்கிறேன். . .நன்றி வண்ணநிலவன் .
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to [email protected]படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:
HOSTED BY
rams
Loading similar podcasts...