Ramana Maharshi Guidance (Tamil) podcast artwork

PODCAST · religion

Ramana Maharshi Guidance (Tamil)

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Jun 9, 2026 · Source feed

  1. 95

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்கள் : ஒரு பண்டிதரின் கேள்விகளுக்கு பகவான் விளக்கம் அளிக்கிறார். 1) அத்வைதம், திரு தக்ஷிணாமுர்த்தியின்அறிவுரைகள் - இவை பற்றி சில சந்தேகங்கள். 2) எண்ணங்கள் பிடிவாதமாக விடாப்பிடியாக இருப்பதால், "நான்" என்பதை அடைய முடியவில்லை. 3) முக்தி அல்லதுமோட்சம் அடைவதில், கிரகஸ்தர், அதாவது குடும்பஸ்தரின் பாங்கு அல்லது நிலைப்பாடு என்ன? வீட்டை விட்டு விட்டு காட்டுக்கு போவதால் பலன் உண்டா? 4) மூச்சுக்கட்டுப்பாடு மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் மன அமைதி பெறுவதற்கும் எப்படி உதவுகிறது? மூச்சுக் கட்டுப்பாடு வழிமுறைகள் என்ன? வேறு வழிமுறைகள் என்ன?  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  2. 94

    ரமண மகரிஷி தான் எல்லோரிலும் மிகவும் சிறந்த ஆன்மீக மருத்துவர்; மன நோயை அழித்து சந்தோஷம் தரும் கடவுள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | உங்களது துன்பங்களிலிருந்து விடுபட விரும்பினால், சந்தோஷம் நிலையாக இருக்கவிரும்பினால், இந்த விடியோவைப் பாருங்கள்.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  3. 93

    பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 6 ~ மனக் கட்டுப்பாடு ~ பல வழிமுறைகள் அளிக்கப்படுகின்றன

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி |  ரமண கீதை அத்தியாயம் 6 ~ மனக் கட்டுப்பாடு ~ ஆன்ம ஞானத்திற்கும் மன அமைதிக்கும்உதவும் பல முக்கியமான வழிமுறைகள் விவரிக்கப்படுகின்றன.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  4. 92

    பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி |  ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள்.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  5. 91

    பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம் என்பதென்ன?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி |  ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம்என்பதென்ன? மறை நூல்களில் ஆன்மா பல விதத்தில் குறிப்பிடப்படுகிறது. எது சரியானது? அல்லது ஆன்மா இவற்றிலிருந்து வேறுபட்டதா? மகரிஷி விளக்குகிறார்.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  6. 90

    ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated)

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated). Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  7. 89

    ரமண மகரிஷியின் அறிவுரைகள் | Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? விவரமான விளக்கம்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? இந்த விஷயத்தைப் பற்றி பக்தர்களுடன்ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் இங்கு. வழங்கியுள்ளேன். ~ வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  8. 88

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் :  இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? பக்தரின் இன்னும்பல கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளித்து விளக்கம் அளிக்கிறார்.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  9. 87

    ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஒன்றே போதும். துன்பங்களை அகற்றி நிம்மதியாக வாழ,  மிகவும் எளிதானஉன்னதமான அறிவுரைகளை ரமண மகரிஷி அளிக்கிறார்.  நாம் செய்கிறோம் என்று நினைக்கும் வரை நமது செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாகிறோம், அவ்வப்போது சிறிது இன்பத்தையும், பெரும்பாலாக துன்பத்தையும் அனுபவிக்கிறோம். ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒருஉயர்வான சக்தி தான் எல்லாவற்றையும் பரிபாலிக்கிறது, நடக்க வேண்டியது தானாக நடக்கும், என்பது தெரிய வரும். பின் அந்த சக்தியிடம் நம்மை ஒப்படைத்து விட்டால், துன்பத்தால் பாதிக்கப் பட மாட்டோம், நிலையான இன்பமும் சுகமும் கிடைக்கும். இதைத் தான் ரமண மகரிஷி தமது சொந்த அனுபவத்தால் நமக்குக் கற்பிக்கிறார். அதைநம்பி பயிற்சி செய்வது நம்மிடம் தான் இருக்கிறது. ~ வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  10. 86

    ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர் - பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. "ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர்" என்பது பகவான் திரு ரமண மகரிஷியுடன் பக்தர்களுக்கு இருந்த அனுபவங்களாகும். இங்கு பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz expresses his experiences with Bhagavan Sri Ramana Maharshi.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  11. 85

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் :  தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி?   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  12. 84

    ரமண மகரிஷியின் அறிவுரைகள் | தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒரு பக்தருக்கு பின்வரும் சந்தேகம் எழுகிறது : "ஒருவர் தமது தவறான அகங்கார "நான்" எண்ணத்தை விட்டு விட்டுமெய்யான நிரந்தர பூரண சொரூப நிலையை உணர்ந்துக் கொண்டு விட்டால், பின் மற்றவர்களுக்காக எப்படி பிரார்த்திப்பது?" பகவான் ரமண மகரிஷி இதற்கு மிகவும்தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  13. 83

    ரமண மகரிஷி | இளமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. இளமையில் பணம் சம்பாதிப்பதிலும் உடல் சார்ந்த  இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தும்இளவயதினரால், ஆன்மீகத்தில் ஈடுபட்டு உண்மையான சந்தோஷத்தையும் மன அமைதியையும் நாடி மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா? மகரிஷியின் அறிவுரைகளுடன் விளக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. ~ வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  14. 82

    ரமண மகரிஷி | தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? வெல்வது எப்படி?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? அவற்றை வெல்வது எப்படி? அதற்குபயிற்சிகள் என்ன? எப்படி பயிற்சி செய்வது? ~ ரமண மகரிஷி விளக்கம் அளிக்கிறார். பகவானின் இனிய சொற்களைக் கேட்கும் போதே, மன உடல் இன்னல்கள் குறைந்துவிடுகின்றன.  கடவுள் தான் இந்த விளைவை உண்டாக்க முடியும்.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  15. 81

    ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3)

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3).  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  16. 80

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (51) பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகசக்திகளை நாடுவது சரியில்லை. கஷ்டம் வரும்போது கடவுளிடம் சரணடைய வேண்டும்; அவரது உதவியை பணிவுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். ~  வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  17. 79

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (47 - 50) | எவ்வளவு முயன்றாலும் "நான்" புரியவில்லை. இன்னும் சில விஷயமும்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (47 - 50) ~ 1) ஆன்மசுய விசாரணை சுயநலமா? அதை விட சுயநலமற்ற காரியங்கள் செய்வது மேலானதா? 2) எவ்வளவு முயற்சி செய்தாலும் "நான்" என்ற எண்ணத்தைக் கண்டுபிடிக்கவேமுடியவில்லை. உண்மையான "நான்" எப்படி அறிவது? 3) ஒருவர் எப்போது ஞானியாவார் என்று பகவான் சொல்வாரா? 4) பரபக்தி என்பதற்கு உதாரணம் என்ன?  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  18. 78

    ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2)

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2).  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  19. 77

    ரமண மகரிஷி | அருணாசல அஷ்டகம் | அருணாசலர் மீது உள்ளத்தைத் தொடும் எட்டு வரிசைகள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா.  இதயத்தைத் தொடும் பக்தியையும் அனுபவத்தில் உணர்ந்த ஆன்ம ஞானத்தையும் மழை போல் பொழியும் கவிதைவரிசைகளில் பகவான் திரு ரமண மகரிஷி  தமது கருணையினால் அளித்து அருள் செய்கிறார். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  20. 76

    ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியிடமிருந்து ஒரு பக்தருக்குக் கிடைத்த பல அற்புத அறிவுரைகளை, நாம் ஒவ்வொருவரும் அவை நமக்கேகிடைத்தது என்று உணர்ந்து, அவற்றை பின்பற்றி சந்தோஷம் அடைய வேண்டும்.  பொய் மதத்தையும், பொய் சுவாமிகளையும் வெறுத்த ஒருவரை, ஒரு நொடியில் தமதுஅன்பினால் தமது காலடியில் நமஸ்கரிக்கச் செய்து, அவருக்கு வழிகாட்டிய உண்மையே உருவான பகவான் ரமணருடன், அந்த பக்தருக்கு இருந்த அனுபவங்கள், எல்லோருக்கும் மிகவும் நன்மையும் மன அமைதியும் அளிக்கும்; இதில் சந்தேகமே இல்லை. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  21. 75

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (44 - 46) ~ பல விஷயங்களை மகரிஷி விளக்குகிறார். 1) ஆன்மீக பயிற்சிக்கு தனிமை அவசியமா? 2) தினசரி வாழ்வு மனச்சிதறலைஉண்டாக்குகிறது. பயிற்சி செய்ய முடியவில்லை. என்ன செய்வது? 3) உலக விவகாரங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக உள்ளது, ஆனால் ஆன்மீகம் கஷ்டமாக இருக்கிறது. 4) மகரிஷியுடன் இருப்பதென்றால் என்ன? 5) மனதைக் கட்டுப்படுத்துவதும் மனதை ஒருமுக கவனத்தில் ஆழ்த்துவதும் எப்படி? 6) உலக வாழ்வில் தொழில் செய்து சம்பளம்சம்பாதிப்பதையும் ஆன்மீக பயிற்சிகளையும் சமரசப் படுத்தி வாழ்வது எப்படி? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  22. 74

    ரமண மகரிஷி ~ சச்சிதானந்தம் என்றால் என்ன? உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் - இதை அறிந்து உணர்வது எப்படி?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ மெய்மை, சொரூபம், உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் என்னும் "சச்சிதானந்தம்" என்றால் என்ன?  இதைஅறிந்து உணர்வது எப்படி?இத்தகைய அற்புதமான, மனதிற்கு இதமான அறிவுரைகளைக் கேட்கும் போது,  பகவான் ரமணர் சச்சிதானந்தமே தான் என்பது திடமாகபுரிகிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  23. 73

    ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்"

    வழங்குவது : வசுந்தரா. "எங்கு இருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்."  துதிப்பாடல் தீவினைகளை அகற்றும் வழி காட்டுகிறது. பகவான் திரு ரமண மகரிஷி மிக்க உயர்வான பரப்பிரம்மமே ஆனதால், அவரை மனதால் நினைத்தாலும் முக்தி கிடைக்கும்.. ரமண மகரிஷி துதிக்க வேண்டியஅவசியமில்லை. ஆனாலும், அன்பினாலும், கருணையினாலும், தீவிரமான பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய துதிப்பாடல்களை வழங்குகிறார். உண்மையானபக்தியும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிர ஆர்வமும் எப்படி இருக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு காண்பிக்கிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  24. 72

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? மகரிஷி விளக்குகிறார். இன்னும் பல உபயோகமான விஷயங்களைப் பற்றி சிலஅறிவாளர்களின் கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளிக்கிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  25. 71

    ரமண மகரிஷி ~ நிலையான சந்தோஷம் பெறுவது எப்படி? இதற்கு வழிமுறைகளை ரமண மகரிஷி தெளிவாக வழங்குகிறார்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சில நொடிகளுக்கே நிலைத்து பின் துன்பத்தில் முடியும் இன்பத்தால் என்ன பயன்? உண்மையான சந்தோஷமானால், அதுநிலைத்திருக்க வேண்டும்.  எந்த இன்னல்களாலும் அது பாதிக்கப்படக் கூடாது. அந்த நிலையான சந்தோஷத்தைப் பெறுவது எப்படி? இதைப் பற்றிய அற்புதஅறிவுரைகளை ரமண மகரிஷி நேரடியாக விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  26. 70

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (42) ~ ஆன்மவிழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? பெறுவதோடு கூட, அதை வைத்துக் கொள்வது, நீடிக்கச்  செய்வது, எப்படி? இந்த அனுபவங்களின் போதுசெய்யும் பயிற்சிக்கு சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கவேண்டுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  27. 69

    பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது ~ பரம்பொருள் சொரூப ஆன்மாவின் மீது நாற்பது வரிசைகள் Narrated

    வழங்குவது : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது (Narrated) ~ பரம்பொருளின் மீது, பரமாத்மனின் மீது, சச்சிதானந்த மயமான சொரூப ஆன்மாவின் மீது,  ரமணரின் நாற்பது வரிசைகள். தான் சொரூப ஆன்மாவே தான் என்று உணர மிகச் சிறந்த, நடைமுறை அறிவுரைகளை ரமண மகரிஷி வழங்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  28. 68

    ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  29. 67

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  30. 66

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (34 - 40) ~ பலவிஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. அவற்றில் சில :  1) யோகி ராமய்யா ரமணரின் அறிவுரைகளின் அனுபவத்தை விவரிக்கிறார். 2) த்வைதம் (இரண்டு), அத்வைதம் (ஒருமை) - இவை என்ன? 3) நாம் இறந்தவர்களைக் காண முடியுமா? 4) கர்மா என்றால் என்ன? 5) முக்தி அடைவதற்கு பாதை என்ன? 6) தான்மை அகங்காரம் எப்படி எழுந்தது? 7) செயல் நம்முடையதா இல்லையா என்று நாம் எப்படி அறிவது?  8) புத்தி சார்ந்த அறிவு போதுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  31. 65

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (33) ~ உலகம் மாயையா அல்லது மெய்மையா? மகரிஷி இந்த கொள்கைகளை விளக்குகிறார்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்  (33) ~ உலகம்மாயையா அல்லது மெய்மையா? பகவான் மகரிஷி இதைப் பற்றி உள்ள பல கொள்கைகளைப் பற்றி விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  32. 64

    பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 3 ~ ஒருவரின் மிக உயர்ந்த கடமை ~ மற்றும் பல விஷயங்கள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~  ரமண கீதை ~ அத்தியாயம் 3 ~ ஒருவரின் மிக உயர்ந்த கடமை ~ மற்றும் பல விஷயங்கள். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  33. 63

    பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 2 ~ மூன்று பாதைகள் ~ ஆன்ம ஞானத்திற்கு வேண்டிய 3 பாதை

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~  ரமண கீதை ~ அத்தியாயம் 2 ~ மூன்று பாதைகள் ~ ஆன்ம ஞானத்திற்கு வேண்டிய 3 பாதை. இவற்றை கச்சிதமான விதத்தில் மகரிஷி அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  34. 62

    ரமண மகரிஷி ~ குடும்ப பந்தம் என்றால் உண்மையில் என்ன? அந்த பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வது எப்படி?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ குடும்ப பந்தம் என்றால் உண்மையில் என்ன? அந்த பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வது எப்படி? பகவான்ரமணரது சொற்களைக் கேட்கும்போது, அவரது சாந்தி நிறைந்த முன்னிலையில் இருப்பதாகும். அதுவே மன அமைதியை ஏற்படுத்தும். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  35. 61

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (32) ~ அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்  (32) ~ அந்தபிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும். பகவான் ரமணர் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கிறார்! அதிர்ஷ்டமுள்ளவர்களால் தான் இதைக்கேட்கவும், இதைப் பற்றி சிந்தித்து பயிற்சி செய்யவும் முடியும். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  36. 60

    பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 1 ~ சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~  ரமண கீதை ~ அத்தியாயம் 1 ~ சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  37. 59

    ரமண மகரிஷி ~ திரு ரமண கீதை ~ அறிமுகம் ~ பகவத் கீதையில் கிருஷ்ணர் போல் திரு ரமண மகரிஷி விளக்குகிறார்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ திரு ரமண கீதை ~ அறிமுகம் ~ பகவத் கீதையில் கிருஷ்ணர்  போல் திரு ரமண மகரிஷி விளக்குகிறார். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  38. 58

    ரமண மகரிஷி ~ தான்மை எனும் பூதத்தை, திருமணத்தில் நுழைந்த அந்நியனை, ஒழித்து, சந்தோஷமாக இருப்பது எப்படி

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தான்மை எனும் பூதத்தை, திருமணத்தில் நுழைந்த அந்நியனை, ஒழித்து, சந்தோஷமாக இருப்பது எப்படி. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  39. 57

    ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்து வலிமை பெறுங்கள். அந்த அளவுக்கு உங்களது சூழ்நிலைகள் மேம்படும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்து வலிமை பெறுங்கள். அந்த அளவுக்கு உங்களது சூழ்நிலைகள் மேம்படும். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  40. 56

    ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்வது என்றால் என்ன? நடைமுறையில் எப்படி செய்வது? அதன் பலன்கள் என்ன?

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. கடவுளிடம் சரணாகதி செய்வது என்றால் என்ன? நடைமுறையில் எப்படி செய்வது? அதன் பலன்கள் என்ன? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidance

  41. 55

    பகவான் திரு ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள்; பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள்; பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidance

  42. 54

    ரமண மகரிஷி ~ சரணாகதி என்றால் என்ன? சரணாகதி என்பது தனது சொந்த மூல முதலான சொரூபத்திற்கு சரணடைவதாகும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ சரணாகதி என்றால் என்ன? சரணாகதி என்பது தனது சொந்த மூல முதலான சொரூபத்திற்குசரணடைவதாகும். ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidance

  43. 53

    ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும்

    ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  44. 52

    ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  45. 51

    ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1)

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1). Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  46. 50

    ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது?  (2) ~ விவரங்கள் :1) எவ்வளவு தூரத்தில்இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? 2) குருவின் அருள் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?  3) மனதைக் கட்டுப்படுத்துவதும் ஆழிநிலை தியானமும் தீயவட்டமா? (vicious circle) 4) ஆன்ம ஞானம் பெற ஒரு ஆசான் தேவையா? 5) ஒருவர் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டே இருந்தால் என்ன? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  47. 49

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சிஅலைபாயும் மனம் இன்னும் பல. ~  விவரங்கள்:  1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான்என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒரு கடவுளின்  உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா?   6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது?   ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின்தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா?  10) கடவுள் உருவ வழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம்சொர்க்கத்திற்குப் போவதில்லையா?  12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் முயலக் கூடாதா?  ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  48. 48

    ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது?  (1) ~ விவரங்கள் : 1) சொருப சாம்ராஜ்யம்அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது ஒரு ஜீவனின் நேர்மையான முயற்சிகள் மட்டுமே போதுமா? 2) தெய்வீக அருளிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம் என்றுஇருக்கிறதா? 3) மன அமைதி அடைவது எப்படி? 4) பகவானின் அருளைப் பெற என்ன செய்வது? 5) பகவான் நம்மை உணர்ந்து அருள் காட்டுகிறாரா? 6) ராஜேந்திரபிரசாத்  : மகாத்மா காந்திக்கு ஒரு அறிவுரை எடுத்துச் செல்ல வேண்டும். அது என்ன? 7) ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி : ஆன்மா ஒன்று தான்; இருந்தாலும், இப்போதுஎனக்குள்ள இன்னலிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. அருள் தேவை. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  49. 47

    ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? பணிகளை பற்றுதல் இல்லாமல் செய்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள்.  ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா? 2) ஒருவர் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே தனிமையைக் கடைப்பிடிக்கலாம், இல்லையா? 3) தியானம் செய்வது அவசியமா? 4) தொழிலும் தியானமும் முரண்படுமா? 5) வேலையால் களைப்படைவதால்தியானம் செய்வது கஷ்டமாக இருக்கிறது. 6) பணிகளில் திறம் பெறுவது எப்படி? 7)  உள்ளத்தில் சமநிலை என்றால் என்ன? 8) பணிகளை பற்றுதல் இல்லாமல் செய்வதுஎப்படி?  8) பணிகள் வெற்றியில் முடிவுறுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

  50. 46

    ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம்.  ரமண மகரிஷியின்நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) உலக வாழ்வில்சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன்  சமரசப்படுத்துவது எப்படி? 2) பகவத்கீதை செயல்படுவதற்காக கற்பிக்கப் பட்டது. அதன் பொருள் என்ன? 3) கர்ம யோகம் என்றால் என்ன? 4) பணிகளை தியானத்துடன் சமரசப்படுத்துவது எப்படி? 5) தனிமையில் வாழ விரும்புகிறேன். இது நல்லதா கெட்டதா? 6) என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்குமோ என்று நான் கவலைப் படுவது சரியா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

HOSTED BY

Vasundhara ~ வசுந்தரா

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does Ramana Maharshi Guidance (Tamil) have?

Ramana Maharshi Guidance (Tamil) currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is Ramana Maharshi Guidance (Tamil) about?

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு...

How often does Ramana Maharshi Guidance (Tamil) release new episodes?

Ramana Maharshi Guidance (Tamil) has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to Ramana Maharshi Guidance (Tamil)?

You can listen to Ramana Maharshi Guidance (Tamil) on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts Ramana Maharshi Guidance (Tamil)?

Ramana Maharshi Guidance (Tamil) is created and hosted by Vasundhara ~ வசுந்தரா.
URL copied to clipboard!