PODCAST · society
ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge
by ஞானத்தேடல் - Quest for Knowledge
ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.
-
140
ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை பாலை முக்கூட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் இவை போன்று நெய்தல் முக்கூட்டான மலர்கள் - ஞாழலும்(56), தாழையும்(63), புன்னையும் (93) புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் - ஐங்குறுநூறு 103 மன்றப் புன்னை மாச் சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே - நற்றிணை 49 தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல் வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப - கலித்தொகை 127 ஞாழல் 'குமரி', 'கன்னி', 'பாவை -என்னும் மூன்று அடை மொழி தழையோர் கொய்குழை அரும்பிய குமரிஞாழல் - நற்றிணை ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து - இறையனார் அகப்பொருள் உரை (நக்கீரர்) கன்னி இளஞாழல் கன்னி நறுஞாழல் - சிலம்பதிகாரம் மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும் கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்தும்என் நெஞ்சு - திணைமொழி ஐம்பது 49 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - திருக்குறள் ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த் துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. குறுந்தொகை 50 நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ நெய்தல் மா மலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, ''அன்னாய்!'' என்னும் குழவி போல, இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், நின் வரைப்பினள் என் தோழி; தன் உறு விழுமம் களைஞரோ இலளே. குறுந்தொகை 397 ''நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் - நற்றிணை 267 ஞாழற் பத்து ஐங்குறுநூறு எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப் புள்இறை கூரும் துறைவனை உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. ...... எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. ஞாழற் கோயில் பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே. - அடைவுத் திருத்தாண்டகம் புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, நிலமலிநெய்த் தானத்தோடு, எத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால், தொண்டீர், கலிவலிமிக் கோனைக் கால் விரலால் செற்ற கயிலாய நாதனையே காண லாமே. - திருநாவுக்கரசர்
-
139
ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை மௌவல் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல், புன்னகையோ மௌவல் மௌவல் மனைநடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற்றிணை மாதரார் முறுவல்போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலித்தொகை 27 மணமௌவல் முகைஅன்ன மாவீழ் வார் நிரைவெண்பல் - கலித்தொகை 14 கொகுடி நறுந்தண் கொகுடி திருஞானசம்பந்தர் “புன்னையே கொகுடி முல்லை”, “கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்” நறும் பாதிரியு நாண்மலர்க் கொகுடியும் - பெருங்கதை குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி - சூளாமணி கருப்பறியலூர் / மேலைக்காழி / தலைஞாயிறு சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்ப றியலூர்க் கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக் கோயில் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. சேடல் நச்சினார்க்கினியர் - பவழக்கால் மல்லிகை உ. வே. சா- பவழமல்லிகை பாரிசாதம் சேடல் நெய்தல் பூளை மருதம் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - சிலப்பதிகாரம் சேடல் என்பதற்கு உச்சிச்செலுந்தில் என்னும்மரம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். செம்மல் கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின் - திருவிளையாடற்புராணம். செங்குரலி ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் - புறநானூறு 283 கோடல் காந்தள், தோன்றி, கோடல் கோடு - மரக்கொம்பு, வளைவு, மலை முகடு, யானைக் கொம்பு (மருப்பு), சங்கு வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - அகநானூறு 264 வெஞ் சின அரவின் பை அணந்தன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ அகநானூறு 154 கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - அகநானூறு 23 ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால் - கலித்தொகை 48 களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று, ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - கலித்தொகை 101 தண்கமழ் கோடல் துடுப்பு ஈன - திணைமொழி ஐம்பது 21 தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின் புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை, கொல்லுநர் போல, வரும். ஐந்திணை எழுபது 17 கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - பரிபாடல் பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு; கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே! - திருநாவுக்கரசர் கூடலிழைத்தல் : இது போன்று பத்து பாசுரங்களில் ஆண்டாள் கூடலிழைத்து அரங்கன் தன்னை சேர்வாரா மாட்டாரா என பார்க்கிறார். தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார், பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட, கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமணன், ஒட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னொடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே
-
138
ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)
சேந்தனார் திருப்பல்லாண்டு மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே. -தனிப்பாடல் செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம். வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம். "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" திருவிடைக்கழி - சேந்தன்மங்கலம். இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப்பெயருடன் இருக்கின்றது. இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர். திருப்பல்லாண்டு மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. (1) மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே (2) நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித் தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (3) சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (4) புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக் கென்செய வல்லம்என்றும் கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே (5) சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (6) சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில் ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே (7) சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே (8) பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே (9) தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (10) குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே (11) ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே (12) எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு தாம்மெம் பிரான்என் றென்று சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேற் பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று பல்லாண்டு கூறுதுமே (13)
-
137
ஞானத்தேடல் - Ep 137 - கொடிக்கவி - (Gnanathedal)
கொடிக்கவி மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன. உந்தி களிறு உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட் பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும். திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார் சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார் இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார் உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார் சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார் திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார் வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார் போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார் கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார் நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார் உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார் சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார் கொடிக்கவி ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே. பொருளாம் பொருளேது போதேது கண்ணே திருளாம் வெளியே திரவே - தருளாளா நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி. வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந் தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப் பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே குறிக்குமரு ணல்கக் கொடி. அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும் பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப் பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங் கூசாமற் காட்டாக் கொடி. அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற் கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங் கூறாமல் கூறக் கொடி. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #மெய்கண்டசாத்திரங்கள் #சைவசமயம் #சிவன் #மெய்கண்டதேவர் #உமாபதி #கொடிக்கவி #திருநாவுக்கரசர் #திருஞானசம்பந்தர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #shaivam #shiva #thirunavukarasar #thirugnanasambandar #guru #trending #umapathysivam For enquiries/feedback: [email protected]
-
136
ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை தாழை மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும். தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு — புறநானூறு 29 கோள் தெங்கின் குலை வாழை — பொருநராற்றுப்படை வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த — பெரும்பாணாற்றுப்படை தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் (நன்னூல் 187) நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா – நின்று தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். மூதுரை, ஔவையார் வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம். - பழமொழி நானூறு தளவம் பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை, ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப, ஐங்குறுநூறு புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, காடே கம்மென்றன்றே; அவல அகநானூறு பிடவம் மலர, தளவம் நனைய கார்கவின் கொண்ட கானம் காணின் ஐங்குறுநூறு தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று காரிது பருவம் ஆயின் வாரா ரோநம் காத லோரே. - குறுந்தொகை தாமரை செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூர் அன்ப பா எனப்படுவது உன் பாட்டு பூ எனப்படுவது பொறிவாழ் பூவே - நால்வர் நான்மணிமாலை நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். - மூதுரை மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத் தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே. - பரிபாடல் திரட்டு பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ் ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற் பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே - சீவக சிந்தாமணி முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும் - திருமுருகாற்றுப்படை மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில் சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, வேனிலானே தண்ணியள்; பனியே, வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, அலங்கு வெயிற் பொதிந்த தாமரை உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே - குறுந்தொகை 376- (படுமரத்து மோசிக்கொற்றனார்) Biophysics and Physiology of Temperature Regulation in Thermogenic Flowers Thermoregulating lotus flowers – Nature 1996 விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை - நற்றிணை சுடர்ப் பூந்தாமரை - அகநானூறு எரி அகைந்தன்ன தாமரை - அகநானூறு வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் - நற்றிணை தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம் வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும் பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக் கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே - விவேகசிந்தாமணி
-
135
ஞானத்தேடல் - Ep 135 - சித்திரக்கவி - மாலைமாற்று - (Gnanathedal)
சித்திரக்கவி - மாலைமாற்று சீகாழி – திருமாலைமாற்று யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. – திருஞானசம்பந்தர் --------------------------------------------------------- யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா (1) யாம் ஆமா - நீ ஆம் ஆம் - மாயாழீ - காமா- காண் - நாகா காணாகாமா - காழீயா - மாமாயாநீ - மா - மாயா --------------------------------------------------------- யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (2) யாகா - யாழீ - காயா - காதா - யார் ஆர் - ஆ - தாய் ஆயாய் - ஆயா - தார் - ஆர் ஆயா - தாக ஆயா - காழீயா - கா யா --------------------------------------------------------- தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (3) தாவா - மூவா - தாசா - காழீநாதா - நீ - யாமா - மா மா - யா நீ - தானாழி - காசா - தா - வா - மூ - வாதா --------------------------------------------------------- நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (4) நீவா - வாயா - கா - யாழீ - காவா - வான்நோவாராமே மேரா - வான் - நோவாவா - காழீயா - காயா - வாவா நீ --------------------------------------------------------- யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (5) யா - காலா - மேயா - காழீ யா - மேதாவீ - தாய் ஆவி வீயாதா - வீதாம் - மே - யாழீ - யாம் - மேல் - ஆகு - ஆயா --------------------------------------------------------- மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (6) மேலேபோகாமே - தேழீ - காலாலே - கால் ஆனாயே ஏல் - நால் - ஆக - ஆல் - ஏலா - காழீதே - மேகா - போலேமே --------------------------------------------------------- நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (7) நீயா - மாநீ - ஏயா - மாதா - ஏழீ - காநீதானே நே - தாநீ - காழிவேதா - மாயாயேநீ - மாய் - ஆநீ --------------------------------------------------------- நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (8) நேணவராவிழயாசைழியே (நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே) - வேகதளேரியளாயுழிகா (வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா) காழியு(ள்)ளாய்! - அரிளேதகவே (அரு, இளவு, ஏது, அகவே) - ஏழிசை இராவணனே --------------------------------------------------------- காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. காலே - மேலே - காண் நீ - காழீ - காலே மாலே - மே பூ பூ - மேல் ஏ(ய்) - - மாலே - காழீ! காண் - காலே மேலே கா. --------------------------------------------------------- வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. வேரியும் - ஏண் - நவ- காழியொயே - ஏனை - நீள்நேம் - அடு - அள் - ஓகரது ஏ தேரகளோடு - அமணே - நினை - ஏய் - ஒழி - காவணமே - உரிவே --------------------------------------------------------- நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. நேர் - அகழ் ஆம் - இதய ஆசு - அழி - தாய் ஏல் நன் நீயே - ஏல் + ந + அன் -ஆய் உழிகா காழியுளானின் - நினையே - நினையே - தாழ்(வு) - இசையா - தமிழாகரனே Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html For enquiries/feedback: [email protected]
-
134
ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் ...... காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், நெய்தல் வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79 (52) காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 (66) நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. கவிஞர் இளஞ்சேரன் (இலக்கியம் ஒரு பூக்காடு) ஆம்பல் – செவ்வாம்பல் / செவ்வல்லி / அரக்காம்பல் ; வெள்ளாம்பல் / அல்லி குவளை – செங்குவளை ; கருங்குவளை நெய்தல் – நீலநிறம் / வெளிர் நீலம் காவி – நீலநிறம் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங்குறுநூறு மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட்டினப்பாலை வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188 நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187 முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும் - திருமுருகாற்றுப்படை பாசடை கலித்த கணை கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70 அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401 சிறு பாசடைய நெய்தல் – நற் 27 பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நெய்தல் பாசடை புரையும் அம் செவி பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47 ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. - புறநானூறு 194 ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார் கருமங்கள் வேறு படும் - நாலடியார் (கூடா நட்பு) அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு - மூதுரை 17 முருகன் தீம்புனல் அலைவாய் - தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை. “வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' கழனி உழவர் கலி சிறந்து எடுத்த கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் திரு மணி விளக்கின் அலைவாய்ச் - அகநானூறு 266 பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, 'பிறர்' எனக் குணம் கொல்லாது, ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், வானத்து அன்ன வண்மையும், மூன்றும், உடையை ஆகி, இல்லோர் கையற, நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, கடு வளி தொகுப்ப ஈண்டிய வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! புறநானூறு 55 தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல் For enquiries/feedback: [email protected]
-
133
ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் .............. வள்ளி வள்ளி நுண்ணிடை - அகநானூறு 286 வள்ளிமருங்குல் - புறநானூறு 316 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி, பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத கானம் கடந்து சென்றார்? ஐந்திணை ஐம்பது உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே - புறநானூறு 109 வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! - அகநானூறு 286 பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! - கலித்தொகை 41 கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21 அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! - பரிபாடல் 14 எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101, பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216 மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250 மாவள்ளிக் கிழங்கு / மாவலிக் கிழங்கு / மாகாளிக்கிழங்கு நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி செவ்வள்ளி அல்லது இராசவள்ளி மரவள்ளி / ஆள்வள்ளி சர்க்கரை வள்ளிக் கிழங்கு வெற்றிலை வள்ளிக் கிழங்கு ஆனைவள்ளி / நீர்வள்ளிக் கிழங்கு கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. வள்ளிமலை – 11 திருப்புகழ் வள்ளியூர் – 1 திருப்புகழ் வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. ---- கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை துள்ளிக்க னார்க்க ...... யவுகோப கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல் அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல் கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும் வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல் புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. - திருப்புகழ் 'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது' என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன் சிவபெருமானுக்கு உபதேசித்தார். யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். For enquiries/feedback: [email protected]
-
132
ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)
தவறை உணர்தல் வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி, ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம். தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன், பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன், கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா., அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால், என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன், குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா., அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து, நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன், தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல் அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின் நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே - திருமந்திரம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஆழ்வார்கள் #பிரபந்தம் #திவ்யப்பிரபந்தம் #திருமால் #விஷ்ணு #கதை #வரலாறு #திருமங்கையாழ்வார் #திருமூலர் #திருமந்திரம் #தவறு #உணர்தல் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #alwar #divyaprabandham #azhwar #thirumangaialwar #thirumoolar #thirumandhiram #mistakes #lifelessons #motivation #story #lifehistory #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]
-
131
ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் .............. வாழை இருகயல் உண்கண் இளையவளை வேந்தன் தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால் வாழைக்காய் உப்புறைத்தல் இல். - பழமொழி நானூறு 338 சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, மயங்கு துயர் உற்ற மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் மா மலைநாடன் கேண்மை காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. - குறுந்தொகை 308 அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, கடுங் கண் கேழல் உழுத பூழி, நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, சாந்த விறகின் உவித்த புன்கம் கூதளம் கவினிய குளவி முன்றில், செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் பாடுப என்ப பரிசிலர், நாளும் ஈயா மன்னர் நாண, வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. - புறநானூறு 168 மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை, வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225 பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை, வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237 புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் குலைவாய் தோயும் கொழு மடல் வாழை அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் செம் முக மந்தி ஆரும் நாட! - நற்றிணை 355 படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் மெல் விரல் மோசை போல, காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப - நற்றிணை 188 குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134 சிலம்பில் போகிய செம் முக வாழை அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் நல் வரை நாடனொடு அருவி ஆடியும் அகநானூறு 302 தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர், கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், 360 தீம் பல் தாரம் முனையின், சேம்பின் முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல் - பெரும்பாணாற்றுப்படை For enquiries/feedback: [email protected]
-
130
ஞானத்தேடல் - Ep 130 - இருபா இருபது - (Gnanathedal)
இருபா இருபது மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன. உந்தி களிறு உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட் பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும். திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார் சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார் இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார் உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார் சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார் திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார் வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார் போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார் கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார் நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார் உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார் சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார் கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் - வெண்ணெய் நல்லூர் மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை கைகண்டார் உள்ளத்துக் கண் கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! காரா கிரகக் கலி ஆழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும! வினவல் ஆனாது உடையேன் எனது உளம் நீங்கா நிலை ஊங்கும் உளையால் அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின் ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய் சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப் வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும! இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும் பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின் வேறோ உடனோ விளம்பல் வேண்டும் சீறி அருளல் சிறுமை உடைத்தால். அறியாது கூறினை அபக்குவ பக்குவக் குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின் அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால் பக்குவம் அதனால் பயன்நீ வரினே நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே இணை இலி ஆயினை என்பதை அறியேன் யானே நீக்கினும் தானே நீங்கினும் கோனே வேண்டா கூறல் வேண்டும் "காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும் மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன் கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின் "ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே? அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே? ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே? உகுகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே? பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே? பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே? காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே? காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே? ஆட்பா லவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை; கிளக்கவேண்டா; கோட்பா லனவும் விளையும் குறுகாமை எந்தை தாட்பால்வணங்கித் தலை நின்று இவைகேட்கத் தக்கார் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #மெய்கண்டசாத்திரங்கள் #சைவசமயம் #சிவன் #மெய்கண்டதேவர் #அருள்நந்தி #திருநாவுக்கரசர் #திருஞானசம்பந்தர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #shaivam #shiva #thirunavukarasar #thirugnanasambandar #guru #trending For enquiries/feedback: [email protected]
-
129
ஞானத்தேடல் - Ep 129 - சகுனம் - 2 - (Gnanathedal)
சகுனம் - 2 சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Sagunam (Signs/Omen) - 2 Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode References சகுனம் சொல்லரியகருடன்வா னரமரவ மூஞ்சூறு சூகரங் கீரி கலைமான் றுய்யபா ரத்வாச மட்டையெலி புன்கூகை சொற்பெருக மருவு மாந்தை வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல் விளங்குமிரு நா வுடும்பு மிகவுரைசெ யிவையெலாம் வலமிருந் திடமாகில் வெற்றியுண் டதிக நலமாம் ஒல்லையின் வழிப்பயண மாகுமவர் தலைதாக்க லொருதுடை யிருத்தல் பற்ற லொருதும்ம லாணையிட லிருமல்போ கேலென்ன வுபசுருதி சொல்லியவை யெலாம் அல்லறரு நல்லவல வென்பர்முதி யோர்பரவு மமலனே யருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. 62 இதுவுமது நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை நாலி சிச்சிலி யோந்திதான் நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி நாடரிய சுரபி மறையோர் வரியுழுவை முயலிவை யனைத்தும்வல மாயிடின் வழிப்பயண மாகை நன்றா மற்றுமிவை யன்றியே குதிரையனு மானித்தல் வாய்ச்சொல் வாவா வென்றிடல் தருவளை தொனித்திடுதல் கொம்புகிடு முடியரசர் தப்பட்டை யொலிவல் வேட்டுத் தணிமணி முழுக்கொழுத லிவையெலா மூர்வழி தனக்கே நன்மை யென்பர் அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய வண்ணலே யருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. 63 இதுவுமது தலைவிரித் தெதிர்வருத லொற்றைப் பிராமணன் றவசி சன்னாசி தட்டான் றனமிலா வெறுமார்பி மூக்கறைபுல் விறகுதலை தட்டைமுடி மொட்டைத் தலை கலன்கழி மடைந்தையர் குசலக்கலஞ் செக்கான் கதித்ததில் தைல மிவைகள் காணவெதிர் வரவொணா நீர்க்குட மெருக்கூடை கனிபுலா லுபய மறையோர் நலமிகு சுமங்கலை கிழங்கு சூதகமங்கை நாளும் வண்ணா னழுக்கும் நசைபெருகு பாற்கலச மணிவளையன் மலரிலைக னாடியெதிர் வர நன்மையாம் அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் பரசணியு மண்ணலே யருமை மதவே ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. 64 துடிநூல் சீருடனே துடிக்கிலுச்சி யிடரேநீங்கும் சிறந்தவுச்சிவலந்துடிக்கி லச்சஞ்சொல்லும் பேருடனேவுச்சியிடம் பெருமையாகும் பின்றலையே துடிக்கிற் சத்துருக்களுண்டாம் சார்புடனேதலையடங்கற் றுடிக்குமாகின் றலைவனாற்பெருமை சம்பத்துமுண்டாம் நேருடனேநெற்றியிடத் துடிக்குமாகின் நேர்வார்த்தைசம்பத்து நிறையவாமே ‘நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச் சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?- பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல் வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன். ‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள், துனி அறு புருவமும், தோளும், நாட்டமும், இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என் நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய் ‘மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்: அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன், பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத் துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே ‘நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால் எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்; “அஞ்சல்” என்று இரங்குவாய்! அடுப்பது யாது?’ என்றாள் உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென் - சிலப்பதிகாரம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #சகுனம் #தொல்காப்பியம் #தமிழ் #ஞானம் #கம்பராமாயணம் #கம்பர் #சிலப்பதிகாரம் #துடிநூல் #நிமித்தம் #நற்பலன் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Omen #Signs #tholkaapiyam #silappathikaram #thudinool #trending #practices #culture For enquiries/feedback: [email protected]
-
128
ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் குல்லை கஞ்சங்குல்லைப்பூ, கஞ்சாங்கோரை, மலைப்பச்சை, புனத்துளசி, நாய்த்துளசி, திருநீற்றுப்பச்சை குல்லைக்கண்ணி வடுகர் முனையது வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே! - மாமூலனார் குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - நற்றிணை முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201 மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும், புல் இலை வெட்சியும், பிடவும், தளவும், குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர் பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார் முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர், நல்லவர் கொண்டார் மிசை, - கலித்தொகை 103 இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு என்றார் நத்தத்தனார் குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை 29 குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொருநராற்றுப்படை 234 பிடவம் அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் வள மலை நாடன் நெருநல் நம்மொடு கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது அல்லல் அன்று அது காதல் அம் தோழி! தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி 10 கண்டும், கழல் தொடி வலித்த என் பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! - நற்றிணை 25 இலை இல பிடவம் இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து - நற்றிணை 242 ‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வள மழை பொழிந்த வால் நிறக் களரி, உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் கை மாண் தோணி கடுப்ப, பையென, மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் - அகநானூறு 344 பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. தித்தன் செல்லா நல் இசை உறந்தைக் குணாது, நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், புறநானூறு 395 அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே சுந்தரர் தேவாரம் சிறுமாரோடம் உலகம் படைத்த காலை தலைவ! மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே முதிரா வேனில் எதிரிய அதிரல் பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன் அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால் தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும் அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே-நற். 337 எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென, பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் குறிப்பிடுகின்றன. கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில் காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது ஈரிரவும் தூங்காது என் கண் For enquiries/feedback: [email protected]
-
127
ஞானத்தேடல் - Ep 127 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - 2 - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, முல்லை புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன் மணம் கழிந்த பின்றைக், - அகநானூறு 86 யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழி கொண்ட, நறுவீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப - முல்லைப்பாட்டு அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர் கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள் - சிலப்பதிகாரம் செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து, அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து, இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ, நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது, - நெடுநல்வாடை தருமணல் தாழப் பெய்து இல்பூவ லூட்டி எருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமணம். (கலி: 114: 12-14) கற்பு முல்லை முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவுஇன் ஊரே. - அகநா நறுமணம் மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன். குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின் மெல்லியல் மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர் - சிறுபாண் கற்பு என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் கற்பிக்கப்பட்ட நெறி அல்லது ஒழுக்கமாகும். இதனால் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணை யைச் சார்ந்த பாடல்கள் கற்பு என்பதற்கு விளக்கமாக அமையக் கூடியவையே ஆகும். அதற்கு 'கல்வி' என்ற பொருளைப் பழங்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழங்கினர். கற்பெனப்படுவது சொல் திறம்பாமை நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை - கொன்றை வேந்தன் இயல்பு வெற்றி போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன. ஒரு நாட்டு வழக்குப் பாடல். 'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' - இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம். திருமுல்லை வாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி. முல்லைப்பாட்டு நூல் எழுந்தது போன்று முல்லைப் பெயர் கொண்ட புலவர் பட்டியலும் உண்டு; அள்ளூர் நன்முல்லையார் காவல் முல்லைப் பூதனார் தவளம் – வெண்ணிறமுல்லை தளவம் – செம்முல்லை முல்லை - முனைவர் வி.சி. சசிவல்லி (தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி வி.சி.சசிவல்லி). My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
126
ஞானத்தேடல் - Ep 126 - நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் - (Gnanathedal)
நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத், தானும் உண்ணான், உலகமும் கெடுமே - புறநானூறு (184) வரி எப்படி வசூலிக்க வேண்டும் என்ற முறையை மிக அழகாக அனைவரும் புரியும் வண்ணம் எளிமையாக இந்த பாடலில் விளக்கப்பட்டுள்ளது. பாடலின் விளக்கம்: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும். அறந்துஞ்சும் உறந்தை அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்று ஒரு பாடலில் இவர் குறிப்பிட்ட உவமை கோப்பெருஞ்சோழன் மீது இவர் கொண்டிருந்த பற்றியும் நாட்டின் வளத்தையும் அழகாக விளக்குகிறது. யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்காகியர் என வினவுதிராயின், மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே - புறநானூறு (191) நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, இசைமரபு ஆக, நட்புக் கந்தாக, இனையதோர் காலை ஈங்கு வருதல்; ‘வருவன்’ என்ற கோனது பெருமையும், அது பழுது இன்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே; அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை இழந்தஇவ் வுலகம் என்னா வதுகொல்? அளியது தானே! - புறநானூறு (217) என்று வியந்து வியந்து பாடி உருகினார்.. தானும் வடகிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார். உடனே மன்னன் தடுத்து, “உமக்கு இன்னும் மகப்பேறு இல்லை. மகப்பேறு இல்லாத மாந்தர்கள் வானவர் தம் உலகு புகப்பெறார். ஆகையால் மகன் பிறந்த பிறகு வந்து அரசனது நடுகல் இடம் கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு. சங்க கால புலவர்களின் வாழ்க்கை நமக்கு மொழியை மட்டும் புகட்ட வில்லை. மொழியோடு காலத்தால் அழியாத பல உண்மைகளையும் மனிதன் வாழும் நெறிகளையும், உயர்ந்த ஞானத்தையும் நமக்கு வழங்குகின்றன My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #பிசிராந்தையார் #கோப்பெருஞ்சோழன் #பொத்தியார் #புறநானூறு #நற்றிணை #அகநானூறு #நட்பு #அன்பு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #pisiraandhaiyar #koperuncholan #purananooru #natrinai #friends #friend #friendship #respect #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]
-
125
ஞானத்தேடல் - Ep 125 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு முல்லை கல் இவர் = கல்லில் படரும் கல்லில் படரும் முல்லை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே – தொல்காப்பியம் முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் – சிலப்பதிகாரம் ‘முல்லை பெரிதுகமழ் அலரி” (நற்:361:1) 'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர, நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு, கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம் புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ; அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யா , நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என் சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி, பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! ஈங்கு எவன் அஞ்சுவது; அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும் அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண் வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், அல்கலும் சூழ்ந்த வினை.' - கலித்தொகை - 115 எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர் புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம் கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூஉ; தொழுவத்து, சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக் கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று மன்; அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது கெட்டனள், என்பவோ, யாய்; இஃதொன்று கூறு; கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா! அவன் கண்ணி அன்றோ, அது; 'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின், செய்வது இலாகுமோ மற்று; எல்லாத் தவறும் அறும்; ஓஒ! அஃது அறுமாறு; 'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின், நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம், அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்' அன்னையோ, ஆயர் மகனையும் காதலை, கைம்மிக ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ நீ உற்ற நோய்க்கு மருந்து; மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா! வருந்துவேன் அல்லனோ, யான்; வருந்தாதி; மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா, தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப் பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு. கலித்தொகை - 107 சீவக சிந்தாமணி பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள் புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ் அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி கம்பலம் போர்த்த போலும் கடி மலர் காவு புக்காள் கலித்தொகை 103 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள் அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆய மகள் தோள் கலித்தொகை 106 ஆங்கு, போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர் 40 காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே! 'கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன்' என்று, ஊரார் சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
124
ஞானத்தேடல் - Ep 124 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, பாலை சுரமும் சுரம் சார்ந்த நிலமும் பாலை எனப்பெயர் பெற்றன. முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம் குடசப்பாலை வெட்பாலை தீம்பாலை (தித்திப்புப் பாலை தீம்பாலை) மலைப்பாலை குளப்பாலை கொடிப்பாலை கருடப்பாலை உலக்கைப்பாலை ஏழிலைப்பாலை (ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி, ஏழிலம்பாலை) பாலை நின்ற பாலை நெடுவழி - சிறுபாணாற்றுப்படை பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை - நற்றிணை திருப்பாலைப்பந்தல் உலா - காலிங்கராய எல்லப்ப நயினார்' இலக்கியமும் கல்வெட்டுக்களும் - திரு. வை. சதாசிவ பண்டாரத்தார் - திருப்பாலைப்பந்தல் உலா - இறைசைப் புராணம் - திருமலை நயினார் சந்திரசேகரர் - ஓங்கு கோயிற் புராணம் - திருவம்பல முடையார் மறைஞானசம்பந்தர் திருப்பாலைப்பந்தல் - தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகா. திருக்கழிப்பாலை கடலூர் மாவட்டம். திருப்பாலைவனம் - திருவள்ளூர் மாவட்டம் - அமைந்துள்ள அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயிலாகும். திருப்பாலை - மதுரை ஏழிலைப் பாலை நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13 ஏழு சுரங்களை குரல்(சட்ஜம்), துத்தம்(ரிஷபம்), கைக்கிளை(காந்தாரம்) உழை(மத்யமம்), இளி(பஞ்சமம்), விளரி(தைவதம்), தாரம்(நிஷாதம்) என்றனர். வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு குதிரையும் யானையும் குயிலும் தேனுவும் ஆடும் என்றிவை ஏழிசை ஓசை - பிங்கல நிகண்டு துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. - மூத்த திருப்பதிகம் ஏழ்பெரும் பாலைகள் - செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை முல்லை - முல்லையாழ் - செம்பாலை – அரிகாம்போதி குறிஞ்சி - குறிஞ்சி யாழ் - படுமலைப் பாலை - நடபைரவி மருதம் - மருதயாழ் - கொடிப்பாலை / கோடிப்பாலை – கரகரப்பிரியா மேற்செம்பாலை - கல்யாணி விளரிப்பாலை - நெய்தல் யாழ் – தோடி செவ்வழிப்பாலை – இருமத்திமதோடி அரும்பாலை - பாலை யாழ் – சங்கராபரணம் செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால் இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள் கூடினான், பின் பெரிது கூர்ந்து. - திணைமாலை நூற்றைம்பது விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்; முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ, பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன், ஆங்கண் அறிய உரை. ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை - பொருநராற்றுப்படை முல்லை இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப், பாணன் சூடான் ; பாடினி அணியாள் ; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? - புறநானூறு 242 கார் புறந்தந்த நீருடை வியனுலகம் பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை! நகுவை போலக் காட்டல் தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே? - குறுந்தொகை 162 முல்லைப் பிராட்டி! நீயுன் முறுவல்கள் கொண்டு, எம்மை அல்லல் விளைவியே லாழிநங் காய்! உன்ன டைக்கலம், கொல்லை யரக்கியை முக்கரிந் திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால், நானும் பிறத்தமை பொய்யன்றே For enquiries/feedback: [email protected]
-
123
ஞானத்தேடல் - Ep 123 - எண்ணலங்காரம் - (Gnanathedal)
எண்ணலங்காரம் ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய், ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய், வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய், ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே முதலில் ஆறு தொழில்களைச் சொல்கிறார் - படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது இரண்டாவது ஆறாக, இந்தக் காரியங்கள் செய்வதற் கான ஆறு பருவ காலங்களைச் சொல்கிறார். அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், என்று ஆவணி முதல் இரண்டு இரண்டு மாதங்களாகக் கணக்கிடப்படும் பருவங்கள். அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் காரியங்கள் செய்யவேண்டும் என்கிற நியதியைக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக ஆறு யாகங்களைக் குறிப்பிடுகிறார்: வேதம் ஓதல், ஓமம் வளர்த்தல், பலி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல், இரப்போர்க்களித்தல் போன்றவற்றை, யாகங்கள் செய்பவர்கள், அனுஷ்டிக்கத் தக்க ஆக்னேயம், அக்னீஷோமியம் போன்ற ஆறு காரியங்கள் உள்ளன அவைதான் ஆழ்வார் குறிப்பிடும் மூன்றாவது ஆறு. இனி ஐந்துக்களைப் பார்க்கலாம். முதல் ஐந்து, ஐந்து யக்ஞங்களாகும். தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, இயற்கைக்கு, மனிதர்களுக்கு, பிரம்மாவுக்கு என்று ஐந்து யக்ஞங்கள் சொல்கிறார். இரண்டாவது ஐந்து உண்ணும்போது செய்யப்படும் ஐந்து ப்ராண ஆஹூதிகளைச் சொல்கிறாராம். மூன்றா வது, ஐந்து வகை அக்கினி. இவைகளுக்கெல்லாம் உள்ளுறை வடிவமாக இருப்பவன் திருமால்தான். இவைகளையெல் லாம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் சிறப்புக்களான (ஏறு சீர்) அறிவும் வைராக்கியமும் ஆழ்வார் சொல்லும் இரண்டு. இதனால் ஏற்படும் பயன்கள் மூன்று: செல்வம், கைவல்யம் என்னும் மோட்சம், பகவதப்ராப்தி என்னும் வைகுந்தம். ஆழ்வார் சொல்லும் ஏழு. இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான (1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம் என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே. இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குணாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ் அவர் குறிப்பிடும் எட்டு பலன்கள். அவை பாபமற்ற தன்மை, கிழத்தனம் அற்ற தன்மை, மரணமற்ற தன்மை,சோகமற்றிருப்பது, பசியற்றிருப்பது/தாகமற்றிருப்பது, வீண் போகாத இஷ்டம், வைராக்கியம் "மெய்யினோடு பொய்யுமாய்" என்ற சொற்றொடர் சிந்திக்கத்தக்கது ஆழ்வார் பாடல்களில் இவ்வகையில் எதிர்மறைகள் பல இடங்களில் வரும். "உளன் எனில் உளள் அவன் உருவம் இவ்வருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்" என்று நம்மாழ்வாகும், மெய்யாககே மெய்யனாகும் பொய்யர்க்கே பொய்யனாகும்"என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையிலும், "மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்" என்று திருவாய்மொழியிலும் கூறுவதன் உள்ளர்த்தம், மற்ற தெய்வங்களைத் தொழுதாலும் அவைகளினுள்ளும் விரவியிருப்பது, மேலும் அவன் இன்மையும் அவனே என்கிறது புரடசிகரமான கருத்து. ஆழ்வார் இறுதி அடியில் கூறும் ஐந்து, நாம் முதல் பாட்டில் விரிவாக உரைத்த ஐந்து குணங்களான ஒலி, தொடுகை,உருவம் சாரம், மணம் திருமழிசை ஆழ்வாரின் ஒரு பாடலில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றன ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே ஒரு கோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய்ஐங் கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும் ஒருவா ரணத்தின் தாள்கள் உருகோட்டன் பொடும்வணங்கி யோவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் திருகுஒட்டும் அயன் திருமால் செல்வமும்ஒன் றோ, என்னச் செய்யும் தேவே! - சிவஞானசித்தியார் இன்புற வழிகள் ஏழு ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களங்கொண்ட வெல்வேந்தே – சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையத்துள் ஐந்துவென்(று) ஆறகற்றி ஏழ்கடிந்(து) இன்புற்(று) இரு. - புறப்பொருள் வெண்பாமாலை காளமேகப் புலவர் பாடல் ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு ஏழெட்டு ஒன்பது பத்துப் பதினொன்று பன்னி ரண்டுபதின் மூன்றுபதி நான்குபதி னைந்துபதி னாறுபதி னேழுபதி னெட்டு. ஒன்று கொலாம் என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகம் (4.18), விடம் தீர்த்த பதிகம்அதே வகையில் அமைந்த பதிகம் தான், ஒன்று வெண்பிறை என்று தொடங்கும் இந்த திருக்குறுந்தொகை (5.89) பதிகமும். திருவெழு கூற்றிருக்கை ஓருருவாயினை என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கை பதிகம் (1.128) தேரின் அமைப்பினை உணர்த்தும் எண்ணலங்கார பதிகமாக உள்ளது. For enquiries/feedback: [email protected]
-
122
ஞானத்தேடல் - Ep 122 - கலித்தொகை கூறும் வாழ்வியல் - (Gnanathedal)
கலித்தொகை கூறும் வாழ்வியல் மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல், சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்: 5 ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் 10 செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி 15 நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க! தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; நின்தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே! தோழி கூற்று கலித்தொகை – நெய்தல் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை - நெய்தல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு 'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம் குறி எதிர்ப்பை நீரது உடைத்து. பயன் நோக்காது ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி இசைநோக்கி ஈகின்றார் ஈகை, - வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப! கூலிக்குச் செய்து உண்ணுமாறு. --- பழமொழி நானூறு. ஈகைக்கு உரியவர் ஒன்பதின்மர் என்றும், ஈகைக்கு உரியர் அல்லாதார் ஒன்பதின்மர் என்பதும் "காசிகாண்டம்" கூறுகின்றது. அது வருமாறு.... "மாண்பு உடையாளர், கேண்மையர், தத்தம் வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர், சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர் தீர்ந்தவர், தந்தை, தாய், குரவர், காண்தகும் உதவி புரிந்துளோர் இனையோர் ஒன்பதின்மரும் உளம் களிப்ப, வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று ஒன்றே கோடியாம் என மறை விளம்பும்". "முகன் எதிர் ஒன்றும், பிரியின் மற்றுஒன்றும் மொழிபவர், விழைவுறு தூதர், அகன்ற கேள்வி இலார், அருமருத்துவர்கள், அரும்பொருள் கவருநர், தூர்த்தர், புகல்அரும் தீமை புரிபவர், மல்லர், செருக்கினார், புன்தொழில் தீயோர், இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும் ஈந்திடல் பழுது என இசைப்பார்". 'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; “நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் 'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்; பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். 'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை; அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் - புறநானூறு 3 நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே - நற்றிணை289 நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே - பதிற்றுப்பத்து 63 'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை; நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப 'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்; கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் 'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் "அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்த றலை" நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். இறப்பவே தீய செயினும், தன் நாட்டார் பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!- ஒருவர் பொறை இருவர் நட்பு. அன்னம் அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே, கன்னல் மொழியார்க்கு கற்பாமே, - மன்னுகலை கற்றோர்க்கு அழகு கருணையே, ஆசைமயக்கு அற்றோர்க்கு அழகு பொறையாம். --- நீதிவெண்பா. மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு, ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும் தெறலும் அளியும் உடையோய்.. --- புறநானூறு. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
121
ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் தில்லை தில்லை என்பதே ஒருவகை மலர். தில்லைமரம் மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர் சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும் பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள் கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே. - தனிப்பாடல் திரட்டு குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற்றிணை 195/2,3 தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131 கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. புறநானூறு - 252. அவனே இவன்! கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252 மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல் சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப் பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள் - கலித்தொகை 133 நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம் பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப் போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93 வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94 திருக்கோவையார் திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக அமைந்துள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது. இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்பு’ என்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது: திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’. சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே’. காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71 மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த கண் மணியொன் றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன் சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ. - திருவிளையாடற் புராணம் ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்; ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்; சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே." For enquiries/feedback: [email protected]
-
120
ஞானத்தேடல் - Ep 120 - திருமழிசை ஆழ்வார் - (Gnanathedal)
திருமழிசை ஆழ்வார் திருமழிசையாழ்வார் தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர் தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி திருவாளன், பங்கயச்செல்வி வளர்த்தவர்கள் பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம் பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்) பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்) வேறு பெயர்கள் பக்திசாரர் உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது) குடமூக்கிற் பகவர் - என யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது. திருமழிசையார் திருமழிசைபிரான் திருவெஃகா திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார் கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள். "ஓர் இரவு இருக்கை" என்று அழைக்கப்பட்டு இன்று மருவி "ஓரிக்கை" நான்முகன் திருவந்தாதி நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்முகமாய் அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை, சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர் ஆருமறியார் அவன்பெருமை ஓரும் பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும் அருள்முடிவ தாழியான் பால் இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் நின்றாக நின்னருளென் பாலதே - நன்றாக நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே நீயென்னை யன்றி யிலை திருவேங்கடம் பற்றி நிறைய பாடல்கள் உள்ளது இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை - இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான் திருச்சந்த விருத்தம் பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய், தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய், மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய், நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடு போர் அண்ணால் அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே; இரண்டின் உணரும் வளியும் நீயே; மூன்றின் உணரும் தீயும் நீயே; நான்கின் உணரும் நீரும் நீயே; ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும் மூலமும் அறனும் முதன்மையில் இகந்த காலமும் விசும்பும் காற்றொடு கனலும் - பரிபாடல் (நல்லெழுதியார்) பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடையிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி - மாணிக்கவாசகர் (போற்றித் திருஅகவல்) தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல் தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல், நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன், நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன், புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னித,நின் இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய், ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய், வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய், ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே ஆழ்வார்கள் திருவடிகள் சரணம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
119
ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)
நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை வைணவர்களின் தமிழ் மறை நான்கு வேதங்களின் சாரம் 12 ஆழ்வார்கள் 24 பிரபந்தங்கள் நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை) முதலாழ்வார்கள் அயோநிஜர்கள் பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம் பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்) பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்) பொய்கையாழ்வார் வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, இடராழி நீங்குகவே என்று ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும், ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர், மாயவனை யேமனத்து வை பூதத்தாழ்வார் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு மேலா. வியந்துழாய்க் கண்ணியனே - மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன் அளவன்றால் யானுடைய அன்பு பேயாழ்வார் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், தேனமரும் பூமேல் திரு ஈரத்தமிழ் மொழியால் பக்தி பக்தியால் மொழி வளர்ந்தது ஆழ்வார்கள் திருவடிகள் சரணம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஆழ்வார்கள் #பிரபந்தம் #திவ்யப்பிரபந்தம் #திருமால் #விஷ்ணு #கதை #வரலாறு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #alwar #divyaprabandham #azhwar #story #lifehistory #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]
-
118
ஞானத்தேடல் - Ep 118 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கரந்தை, குளவி, கூதளம் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கரந்தை, குளவி, கூதளம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் எண்ணும் எழுத்தும் எழுத்திற் கனிந்த இயலிசையும் பண்ணும் பரதமும் பாவகை யாவும் படைத்தளித்தெம் கண்ணும் மனமும் கருத்தும் இனிக்கக் கரந்தையினில் நண்ணும் மலரடி நாவார வாழ்த்துதும் நற்றமிழே ! - கரந்தைக் கோவை (தமிழ் வாழ்த்து) கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடியில் 1911ல் நிறுவப்பட்டது. தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913 ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தை தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசு அப்பாடலை தம்ழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம் ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும் சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும் தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் அனைக்கு உரி மரபினது கரந்தை - தொல்காப்பியம் பொருளதிகாரம் நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம். காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5 கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் - ஐங் 26 கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும் - அகம் 226 நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261 இது கொடிப் பூ மான்மடிக் காம்பு ஆவூர் மூலங்கிழார் நறும் பூங் கரந்தை” என்றமைந்த தொடர் இதன் மணத்தைச் சொல்லுகின்றது. . அம்பு கொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11 குளவி நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய என்று புறப்பாடல் (380:7) சுட்டுகிறது. கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக் குளவி மேய்ந்த மந்தி துணையொடு வரைமிசை உகளும் நாட! நீ வரின், கல் அகத்தது எம் ஊரே; அம்பல் சேரி அலர் ஆங்கட்டே ஐங்குறுநூறு 279 குல்லை,குளவி, கூதளம், குவளை, இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் என்ற பாடல் (நற்றிணை, 376:5-6) உணர்த்துகிறது. அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் என்று திருமுருகாற்றுப்படை (வரிகள்: 191-192) சுட்டுகின்றது. நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி அசையா நாற்றம் அசை வளி பகர என்று அகம் (272:7- 9) பாடுகிறது. கூதளம் கூதளி / வெண்டாளி / தாளிக்கொடி கார் எதிர் தண் புனம் காணின் கை வளை நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர் ஆர் கழல்பு உகுவ போல சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/4-8 ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கிறைவா வேதாள கணம் புகழ் வேலவனே வாழி! கரந்தைத் தமிழ்ச்சங்கம் வண்ணமுற வாழி! அதன் வாய்மைச் சிறப்புரைக்கும் கோவையொடு வாழி! தமிழ்நாடு வான்புலவர் வாழ்தமிழர் வாழி! தமிழ் பாடும் வாய். My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
117
ஞானத்தேடல் - Ep 117 - திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை (Gnanathedal)
திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை பூவரு மம னயிற்கரச் செவ்வேள் பொன்னடி யேநினைந் துருகித் தரவரு மருண கிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும் மேவரு நிலையை யுணர்ந்தவ னருளே மெய்த்துணை யாக்கொடுதேடி யாவரும் பெறச்செய் சுப்பிரமணிய வேந்தல்சீ ரியம்புறற்பாற்றோ வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை என்னும் வ.த. சுப்பிரமணிய பிள்ளை, செங்கல்பட்டில், 1846 டிசம்பர் 11ம் நாளன்று தணிகாசலம் பிள்ளை-இலக்குமியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே... திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில், “எம் அருணகிரிநாதன் ஓதும் பதினாராயிரந் திருப்புக ழுமுதமே” -வரகவி மார்க்க சகாய தேவர் (1) 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. (2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. (3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. (4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. (5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன. அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில், "எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார். ஆனால் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது. திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். 1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. - இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான வ.சு. சண்முகம் பிள்ளை மற்றும் வ.சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். - அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஸ்ரீ செங்கல்வராயன், பணியை முன்னெடுத்துச் சென்று மேலும் பல பாடல்களைப் பெற்று, கந்தர் அநுபூதி, அலங்காரம், வகுப்பு உள்ளிட்ட திருப்புகழ்ப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். செங்கல்வராயன் திருப்புகழ் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து, “அருணகிரிநாதர் வரலாறு, நூல் ஆராய்ச்சியும்” என்ற தலைசிறந்த படைப்பை வெளியிட்டார். - இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்’ என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார். - வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார். நூல்கள் எழுதியவை - பிரச்னோத்திர காண்ட வசனம் - கோகர்ணபுராண சாரம் - சுந்தர விளக்கம் (1904) - சிவஸ்தல மஞ்சரி (1905) பதிப்பித்தவை - திருப்புகழ் (இருபதிப்புகள்) - திருவாரூர் புராணம் - வேதாரண்ய புராணம் - மானாமதுரை ஸ்தல புராணம் - திருநீடூர் தல புராணம் - நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை - திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் மதுரை திருப்புகழ் சாமி ஐயர் என்று அழைக்கப்படும் இசைக்கலைஞர் லோகநாத ஐயர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் பாம்பன் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் திருப்புகழ் மணி என்று அழைக்கப்படும் ஸ்ரீ டி. எம். கிருஷ்ணசுவாமி ஐயர். மண்ணாசை என்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி எண்ணாது உனை மறந்தேயிருதேன் இனியாகிலும் என் அண்ணா உன்றன் பொன்னடிக் கமலம் வந்தடையும் வண்ணம் தண்ணார் அருள்புரியாய் தணிகாசல சண்முகனே. For enquiries/feedback: [email protected]
-
116
ஞானத்தேடல் - Ep 116 - நடராஜப் பத்து (Gnanathedal)
நடராஜப் பத்து - சிறுமணவூர் முனிசாமி முதலியார் நடராஜப் பத்து. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (1) மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (2) கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா? ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (3) பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (4) நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (5) வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (6) அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (7) காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்தபொருளிலை யென்றனோ தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வாணவரைப் பழித்திட்டனோ வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ எல்லாமும் பொறுத்தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (8)
-
115
ஞானத்தேடல் - Ep115 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருந்தி, அதிரல், சண்பகம் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் செருந்தி ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப், போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற, – கலித்தொகை எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங்குறுநூறு இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன் பொருந்தும் மலரன்ன என் கண் அழப் பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே - ஐங்குறுநூறு 18 அதிரல் அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99 உலகம் படைத்த காலை தலைவ! மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே முதிரா வேனில் எதிரிய அதிரல், பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய 5 செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. - நற்றிணை 337 புனலிக்கொடி, புனலிப் பூ, புனலி , புனலி (புனல் + இ), மென்கொடி’, ‘பைங்கொடி, மோசி மல்லிகையும். முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3 குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1 “பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன வரிமென் முகைய நுண்கொடி அதிரல்;”-அகநா. 391 : 1-2 .... கோங்கின் எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி காண் யானை கவளங் கொள்ளும் அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார் கெஞ்சுண் மொழிப மன்னே-தோழி”-அகநா. 157 அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் - பரி 20/81 சண்பகம் செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம், குக்கில். குயில் பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும் வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம்; காண்குவம்; வம்மோ, பூங் கணோயே! ஐங்குறுநூறு 469 கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, அகநானூறு 63 தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து, குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால் தப்பியார் அட்ட களத்து - களவழி நாற்பது 5 பெருந்தண் சண்பகம். பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு - திரு 27 பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் - கலி 150/21 அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/20-22 தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே. ‘களிப்புறு நறுமணமரம்’ வண்டுணா செண்பகம் ; வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் - பரிபாடல் பன்னிய பாரம் பார்ம கட் கொழியப் பாரத மாபெரும் போரில், மன்னர்கள் மடிய மணி நெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன், துன்னுமா தவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய், தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி - பாசுரம் 1756 கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே” என்று ஆண்டாள் (நாச்சியார் திருமொழி).
-
114
ஞானத்தேடல் - Ep114 - கம்பரின் சமயோசிதம் - (Gnanathedal)
கம்பரின் சமயோசிதம் கரைக்கு வடக்கிருக்கும் காளிகாள் அம்மைக்கு அரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய் உரைத்தும் மறைக்க வறியாத வன்பேயைக் குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு. இட்டடி நோவ எடுத்தடிகொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசையக்-கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும். உருகி உடல்உருகி உள்ளீரல் பற்றி எரிவ தவியாதென் செய்வேன்- வரியரவ நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள் நெஞ்சிலே யிட்ட நெருப்பு. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #கம்பர் #தனிப்பாடல்கள் #கம்பன் #கதை #வரலாறு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kambar #kambaramayanam #thanippadal #story #lifehistory #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]
-
113
ஞானத்தேடல் - Ep113 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - போங்கம், திலகம், பாதிரி - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, போங்கம் நிவந்து சேர் போங்கி - பரிபாடல் திரட்டு திலகம் மஞ்சாடி மரம் / திலகமரம் நிறுத்தல் அளவை - ‘மஞ்சாடி’. இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றி மணி எடை கொண்டது. நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - மலை 520 ‘மரவமும், நாகமும், திலகமும், மருதமும்’ என்று கூறப்படுகிறது. திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24 திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - நற் 62 நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண் - பரி 11/99 பாதிரி “கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” - நாலடியார் (139) சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர் சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில் பலா, மாவைப் பாதிரியைப் பார் - ஔவையார் “கோசிக ஆடை பூத்தன பாதிரி” (சீவக சிந்தாமணி, 1650) அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191 கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261 ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! (நற்றிணை 118) “முதிரா வேனில்எதிரிய அதிரல் பராஅரைப் பாதிரி குறுமயிர் மாமலர்” (நற்றிணை, 337:3-4) “வேனிற் பாதிரி கூன்மலர்ரன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை” (குறுந்தொகை, 147:1-2) ……………………………….. வேனில் பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன் உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6 பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரி பாதிரிமரவேர் பாதிரியின் வேர்க்குணந்தான் பார்க்கில்மது மேகம்போம் ஒதுகரப் பான்உழலை யோடிவிடும் - மாதேகேள் கண்ணெரிவு காதெரிவு கையெரிவு காலெரிவும் நிண்ணயமாய்ப் போகு நிசம் பாதிரிப்பூ பித்த சுரந்தணியும் பெண்வசியம் உண்டாகும் முற்றிய தோர் வெட்டை முடியுங்காண் - மெத்தவுமே மாதுரியம் நிங்கா வசன மடவனமே பாதிரியின் பூவையுண்டு பார் பாடலிபுத்திரம் / திருப்பாதிரிப்புலியூர் நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையினம் மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. குறுந்தொகை (படுமரத்து மோசிகீரனார்) பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர் மிகு பாடலிக் குழீஇ கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ அகநானூறு 265 (மாமூலனார்) நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் - அகநானூறு 251 (மாமூலனார்) பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை யெய்தி மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரில் புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய் கெடிலக்கரை நாகரிகம் - பேராசிரியர் புலவர் சுந்தர சண்முகனார் பாதிரிப்பட்டி (கரூர் மாவட்டம்) மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய் பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் - பெரியாழ்வார் திருமொழி (பூச் சூட்டல்) அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99 My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
112
ஞானத்தேடல் - Ep112 - சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன் - (Gnanathedal)
சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன் Sálim Moizuddin Abdul Ali (12 November 1896 – 20 June 1987) was an Indian ornithologist and naturalist. Sometimes referred to as the "Birdman of India", Salim Ali was the first Indian to conduct systematic bird surveys across India and wrote several bird books that popularized ornithology in India. Along with Sidney Dillon Ripley he wrote the landmark ten volume Handbook of the Birds of India and Pakistan வரலாறு எழுதிய முதல் தமிழன் பரணர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர். அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும் பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறிநின் அரண்அடு திகிரி ஏந்திய தோளே - புறநானூறு - 99 புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, - அகநானூறு 142 கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, காணிய செல்லாக் கூகை நாணி, கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10 - அகநானூறு 148 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது அரசன் ஆய்எயினன் சிறந்த குதிரைவீரன். தேர்வீரன் ஞிமிலியைத் தாக்கினான். போர்க்களத்திலையே எயினன் மாண்டுபோனான். எயினன் பறவைகளைப் பாதுகாத்து வந்தவன். அவன் மாண்டுகிடப்பதைப் பிணம் தின்னும் கூகை கண்ணால்கூடக் காண விரும்பவில்லை. எனவே இனி எல்லாப் பகலிலும் வெளியில் வருவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டது. பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம் (தண்டியலங்காரம் 56) ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ, முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப, ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க் காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, எக்கர் இட்ட குப்பை வெண் மணல் வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, நான் மறை முது நூல் முக்கட் செல்வன், ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான் தோய் புரிசைச் சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் - அகநானூறு 181 யாம இரவின் நெடுங் கடை நின்று, தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, ''புள் ஒருங்கு அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, நிழல் செய்து உழறல் காணேன், யான்'' - அகநானூறு 208 நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார். ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது ஆதிமந்தி—ஆட்டநத்தி “முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! – நக்கீரர். என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க ! My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #எயினன் #ஆய்எயினன் #பரணர் #கபிலர் #அகநானூறு #புறநானூறு #தண்டியலங்காரம் #நக்கீரர் #ஔவையார் #திருக்குறள் #திருவள்ளுவர் #அகத்தியர் #குணபாடம் #தேரையர் #பதார்த்தகுணசிந்தாமணி #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Paranar #kabilar #nakkeerar #puranaanooru #aganaanooru #thandialangaram #agathiar #trendingvideo #trending For enquiries/feedback: [email protected]
-
111
ஞானத்தேடல் - Ep 111 - உலகநீதி (Gnanathedal)
உலக நீதி - ஆசிரியர்: உலகநாதர் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே. #1 நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #2 மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம் வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #3 குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #4 வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #5 வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன் திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே. #6 கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம் பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. #7 சேராத இடம் தனிலே சேர வேண்டாம் செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம் வாராரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #8 மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம் கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம் புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #9 மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம் திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே. #10 அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய் தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை ஏதெது செய்வானோ ஏமன்றானே. #11 கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம் கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம் வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம் மாறான குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #12 ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப் பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே. For enquiries/feedback: [email protected]
-
110
ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal)
திருத்தக்க தேவர் அருளிய நரி விருத்தம் அரிய யற்கரி யானை யயர்த்துபோய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே - அப்பர் தேவாரம் (5.100.7) கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரெலி யின்றொழிற் பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம் - சம்பந்தர்தம் தேவாரம் ஆலவாய் பதிகம்(3.39.5) 'கிளிவிருத்தம்' 'எலிவிருத்தம்' என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது. 'வீரசோழியத்தின்' உரை ஆசியர் 'பெருந்தேவனார்' இம்மூன்று விருத்தங்களுடன் 'குண்டலகேசி விருத்தம்' என்பன 'விருத்தங்கள்' என குறித்துள்ளார். இ·து ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும் நூலாகவும் காண்கின்றது. கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளாம் இருதலைப் புற்றி னாக மின்றுணு மிரையா மென்று விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி நரியினார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே - விவேக சிந்தாமணி முதல் 9 பாடல்களில் (2-10) காணும் ஓர் நரிபற்றிய கதை வருமாறு. ஓர் வேடன் தன் புலத்தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட, அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1 நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல், விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில் அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்' எனும் கருத்து பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது. குடற்படு முடையைக் கண்டு குறுநரி தின்று மான்தேர் கடற்படை யியக்கங் கண்டே கள்ளத்தாற் கிடப்ப யாரும் திடற்பகை இன்மையாலே செவிகொய்வான் வால்கொய்வானாய் உடல்புறம் போர்த்த புன்தோல் உரித்திட்டங் கொருவன் கொன்றான் (11) அஞ்சு மின்னதி லோபமில் லோர்களுஞ் செஞ்சு டர்நெடு வேற்றிரி யோதனன் பஞ்ச வர்க்குமண் பாகங் கொடாமலே துஞ்சி னான்கிளை தன்னொடு மென்பவே (22) குட்ட நீர்த்துறைப் போம்வழிக் கூனியை ஒட்ட லன்புன லுய்த்தவக் காகுத்தன் திட்டை வேண்டிய தேர்ச்சியில் வாணிகன் பட்ட தெய்துவ பற்றுளத் தார்களே (23) My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #கதைகள் #திருத்தக்கதேவர் #நரிவிருத்தம் #கிளிவிருத்தம் #எலிவிருத்தம் #குண்டலகேசிவிருத்தம் #சீவகசிந்தாமணி #விவேகசிந்தாமணி #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Stories #VivekaChinthamani #thiruthakkadevar #seevagachintamani #narivirutham #kilivirutham #elivirutham #trending #popular #literature For enquiries/feedback: [email protected]
-
109
ஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal)
நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Arunagirinathar sang Thiruppugazh praising Lord Murugan of Thiruthanigai malai. It is believed that those who sing this get their illness cured. Let's explore about it in this episode References திருப்புகழ் 243 தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான ......... பாடல் ......... இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #அருணகிரிநாதர் #திருப்புகழ் #திருத்தணிகை #முருகன் #பெரியாழ்வார் #நோய்_தீர்க்கும்_பாடல்கள் #பாசுரங்கள் #பிரபந்தம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Periazhwar #azhwar #prabandham #arunagirinathar #thiruppugazh #thiruthani #thiruthanimurugantemple #illness #cure #murugan For enquiries/feedback: [email protected]
-
108
ஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal)
அனுபவ ஞானம் மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும் தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும் திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்காம்பல் எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார். தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல் ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும் கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #விவேகசிந்தாமணி #அனுபவம் #அனுபவஞானம் #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #VivekaChinthamani #thirukkural #thiruvalluvar #experience #trending #trend #topchannel #tamilliterature #motivation #moral #virtues #trending For enquiries/feedback: [email protected]
-
107
ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, குருகிலை ‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ - நச்சினார்க்கினியர். அஞ்சனம் காயா மலர குருகிலை ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொள்” தண்கழற் கோடல் துடுப்(பு) ஈனக் காதலர் வந்தார் திகழ்நின் தோள். - திணைமொழி ஐம்பது (21) அருவி அதிரக் குருகிலை பூப்பத் தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல் பெரிய மலர்ந்த(து)இக் கார். - திணைமொழி ஐம்பது (30) முருகியம்போல் வானம் முழங்கி இரங்க குருகிலை பூத்தன கானம்.... ....” கார் நாற்பது 27 மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். - நான்மணிக்கடிகை மருதம் கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' (மருது பாண்டியர்கள்) Pride of India சிங்களத்திலும் - ‘மருது’ Queen’s Flower உழவர்க்கு நிழல் ………………………..ஓங்கிய பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, மருதமர நிழல், எருதொடு வதியும் அகநானூறு (37) பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232 மருத மாலை பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28 “பழனப் பல் புள் இரிய, கழனி வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்” - நற்றிணை வரிகள் (350:2-3) சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரிபாடல் 7-83 தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை ஆல் - பரிபாடல் 22-45 திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை - கலித்தொகை வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் - அகநானூறு 36 மருதூா்கள் மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும் போற்றப்படுகிறது. தலைமருது - வட மருதூா் - ஸ்ரீ சைலம் இடைமருது - தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர் கடைமருது - திருநெல்வேலி - திருப்புடை மருதூா் 10) மதுரை மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது. செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த் துறையணிந் தன்றவ ரூரே – குறுந்தொகை 50 11) மருத்துவ மரம் ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங் காதமென வோடக் கடத்துங்காண் - போத மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின் தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று - பதார்த்த குண சிந்தாமணி 12) மருதமலை முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான் உருகு மன்பர்க் குதவி செய்யவே பெருகு காமர்ப் பிறங்க லாயினான் அருகின் வேலு மருத மாயதே. மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின் மருதம் பாட வாய்ந்த வேள்வரை மருத நின்ற மறுவில் காடிசியான் மருத வோங்அ லென்ன மன்னுமே. பாம்பாட்டிச் சித்தர் கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார் கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூடக் கானவர் மருதம் பாட அகவர் நீனிற முல்லைப் ப·றிணை நுவலக் – பொருநராற்றுப்படை (218-221) My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
-
106
ஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal)
திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம் திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். வேம்பத்தூராருள் ஒருவராகிய பெருமாளையர் நெல்லைவருக்கக்கோவை என்னும். பிரபந்தத்தை இயற்றி முடித்தார். மொழிக்கு முதலாகும் உயிரெழுத்துக்களிலும் உயிர் மெய்யெழுத்துக்களிலும் ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி. அகப்பொருட்டுறைகளைாக அமைத்துப்பாடுவது வருக்கக்கோவையாகும். பாம்பலங்காரர் வருக்கக்கோவை, மாறன் வருக்கக்கோவை தேரோடும் வீதியேலாஞ் செங்கயலுஞ் சங்கினமும் நீரோ டூலாவிவரும் நெல்லையே - காரோடும் கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர் காப்பு இச் செய்யுளின் பிற்பகுதியின் பொருள் வருமாறு :-- காரரோடும்-கருநிறம் பரவிய, , கந்தரத்தர்- திருக்கழுத்தை யுடையவரும் அந்தரத்தர்- ஞானாகாயத்தையே இருமேனியாகச்கொண்டவரும் கந்து அரத்தர் - பற்றுக்கோடாசிய செம்மைநிறமுடையவரும், அம் தரத்தர் - திருமுடியில் நீரைத் தாங்கியவரும், கந்தர் அத்தர் - முருகக்கடவுளின் தந்தையாரும், அம் தரத்தர்- அழகிய தகுதியையுடையவருமாகிய சிவபெருமான் காப்பு- காவல் புரிந்து வீற்றிருக்கும் இடம் அந்தரம்-ஆகாயம் கந்து - பற்றுக்கோடு அரத்தம்- சிவப்பு;, அம்- நீர், அழகு; தரம்- தகுதி. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #உவேசா #கதை #பெருமாளையர் #நெல்லை #நெல்லையப்பர் #வருக்கக்கோவை #சிற்றிலக்கியம் #கந்தபுராணம் #கச்சியப்பர் #வரலாறு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #UVeSa #kandhapuranam #Perumal_Iyer #varukkakovai #nellai #nellaiappar #story #lifehistory #history #kachiappar #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]
-
105
ஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal)
கம்பர் கட்டிய சுவர் சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம் கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம் “தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை” தாய் + சீ + பொன்னிக்கு கம்பன் அடிமை போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள் கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்-என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு? "இவ்வுலகில் மன்னவனாக இருப்பவள் நீ ஒருவன் தானோ வளமான நாடாக இருப்பதும் நின் சோணாடு மட்டுந்தானோ. உன்னை அறிந்ததன் பின்போ யாள் தமிழினைக் கற்றுணர்ந்தேன. குரங்கு தாவினால் அதனைத் தாங்காது போகும் மரக்கொய் யாதும் உண்டோ? இல்லையன்றே! அங்ஙனமே, யான் இங்கிருந்தும் அகன்றால், என்னை விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்தனும் உண்டாமோ?" என்பது பாடலின் பொருள். "அங்ஙனம் எவன்தான் ஆதரிக்கிறான் என்று பார்க்கலாம என்று குலோத்துங்கன் சீறினான். கம்பரின் சீற்றமும் அதனால் மிகுதியாயிற்று. தாம் இருப்பது சோழனின் அவை என்பதையும் அவர் மறந்தனர். அவன் ஆதரவில் தாம் இருந்ததையும் மறந்தனர். தம்மை அவமதித்த சோழனின் செயலே அவர்முன் நின்றது. கவியுள்ளம் பொங்கியது. தமிழால் நிறைந்த கம்பரின் நெஞ்ச திலே தணல் மூண்டது. இனிமை சேர்த்துப் பிறரை மகிழ்விக்கும கவிதையிலே சினத்தீ சொல்லுக்குச் சொல் வெளிப்பட்டது. கம்பரின் குரலும் அதற்கேற்ப உயர்ந்தது. அதன் கடுமையும் அவையினரைத் திகைப்படையச் செய்தது. மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ! குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு? என மீண்டும் பாடினார். குரங்குகள் கிளைகளிலே ஆளந்தமாகத் தாவிச் செல்லும் இந்தக கொம்புதான் குரங்கைத் தாங்கும். இது தாங்காது என்பதில்லை. தம்மை அடைந்த குரங்குகளை எல்லாக் கொம்புகளுமே தாங்கத்தான் செய்யும். ஆகவே, குரங்கு ஒன்றுக்கு இந்தக் கொம்பை விட்டுப் போகி றோமே? இனித் தாங்குவது எதுவோ? என்ற கவலையே கிடையாது. காடெல்லாம் மரங்கள். அந்த மரங்களின் கிளைகளுள் எதுவுமே அதனைத் தாங்கும். வேந்தரும் பிறகும் தன்னைப் போற்றி வழிபட்டு நிற்கப் பெரும் நதியோடு திகழும் தள்ளைக், கம்பர், பாடிப் பரிசில் பெற்றே நிலையினர் பழித்ததைக் கேடக நேர்ந்தது பற்றி அவன் எழுதினாள். என்றும், அவனுடைய எதிரேயே அங்கனம் எதிர்ப் இச்சுப் பேசினார் எவரும் அல்லர் என்பதனை நினைந்தபோது, ஆத்திரம் மேலும் பெரிதாயிற்று. திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் நினைவு கூனுக்கு அப்போது வந்தது." 'கம்பரே! என்னை விட்டால் சடையப்பரின் ஆதரவு இருக்கிறதென்ற செருக்குத்தானே உம்மை இப்படிப் பேச வைத்தது. சடையப்பர் என் ஆணைக்கு உடபடடவர். அவர்க்கு இப்போதே தகவல் தெரிவித்து விடுகின்றேன். அவரிடமிருந்து சிறு உதவியும் இனிக் கிடையாதபடி செய்து விடுகின்றேன்" என்றான். சோழவின் பேச்சைக் கேட்டதும், கம்பரின் ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. வெண்ணெய்ச் சடையப்பரிடத்திலே கம்பருக்கு அளவுகடந்த பெருமதிப்பு உண்டு எனினும், சோழனின் பேச்சு. அவரைச் சிந்திக்கவும் வைத்தது. காதம் இருபத்துநான் கொழியக் காசினியை ஒதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியில் கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீ முனையில் இல்லையோ எங்கட்கு இடம்? மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #கம்பர் #தனிப்பாடல்கள் #கம்பன் #கதை #வரலாறு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kambar #kambaramayanam #thanippadal #story #lifehistory #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]
-
104
ஞானத்தேடல் - Ep104 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, சூரல் வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் இரும் பிடி இரியும் சோலைப் பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே - அகநானூறு 228 கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த- அகநானூறு 357 குரு மயிர்க்கடுவன் சூரல்அம் சிறுகோல் கொண்டு, வியல் அறை மாரி மொக்குள் புடைக்கும்” என்று ஐங்குறுநூறு (275 : 1-3) பாடுகிறது. சூரல்–பிரம்பு சூரையாவது பிரம்பு என்றும் உரை காண்பர். தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும் மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம் மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும் பூவைச்சேர் ஆவாரம் பூ -அகத்தியர் குணவாகடம் சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே யாவாரை மூலியது. - தேரையர் குண பாடம் ஆவிரைக் கொன்றை நல்ல அழகிய , பூகம் , மத்தம் மேவிய மருதின் தோலும் விரைந்துடன் ஒக்கக் கூட்டிப் பூவினில் சிறந்த மாதே புதியதோர் தேனி லுண்ண காவிரி நீரும் வற்றிக் கடல்களும் , சுவறு , மன்றே . - மேகவாகடத்திரட்டு சிறுபீளை: நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை பொரடரி ரக்த கணம் போக்குங்காண் வாரிறுக்கும் பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிது கற்பேதி யறி" சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு காட்டிற் கழன்றோடுங்காண்" ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ஆவிரை ஆவாரம்பூ பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பல்நூல் மாலை பனைபடு கலிமா” - குறுந்தொகைப் பாடலால் (173) பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18 சிறுபூளை கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை - அகப்பாடல்கள் (217, 297) கூறுகின்றன. நெடுங்குரல் பூளைப் பூவின்அன்ன, குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி - பெரும்பாணாற்றுப்படை செந்நாய் எடுத்தலின், வளிமுனைப் பூளையின் ஒய்யென்று அலறிய,கெடுமான் இனநிரை - அகப்பாடல் (199) சுட்டுகிறது. பூளை நீடிய வெருவரு பறந்தலை”-புறநா. 23 : 20 அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை 20 வேளை வெண்பூக் கறிக்கும் ஆளி லத்த மாகிய காடே. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #ஆவிரை #சூரல் #பூளை #அகநானூறு #புறநானூறு #பெரும்பாணாற்றுப்படை #மேகவாகடத்திரட்டு #அகத்தியர் #குணபாடம் #தேரையர் #பதார்த்தகுணசிந்தாமணி #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #aavirai #aavaarai #sooral #poolai #flowers #puranaanooru #aganaanooru #padharthagunachinthamani #agathiar #theraiyar #perumpaanaatrupadai #nature #trendingvideo #trending For enquiries/feedback: [email protected]
-
103
ஞானத்தேடல் - Ep103 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References பசும்பிடி = பச்சிலைப் பூ பசும்பிடி - பச்சிலைமரம். கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப் பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - பதிற்றுப்பத்து (81) பசும்பிடி இளமுகிழ், நெகிழ்த்த வாய் ஆம்பல், கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள், எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை, உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம், பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம் - பரிபாடல் பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் - பரிபாடல் (19). வகுளம் = மகிழம் பூ மகிழம்பூ, இலஞ்சிப்பூ என மணம்கமழும் பெயர்கள். இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான (Mimusops Elengi) மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும். மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன் மலர்சொரி வகுளமு மயங்கிக் முன்னர்த் தேனைச் சொரிந்து, பின்பு காம்பு கழலுதலின் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழும் மயங்கி கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய வோடு தோ்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங் குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய கோடு தையா ஓடு தேர்க்கால் வகுளம் மலர்ந்தன - குடத்துடன் ஆர்கள் அழுந்தத் தைத்து, மேற் சூட்டு வையாத, தேரின் உருளைபோல மகிழ்கள் மலர்ந்தன; மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4). காயாம் பூ காடுகள் அழிந்தாலும் காயா அழியாது காயா - காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர். காசாங்காடு, காசாங்குளம் என் ஊர்ப்பெயர்களும் உள திருமால் தெய்வத்தை காயாம்பூ மேனியன் என்பர். கருவிளை யொண்மலர்காள் காயா மலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர் -நாச்சியார் திருமொழி. கருநனைக் காயாக் கணமயில் அவிழவும், - சிறுபாணாற்றுப்படை (165) புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை மென்மயில் எருத்தின்தோன்றும்” - குறுந்தொகை (183) பூவை - நாகணவாய்ப் புள் (மைனா ) மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ? காயா நறும் போதோ? படர் பூங் குவளை நாள்மலரோ? நீலோற்பலமோ? பானலோ?- இடர்சேர் மடவார் உயிர் உண்பது யாதோ?’ என்று தளர்வாள்முன். மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே! திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இலஞ்சி கிராமம். இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை கோட்டைச் சுவர், மதில், மகிழமரம் எனப்பல பொருள்படும். இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே. இலஞ்சி வேலவர் பிள்ளைத்தமிழ் - கவிராச பண்டாரத்தையா. காலம் 19ம் நூற்றாண்டு. தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன் செங்கீரை ஆடிஅருளே கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக கொட்டியருள் சப்பாணியே செந்தமிழ் இலஞ்சிநகர் வந்த கந்தசுவாமி சிறுதேர் உருட்டி அருளே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #பசும்பிடி #வகுளம் #காயா #முல்லைப்பாட்டு #திருப்புகழ் #இலஞ்சி_வேலவர்_பிள்ளைத்தமிழ் #நற்றிணை #பொருநராற்றுப்படை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #pasumpidi #vagulam #magizham #kaaya #flowers #kurunthogai #kurunthogai #thiruppugazh #arunagirinathar #pathitrupaththu #paripadal #nature #trendingshorts #trending For enquiries/feedback: [email protected]
-
102
ஞானத்தேடல் - Ep 102 - அனுபவ ஞானம் - 6 - (Gnanathedal)
அனுபவ ஞானம் கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப் பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும் சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக வருமெனவே சொல்லி னாலும் நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும் வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே. தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன் அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன் சந்தமுறு வேத நெறி தாண்டின இந்நால்வர் செந்தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர். My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #விவேகசிந்தாமணி #அனுபவம் #அனுபவஞானம் #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #VivekaChinthamani #thirukkural #thiruvalluvar #experience #trending #trend #topchannel #tamilliterature #motivation #moral #virtues #trending For enquiries/feedback: [email protected]
-
101
ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)
வேட்கைப் பத்து மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்; கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே; நூலையோ தைங்குறு நூறு. ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார். "மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. வாழி ஆதன்; வாழி அவினி! நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!' எனவேட் டோளே யாயே; யாமே, நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன். வாழ்க! பாணனும் வாழ்க!' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! விளைக வயலே; வருக இரவலர்!' எனவேட் டோளே! யாயே; யாமே, பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்துறை யூரன் கேண்மை வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே! வாழி ஆதன் வாழி அவினி! பால்பல ஊறுக; பகடு பல சிறக்க! என வேட்டோளே' யாயே; யாமே, வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன்மனை வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!g வாழி ஆதன்; வாழி அவினி! பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக! என வேட்டோளே யாயே; யாமே, பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனி யூரன் மார்பு பழன மாகற்க' எனவேட் டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக! என வேட்டோளே யாயே; யாமே முதலைப் போத்து முழுமீன் ஆரும் தண்துறை யூரன் தேர் எம் முன்கடை நிற்க' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக! என வேட்டோளே, யாயே; யாமே, மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை யூரன் வரைக எந்தையும் கொடுக்க' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!' என வேட் டோளே, யாயே; யாமே, உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும் தன்துறை யூரன் தன்னூர்க் கொண்டனன் செல்க' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! அரசு முறை செய்க; களவு இல்லாகுக!' எனவேட் டோளே, யாயே; யாமே, அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும் பூக்கஞல் ஊரன் சூள், இவண் வாய்ப்பதாக என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!' என வேட் டோளே, யாயே; யாமே, கயலார் நாரை போர்விற் சேக்கும் தண்துறை யூரன் கேண்மை அம்பல் ஆகற்க' என வேட் டேமே. வாழி ஆதன்; வாழி அவினி! மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!' என வேட் டோளே, யாயே; யாமே, பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன் தண்துறை யூரன் தன்னொடு கொண்டனன் செல்க' என வேட்டேமே. வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். –கந்த புராணம் வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே! —சம்பந்தர் தேவாரம் உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஐங்குறுநூறு #வேட்கைப்பத்து #திருக்குறள் #ஊக்கம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #aingurunooru #vetkaipaththu #thirukkural #motivation #dailymotivation #trendingshorts #trending For enquiries/feedback: [email protected]
-
100
Ep100 - ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி
ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி இது ஞானத்தேடலின் 100 வது பதிவு. ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக பதிவுகள் அனுப்பி வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் - Mr. P. Soundara Rajan - Mr. Soundararajan Kidambi - Mr. P. Gopinath - Dr. R. Rajesh - Mr. R. G. Kannan My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #கல்வி #ஞானத்தேடல்100 #நன்றி #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Education #100 #100episodes #thankyou #thanksforwatching #trending #trend #topchannel #tamilliterature For enquiries/feedback: [email protected]
-
99
ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை பயினி, வானி, பல்லிணர்க் குரவம், குரவம் முருகனுக்கு உகந்த மரம். இது குரா, குரவு, குரவம் என்றும் சங்கநூல்களில் அழைக்கப்படுகின்றது. குராமரத்தின் பெயரால் ‘குராப்பள்ளி’ என்றொரு ஊரும் உண்டு (திருவிடைக்கழி) இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர். சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே திருவாசகம்-அருட்பத்து பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி, குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே? சிறக்கு மாதவ முனிவரர் மகபதி யிருக்கு வேதனு மிமையவர் பரவிய திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 34 கோங்கம் 71 இலவம் குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு புதுமலர்க் கோங்கம் பொன்எனத் தாது ஊழ்ப்ப - கலித்தொகை எரி பூ இலவத்து ஊழ்கழி பன் மலர் – ஐங் 368/1 எரி உரு உறழ இலவம் மலர – கலித்தொகை 33/10 இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொருநராற்றுப்படை 27 முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே - நற்றிணை குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் - அகநானூறு அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3. வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி வெள்ளி நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண், சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன குரவம் பாவை' எனப் பெயர் பெற்றது. பாவை மலர். நறுங் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை - ஐங்குறுநூறு. கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:318 கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் - தேவா-சம்:2781/2 அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழக அருணகிரிநாதர் திருப்புகழ் அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #குரவம் #கோங்கம் #இலவம் #அகநானூறு #ஐங்குறுநூறு #திருப்புகழ் #குறுந்தொகை #நற்றிணை #பொருநராற்றுப்படை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #kuravam #kongam #ilavam #silkcotton #flowers #kurunthogai #aganaanooru #aingurunooru #thiruppugazh #arunagirinathar #pathitrupaththu #aingurunooru #nature #trendingshorts #trending For enquiries/feedback: [email protected]
-
98
ஞானத்தேடல் - Ep 98 - கல்வியின் மகத்துவம் - (Power of Education)
கல்வி கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (393) கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு (397) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (398) பாடை ஏறினும் ஏடது கைவிடேல் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (396) கண்டதை கற்க பண்டிதர் ஆவார் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (391) மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிரம் நாட்டல். பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்) நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்! நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்! ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம் வாணி பூசைக் குரியன பேசீர்! My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #கல்வி #ஔவையார் #பாரதியார் #பழமொழி #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Education #avvai #avvaiyar #power #value #thirukkural #thiruvalluvar #experience #trending #trend #topchannel #tamilliterature For enquiries/feedback: [email protected]
-
97
ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)
அனுபவ ஞானம் வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம் தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ? ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ? செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார் வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார் வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர். ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம் ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார் ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப் பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #விவேகசிந்தாமணி #அனுபவம் #அனுபவஞானம் #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #VivekaChinthamani #thirukkural #thiruvalluvar #experience #trending #trend #topchannel #tamilliterature For enquiries/feedback: [email protected]
-
96
ஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal)
பதார்த்த சூடாமணி தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார் இயற்றிய பதார்த்த சூடாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Yaazhpaanam Irupaalai Chettiar has written a text call Padhartha Soodamani. Let's explore it in this episode. References எள்ளெண்ணெய் இவ்வெண்ணெய் காந்தி பித்த மிளைப்புநேத் திரத்தின் ரோகம் கவ்வைசேர் சிரவ லிப்புக் கபாலமுட் டணஞ்சி ரங்கோ டெவ்வமார் கிருமி போக்கு மெழிலுங்கண் ணொளியு முண்டாம் செவ்வையாம் பெலனு முண்டா மென்னவே செப்பி னாரே. அறைக்கீரை, சிறுகீரை அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல் சுறுக்கதாய் நீக்குமென்ப சொல்லுபத் தியத்திற் காகும் வெறுப்பிலா சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில் பொறுக்கலா வெரிவு நீக்கு மாமெனப் புகலு நூலே. பொன்னாங்காணி அதிகமாம் பொன்னாங் காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம் முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பி னிசங்க யம்போம் குதியினில் வாத மோடு கொடியபீ விகையும் போகும் மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம். மாம்பிஞ்சு -பழம் - காய் - பூ -வித்து வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும் பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும் ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம் ஆகமார் கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம். சிற்றரத்தை கூறிடுஞ் சிற்ற ரத்தைக் குனரத்தினைச் சொல்வன் கேண்மோ ஊறுசெய் சன்னி தோஷ் கரமுறு மூன்று தோஷம் மாறுசெய் தொண்டைக் கட்டுஞ் சேடமும் வரட்சி யோடு தேறுபீ னிசமு மல்லாற் றீர்ந்திடுங் கரப்பன் றானும். திப்பிலி திப்பிலிக் குணத்தைக் கேண்மின் றிரிதோஷஞ் சுவாச காசம் சொற்றிடு வாத பித்தஞ் சூலைமார் படைப்புச் சேடம் குற்றமார் கண்ணு ரோகங் குன்மந்தி மந்தங் காசம் பொற்பிலாச் சன்னி யாதி போமெனப் புகலு நூலே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #மருத்துவம் #மருந்து #சித்தர் #சித்தர்கள் #சித்தமருத்துவம் #பதார்த்தசூடாமணி #எள்ளெண்ணெய் #அறைக்கீரை #சிறுகீரை #பொன்னாங்காணி #சிற்றரத்தை #திப்பிலி #இருபாலைச்செட்டியார் #அகத்தியர் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #medicine #siddhamaruthuvam #siddhamedicine #padharthasoodamani #irupaalaichettiar #gingelly #gingellyoil #araikeerai #sirukeerai #agathiar #thippili #sitraraththai For enquiries/feedback: [email protected]
-
95
ஞானத்தேடல் - Ep95 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை, கருவிளை, பயினி, வானி - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை,கருவிளை, பயினி, வானி - (சிறுவானி, பவானி பெயர்க்காரணம்) தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை பயினி, வானி, பல்லிணர்க் குரவம், செருவிளை, கருவிளை யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகும். செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர். செருவிளை செரு = வயல் வயலில் விளையும் மலர் கருவிளை வயல் அல்லாத மேட்டில் பூக்கும் மலர் கருவிளத்தை ‘வெள்ளில்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இலக்கியங்களில் கருவிளை "மணி கண்டன்ன மா நிறக் கருவிளை" - நற்றிணைப் (221 : 1) "கருவிளை முரணிய தண்புதல் பகன்றை" - அகநானூறு (255 : 11) "நீலப்பைம்போது உளரி, புதல பீலி ஒண்பொறிக் கருவிளை" - குறுந்தொகை (110 : 3-4) "காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர்வார் கண்ணின் கருவிளை மலர” - அகநானூறு (294 : 4-5) "கண்ணெனக் கருவிளை மலர" - ஐங்குறுநூறு (464 : 1) இதன் இலை, வேர், மற்றும் விதை முதலியவை மருத்துவக் குணம் கொண்டவை. இது சிறுநீர் பெருக்கும்; குடற்பூச்சிகளைக் கொல்லும்; வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றைக் குணப்படுத்தும் எனக் கூறப்படுகிறது பயினி சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ தோழி - அகநானூறு (356 : 9) "பயில்பூம் பயினி" - பெருங்கதை சொற்றொடரைப் பார்த்தால், பயினிமரத்தில் பூக்கள்அடர்ந்திருக்கும் என அறியலாம். வானி இளஞ்சேரல் இரும்பொறை, "சாந்துவரு வானி நீரினும்,தீம்தண் சாயலன்" புனல்பாய் மகளி ராட வொழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்து வருவானி நீரினும் தீந்தண் சாயலன் மன்ற தானே புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு வருநர் வரையாச் செழும்பல் தாரம் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப - பதிற்றுப்பத்து பெருங்குன்றூர் கிழார் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #செருவிளை #கருவிளை #பயினி #வானி #சங்குப்பூ #காகட்டான் #காக்கணம்பூ #அகநானூறு #பதிற்றுப்பத்து #குறுந்தொகை #நற்றிணை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #seruvilai #karuvilai #payini #vaani #kaakaattan #sangupoo #kaakanam #siruvani #bhavani #river #flowers #kurunthogai #aganaanooru #pathitrupaththu #aingurunooru #nature #trendingshorts #trending For enquiries/feedback: [email protected]
-
94
ஞானத்தேடல் - Ep94 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை குடசம் .குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - சிலப்பதிகாரம் கரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக் குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச் சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு வாதம்அறும் பேதிகட்டும் மாறாத நீரிழிவும் காதம்போம் மேகம் கடக்குங்காண்-தீதடரப் பொங்கு கரப்பானும் போகா இரணமும்போம் இங்குக் குடசப் பாலைக்கே” - அகத்தியர் குணபாடம் திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக் குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப் பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே. திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை எருவை வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .[219 - 224] மலைபடுகடாம் கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம் அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை எருவை கோப்ப எழில் அணி திருவில் வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் கூனி வளைத்த சுனை - பரிபாடல் எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261 எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை - பரிபாடல் 19-77 பலவும் கூறுகவஃ தறியா தோரே அருவி தந்த நாட்குர லெருவை கயனா டியானை கவள மாந்தும் மலைகெழு நாடன் கேண்மை தலைபோ காமைநற் கறிந்தனென் யானே. - குறுந்தொகை 170 கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269 ஐங்குறுநூறு - வேழப் பத்து மனைநடு வயலை வேழஞ் சுற்றும் துறைகேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்லன் என்னுமென் தடமென் தோளே. கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே தோற்கதில்லஎன் தடமென் தோளே. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன வடகரை வேழம் வெண்பூப் பகரும் தண்துறை யூரண் பெண்டிர் துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே கொடிப்பூ வேழம் தீண்டி அயல வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும் மணித்துறை வீரன் மார்பே பனித்துயில் செய்யும் இன்சா யற்றே. மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப் புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞல் ஊரனை யுள்ளிப் பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகின் தன்றும் ஊரன் .புதுவோர் மேவலன் ஆகலின் வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன் பொருந்து மல ரன்னஎன் கண்ணழப் பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில் வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண்பனி யுகுமே. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத் துறைநணி யூரனை உள்ளியென் இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #குடசம் #எருவை #நாணல் #வேழம் #Knowledge For enquiries/feedback: [email protected]
-
93
ஞானத்தேடல் - Ep 93 - அனுபவ ஞானம் - 4 - (Gnanathedal)
அனுபவ ஞானம் அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம் இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம் நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்? பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார் மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில் பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே! திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம் இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #விவேகசிந்தாமணி #அனுபவம் #அனுபவஞானம் #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #VivekaChinthamani #thirukkural #thiruvalluvar #experience #trending #trend #topchannel #tamilliterature For enquiries/feedback: [email protected]
-
92
ஞானத்தேடல் - Ep 92 - இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு - (Gnanathedal)
இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம் தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும் சோரார் உணர்வுடை யார். புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, பாதை, நீர்நிலை, கோயில், நிழல் உள்ள இடம், பசுமந்தை நிற்கிற இடம், சாம்பல் ஆகிய பத்து இடத்திலும் எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஆசாரக்கோவை #சுற்றுப்புறம் #சூழல் #பாதுகாப்பு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Aasarakovai #hygiene #cleanliness #conservation #ecology #trending For enquiries/feedback: [email protected]
-
91
ஞானத்தேடல் - Ep 91 - அனுபவ ஞானம் - 3 - (Gnanathedal)
அனுபவ ஞானம் கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார் இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல் அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா. நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார் தல மெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம் குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம் சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர் அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும் துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #விவேகசிந்தாமணி #அனுபவம் #அனுபவஞானம் #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #VivekaChinthamani #thirukkural #thiruvalluvar #experience For enquiries/feedback: [email protected]
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.
HOSTED BY
ஞானத்தேடல் - Quest for Knowledge
Loading similar podcasts...